அவர் தமது பேரிலே தானே ஆணையிட்டார் HE SWORE BY HIMSELF Jeffersonville Indiana U.S.A. 54-12-12 நான் இங்கு வரும் போதெல்லாம் இந்த இடத்திற்குள் ஊடுருவல் செய்து விட்டோமோ என்ற உணர்வு ஏற்படுகிறது. சகோ.நெவில் மிக அருமையாக உபசரிக்கின்றார். அவர், "இப்பொழுது, சகோ.பிரன்ஹாம், வார்த்தையுடன் பிரசங்க மேடைக்கு வாருங்கள்" என்றும் அதைப் போல ஒன்றைக் கூறி விடுகிறார். ஆகவே, உங்களுக்கு தெரியுமா, நான் சிறிது நேரம் அவர் பேசுவதைக் கேட்க வேண்டும் என்றே நினைக்கின்றேன். இன்றிரவு நான் திரும்ப வந்தவுடன், என்ன செய்யப் போகிறேன் தெரியுமா - நான் அவர் பேசுவதை கேட்கப் போகிறேன். பாருங்கள்? நான்- அதைக் குறித்து முன்னதாகவே உங்களுக்கு நினைப்பூட்டி விடுகிறேன். ஆமென். ஆம். 2. எல்லோரும் நலமாக உணர்கிறீர்கள் என்று நான் நம்புகிறேன். நீங்கள் நலமாகவே காணப்படுகிறீர்கள், அதற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கின்றேன். 3. இப்பொழுது, வெளியே சிதோஷணம் மோசமாக உள்ளது, ஆனால் இங்கே உள்ளே கூடாரத்தில் வெப்பமாக இருக்கின்றது. ஆகவே நாம் இங்கே கூடி இருக்கின்ற இந்த சிறிய கூரைக்கும் மற்றும் அதன் நான்கு சுவர்களுக்காகவும் நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கின்றோம், கர்த்தரை தொழுது கொள்ள மிக அருமையான வெப்பமான இடமாகும். மற்ற இடங்களில் இருப்பவர்கள் கொண்டுள்ள வசதிகளைக்காட்டிலும் ஆராதிக்க இது ஒருக்கால் போதுமான-தாக இல்லாதிருக்கலாம். ஆனால் பரிசுத்த ஆவியானவரின் பிரசன்னத்திற்குத் தான் நாம் எப்போதுமே வருகின்றோம், அவருடைய பிரசன்னத்தை கண்டு கொள்ள, அது தான் நம்முடைய ஆத்துமாவிற்கு கொண்டு வருகின்றதாய் இருக்கின்றது. 4. இப்பொழுது ஒரு சகோதரன், "இது ஒரு மோசமான சீதோஷணமான நாள் ஆகும், சாலை மிகவும் வழுக்குகின்றது" என்று கூறினபடியே உள்ளது. பில்லியும் நானும் அங்கிருந்து வழுக்குகின்ற சாலையில் தொள்ளாயிரம் மைல்கள் காரை ஓட்டி வந்தோம். மணிக்கு சுமார் பன்னிரண்டு, பதினைந்து மைல் வேகத்தில் தான் காரை ஓட்டினோம், ஒரு மணி நேரத்தில் முப்பது மைல் தூரம் பயணம் செய்தோம், பிரயாணம் முழுவதுமாக அப்படியே காரோட்டி வந்து கொண்டிருந்தோம், பள்ளங்களில் பேருந்துகளும் இன்னும் மற்றவைகளும் விழுந்து கிடந்தன. இப்படிப்பட்ட காலங்களில் காரோட்டுவது மிகவும் கடினமான ஒன்று என்று நாம் அறிவோம். 5. ஆகவே இப்பொழுது, ஒரு சிறு குழுவாகிய நீங்கள், நீங்கள் முன்னே செல்ல வேண்டும் என்றால், என்ன, எங்கெல்லாம் நல்ல காரியங்களை உங்களால் கேட்க முடியுமோ, சரி, அது - அது முற்றிலும் சரியானதே. 6. இப்பொழுது, கடந்த மாலை நேரத்தில் நான்- நான் மிகவும் சிறிது வேலையாக மும்முரமாக இருந்தேன். நான் சகோதரன் நெவிலை தொலை பேசியில் அழைத்து அவரிடமாக, அல்லது அவர் மற்றவருக்கு தெரியப் படுத்துவதற்காகவும், இன்னும் பிறவற்றுக்காகவும், நாங்கள் இன்று காலை வந்து வியாதியஸ்தருக்காக ஜெபத்தை வைத்து, இன்னும் பிறவற்றுக்காகவும் வருவோம் என்று கூறும்படிக்கு அழைத்திருப்பேன். ஆனால் அவரை நான் தொடர்பு கொள்ள முடியவில்லை, ஏனென்றால் நான் வந்து சேர்ந்ததிலிருந்து மிக மிக வேலையாக மும்முரமாக இருந்தேன். இப்பொழுது மறுபடியும் சிக்காகோவிற்கு புறப்பட வேண்டும், அங்கு கூட்டங்கள் உள்ளன. அங்கிருந்து பீனிக்ஸுக்கும் மற்றும் மேற்கு கடற்கரை பகுதிகளுக்கு செல்வோம். 7. நியூயார்க்கிலுள்ள பிங்க்- பிங்காம்டன்- பிங்காம்டன் என்னும் இடத்தில் அற்புதமான கூட்டத்தை நாங்கள் நடத்தினோம். என்னால் அந்த இடத்தின் பெயரை உச்சரிக்க முடியவில்லை. பி -ங்க் -ஆம் -டன், அது பிங்க்... [யாரோ ஒருவர் "பிங்காம்டன்" என்று கூறுகின்றார் - ஆசி.) பிங்காம்டன். ஆம் ஆம். அது ஒரு ... நான் அதை பி-ங்க்-ஆம்-டன் என்று உச்சரிக்க விரும்புகிறேன். பி-ங்-கா-ம்-ட-ன் (அப்படித் தானே பாருங்கள்?) பிங்க்-ஆம்-டன். ஆனால் அவர்கள் அதை பி-ங்-கா-ம் -ட-ன் என்று அழைக்கின்றனர். சகோதரன் ஜானி, நீங்கள் சரியே. ["என் ஜனங்கள் அதற்கு அருகில் இருக்கின்றனர்"-ஆசி.) ஓஹ், அப்படியா? சரி, அது நல்லது தான். இங்கே நாங்கள் எண்டிகாட் அரங்கத்தில் இருந்தோம். அது ஜான்சன் சிட்டியில் எங்குள்ளது என்று உங்களுக்கு தெரியும். 8. நிச்சயமாக அங்கே எங்களுக்கு ஒரு அற்புதமான கூட்டம் எங்களுக்கு இருந்தது; போய் சேர்ந்த உடனே கூட்டத்தை நடத்தினேன், உங்களுக்கு தெரியுமா, எந்த ஒரு ஆயத்தமும் இல்லாமல் சென்றேன். ஒரு நாள் என்னை அவர்கள் வரும்படிக்கு அழைத்தனர். அவ்வளவு தான். செல்ல வேண்டிய இடங்கள் எவ்வளவோ இருந்தது, ஆனாலும் பரிசுத்தாவியானவர் "அங்கே செல்" என்று கூறினார். அது என்னவாயிருந்தது என்று நான் கண்டு கொண்டேன். ஒரு குழுவினரின் மத்தியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, அங்கே அதிக அதிகமாக கத்தோலிக்க மக்களும் இன்னும் பிறரும் இருந்தனர், ஆகவே அக்கூட்டமானது அம்மக்களுக்கு கண் திறக்கப்படுதலின் கூட்டமாக இருந்தது. 9. ஆகவே இப்பொழுது, அவர்கள் மாத்திரம்,.. அங்கே சுமார் ஆறு, ஏழு இரவுகள் அங்கே இருந்தோம், ஆனாலும் அவர்கள் இன்னுமாக பசியுடனும் தாகத்து-டனும் இருக்கின்றனர். அவர்கள் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்து அல்லது ஒரு கூடாரத்தை (tent) அமைத்து, நான் அங்கே வரும்படிக்கு விரும்புகின்றனர். அது எப்படி இருக்கும் என்று உங்களுக்கு தெரியும். ஆகவே நான் அவர்கள் இடமாக, ஒருக்கால் நான் அங்கே வருவேன் அல்லது என் சகோதரர் யாரையாவது அங்கே அனுப்புவேன் என்று கூறினேன், சகோதரன் பீலர் அல்லது அவர்களில் சிலர் அந்த இடத்தில் அவர்களிடமாக ஒரு கூட்டத்தை நடத்த செல்ல விரும்பினவர்களை நான் அனுப்புவேன் என்றேன். 10. ஆம், இப்பொழுது அதிகமாக வழி நடத்தப்படுகிறேன், ஆம்... எப்போதுமே, என் இருதயம் இன்னுமாக அயல் நாடுகளுக்காக பிரயாசப்படுகின்றது, இந்த ஆராதனைக்கு பிறகு ஆப்பிரிக்காவிற்கோ அல்லது இந்தியாவிற்கோ அல்லது ஏதாவதொரு இடத்திற்கு செல்கிறேன் என்பதாக இருக்க நான் ஆசைப்படுகி றேன். அந்த நாட்டின் மக்களுக்காக அந்த பெரிதளவிலான தேவையை நான் பார்க்கையில், ஓ, அவர்கள் எவ்வளவாக ஆசைப்படுகிறனர், சுவிசேஷத்தை பெறும்படிக்கு அவர்கள் எவ்வளவாக ஆவல் கொண்டு இருக்கின்றனர், அவர்களுக்கு அது தேவை..... உங்களுக்கு தெரியும், இங்கே நாம் கொண்டு இருக்கின்ற வித்தியாச பேதங்கள் அவர்களிடமாக இல்லை, உங்களுக்கு தெரியும், நாம் இங்கே சிறு காரியங்களின் பேரில் தர்க்கம் செய்கின்றோம். அவர்களோ - அவர்களோ - அவர்களோ கர்த்தராகிய இயேசுவைக் குறித்து கேட்க மாத்திரம் விரும்புகின்றனர். அந்த விதமான மக்களைத் தான் நமக்கு பிடிக்கும், செய்தியை அதன் எளிமைத் தன்மையுடனே அவர்களிடமாக கொண்டு செல்ல விருப்பம், ஆம், அது அவர்களை... அவர்கள் அதை மிகவும் விரும்புகின்றனர். நீங்கள் என்ன கூறினாலும் சரி, அது கர்த்தரைக் குறித்து என்பதாக இருக்குமென்றால், அதை சீக்கிரமாக தெரிந்து கொள்ள அவர்கள் விரும்புகின்றனர். ஆனால் இங்கே அமெரிக்காவில், நாம் ஒருவருக்கொருவர் வித்தியாசங்களைக் கொண்டு, "வெடிப்பான மயிர்கள், splitting hair" (சிறு சிறு தேவையற்ற காரியங்கள் பேரில் வித்தியாசம் கொள்ளுதல் என்று அர்த்தம் - தமிழாக்கியோன்) என்று நாம் அழைக்கின்றோம் (அது சரி தானே?) 11. இப்பொழுது, இன்னுமாக பார்ப்போமானால், அநேக மேய்ப்பர், பாஸ்டர்கள் இடமிருந்து எனக்கு அநேக தொலைப்பேசி அழைப்புகள் வந்தன, அவர்கள் யாரோ ஒரு சகோதரன் எழுதின ஒரு புத்தகத்தைக்குறித்து கூறிக்கொண்டு இருந்தனர். அது எனக்கு சிறிது வேண்டாத காரியத்தை குறித்து பேசி எனக்கு அசௌகரியத்தை உண்டாக்குவது போல நான் உணர்கிறேன். இப்பொழுது, அதனால் பரவாயில்லை. அது தானே... அந்த சகோதரனை எனக்கு தெரியாது, அவருக்கும் என்னைத் தெரியாது. ஆகவே அதனால் பரவாயில்லை. அவர் ஒரு வேளை ஒரு நல்ல சகோதரனாக இருக்கக்கூடும், சிறிது தவறான புரிந்து கொள்ளுதல் மாத்திரமே, என்று உங்களுக்கு தெரியுமா. உங்களுக்கு தெரியும் மனிதர் எப்படி... உங்களால் சுலபமாக அதை பெற முடியும், உங்களுக்கு தெரியுமா, அது ஒரு விதமான தவறான புரிந்து கொள்ளுதலே. ஆனால் தெய்வீக சுகமளித்தலிலும் மற்றும் வியாதியஸ்தருக்காக ஜெபிப்பதிலும் நாம் விசுவாசம் கொண்டிருக்கின்றோம். ஆம், அந்த சகோதரனும் கூட அப்படியே செய்கின்றார், ஆனால் அவர் தாமே. அது எப்படி என்று உங்களுக்கு தெரியும், அந்த விதமான சிறு தவறான புரிந்து கொள்ளுதல்கள் அவர்களுக்கு ஏற்படுகின்றது. அந்த அருமையான சகோதரனை நான் இது வரை சந்தித்தது இல்லை. நான் அவரிடம் பேசினால், மற்றும் அவரும் என்னுடனே பேசுவாரானால், நாங்கள் ஒருக்கால் ஒருவரையொருவர் நேசிப்போம். உங்களுக்கு புரிகின்றதா? அது எந்த ஒரு வித்தியாசத்தையுமே உண்டாக்காது. 12. இப்பொழுது, சுவிசேஷங்களில் திருப்பி இக்காலையில் வார்த்தையிலிருந்து சிறிது வாசிக்க நாங்கள் விரும்புகிறோம். நீங்கள் வார்த்தையை நேசிக்கிறீர்-களா? அது தாமே - அது தாமே. இப்பொழுது, இங்கே ... 13. கடந்த நான்கு அல்லது ஐந்து மாதங்களாக நாம் 10-ஆம் அதிகாரத்தை தியானித்து கொண்டிருக்கிறோம் என்று நான் நம்புகிறேன். நான் இன்று காலை புறப்படும் போது, "சரி, இப்பொழுது, இக்காலை சகோதரன் நெவில் என்னை அழைத்து ஏதாவது கூறுங்கள் என்று என்னிடம் சொல்வாரானால்? 10-ஆம் அதிகாரத்தில் எங்கு நான் நிறுத்துவது?" என்று நினைத்தேன். நான் சற்று பார்க்க ஆரம்பித்தேன் - நான் பார்த்த போது, 10-ஆம் அதிகாரம் வரைக்குமாக, அநேக மாதங்கள் கழித்து நான் முடித்திருந்தேன். 14. ஆகவே அப்போது, "சரி, 11 ஆம் அதிகாரத்திலிருந்து ஆரம்பிக்கலாம்" என்று நினைத்தேன். நான் அதை வாசிக்க ஆரம்பித்த போது, அது எனது விருப்பத்-திற்குரிய பகுதிகளில் அது ஒன்றாகும் என்று உங்களுக்கு தெரியும். அப்போது நான் "இல்லை, இதிலிருந்து நான் ஆரம்பிக்க மாட்டேன், ஏனென்றால் நான் ஆரம்பித்தால் நான் அதிலே அப்படியே இரண்டு வருடங்களுக்கு இருந்து விடுவேன்" என்றேன். அந்த விசுவாச வீரர்களில் ஒவ்வொருவரும், உங்களுக்கு தெரியும். எப்படியாக நாம்... 15. அந்த 11-ஆம் அதிகாரத்தை எடுத்து, அதை மெய்ப்பித்து விளக்கிக் காண்பிக்க, நாம் பின் சென்று சிருஷ்டிப்பின் துவக்கத்தை எடுத்து அதிலிருந்து நேராக ஒன்றன் பின் ஒன்றாக பார்த்துக் கொண்டே வர வேண்டும்; அதற்கு இரண்டு, மூன்று வாரங்கள் ஆகும். அதற்கு பிறகு ஏனோக்கைக் குறித்து பார்க்க வேண்டும், அவன் எப்படியாக தேவனோடு நடந்தான் என்பதை பார்க்க வேண்டும்; அதை பார்த்து முடிக்க இன்னும் சில வாரங்கள் தேவைப்படும், உங்களுக்கு தெரியுமா, அந்த இரண்டு வசனங்களை எடுத்து தியானித்து முடிக்க அவ்வளவு காலம் தேவைப்படும். அதற்கு பிறகு நோவா வருகின்றான். பிறகு ஆபிரகாம், அதனைத் தொடர்ந்து இன்னுமாக பார்த்துக் கொண்டே வர வேண்டும். ஓ, என்னே. நாம் ஆபிரகாமைக் குறித்து பார்க்க ஆரம்பித்தால், அதை தியானிக்க எவ்வளவு காலம் அதற்கு தேவைப்படும் என்பது கூறுவது மிகவும் கடினமான ஒன்றாகும். நாம் முன்னும் பின்னுமாக தொடர்ந்து ஆராய்ந்து பார்த்து கொண்டேயிருப்போம், இன்னும் முன்னும் பின்னுமாக பார்த்துக் கொண்டே இருக்கும் வரைக்குமாக..... ஆகவே, அதைக் குறித்த ஒரு பொருளை நான் பார்க்க வேண்டுமானால், சில சமயத்தில் ஒரு எழுப்புதல் கூட்டங்களை நாம் வைத்து, அதைக் குறித்த தொடர்ச்சியான பொருள்களின் பேரில் பேசி, 11-ஆம் அதிகாரத்தை தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கலாம். 16. அப்பொழுது நான், "சரி, நாம் சென்று 1-ஆம் அதிகாரத்தை ஆரம்பிக்கலாம், அது மிகவும் அருமையானதாக காணப்படுகின்றதே" என்று நினைத்தேன். எனக்கு எபிரெயர் போதனை மிகவும் பிடிக்கும். ஏனென்றால் அது மிகவும் ஆழமான மற்றும் பெருவளம் நிறைந்த ஒன்றாகும். நீங்கள் எல்லாரும் அதை விரும்புவீர்கள் என்று நான் நிச்சயிக்கிறேன். 17. ஆகவே, நாம் 7-ஆம் அதிகாரத்தில் சிறிது வாசிக்கலாம் என்று நினைத்தேன், ஒருக்கால் இன்று காலையில், நீங்கள் அந்த அதிகாரத்துக்கு திருப்பி வாசிக்கலாம். 18. நாம் நம்முடைய பிரசங்கத்தின் பேரிலே சிறிது அடிப்படையான பின்னணி சூழலை சிறிது பார்க்கலாம். 6-வது அதிகாரத்தில் சில வசனங்களின் பகுதியை நாம் ஆரம்பிப்போம். அது இதனுடன் ஒரு விதத்தில் பொருந்துகின்றது, ஏனென்றால் அது சாலேமின் ராஜாவாகிய மெல்கிசேதேக்கை குறித்தும், அவர் யார் என்றும், அவர் எவ்விதமாக கிறிஸ்துவுக்கு தொடர்புடைய ஒருவராக இருக்கின்றார் என்கின்ற ஒரு மகத்தான பொருளைச்சார்ந்ததாக இருக்கின்றது. மெல்கிசேதேக்கிற்கு தகப்பன் கிடையாது, தாயும் கிடையாது, இவன் நாட்களின் துவக்கமும் ஜீவனின் முடிவும் இல்லாதவன். அவனுக்கு துவக்கம் என்கின்ற ஒன்று இல்லாதிருந்தது. அவன் துவங்கவே இல்லை, அவன் முடிவும் அடையமாட்டான். அவன் தகப்பனும், தாயும் வம்ச வரலாறும் இல்லாதவன். அவன் - அவன் சாலேமின் ராஜாவாயிருந்தான். ஆபிரகாம் சந்தித்த இந்த நபர் யார் என்பதைக் குறித்த ஐயப்பாடே கிடையாது. இப்பொழுது நாம் சிறிது நேரத்திற்கு பிறகு வருவோம். 19. ஆனால் இப்பொழுது, நாம் பக்கங்களை இந்த விதமாக திருப்பியுள்ளோம் (பாருங்கள்?), ஆனால் அதைத் திறக்கக்கூடியவர் ஒருவர் மாத்திரமே; அவர் கர்த்தராகிய இயேசுவே. அது சரி தானே? வானத்திலும் பூமியிலும், பூமியின் கீழும் எவருமே அந்த புத்தகத்தை திறக்கவும் அந்த முத்திரையை கட்ட விழ்க்கவும்(loose) கூடாததாயிருந்தனர் அல்லது பாத்திரராய் இல்லாதிருந்தனர். ஆனால் இயேசு வந்த போதோ, அவர் தேவனுடைய வலது கரத்தில் இருந்த புஸ்தகத்தை எடுத்து, அந்த புஸ்தகத்தை கையில் எடுத்து முத்திரைகளை திறந்து தேவனுடைய வலது பாரிசத்தில் உட்கார்ந்தார். அதை செய்ய முடிந்தவர் ஒருவர் மாத்திரமே இருக்கின்றார். ஆகவே இப்பொழுது, அதைச் செய்ய ஒருவர் மாத்திரமே உண்டென்றால் .. 20. இப்பொழுது, என் கருத்துக்கள் ஒருக்கால் பத்து இலட்சம் மைல்கள் தூரத்திற்கு அப்பால் இருக்கும். வேறு யாரோ ஒருவரின் கருத்துக்களும் கூட மிகவும் அப்பால் அகன்று செல்லும். ஆனால் அவர் அதை எடுக்க மாத்திரம் செய்து, இக்காலையில் அவருடைய கருத்துக்கள் மாத்திரமே நம்முடைய கருத்துகளாக இருக்கும்படிக்குச் செய்வார் என்று நாம் நம்புவோம். அது சரியா? ஆகவே அப்படியானால் நம்மால் முடிந்த வரைக்கும் சிறந்ததை செய்வோம், நானும் எனக்கு தெரிந்த விதத்தில் சிறந்த முறையில் அதை விளக்குவேனாக. 21. இப்பொழுது நான் இதை முன்னமே ஆராய்ந்து பிரசங்கிக்கவில்லை. ஆம் நிச்சயமாக, நாங்கள் இங்கே மேலே வந்து வார்த்தையை திறக்கின்றோம். அவ்வளவு தான். 22. வழக்கமாக, நாங்கள் இங்கே வந்து, இந்த வேத பாடங்களை எடுத்து, ஒரு வாரத்துக்கு அதைக் குறித்து முன்னதாக ஆராய்ந்து பார்ப்போம், ஒரு தொடர் பிரசங்கம் நடத்துவோம். வேத வசனங்களின்படியே எல்லாவற்றைக் குறித்தும் வேதவசனங்களை நான் எடுத்து வைத்திருப்பேன், என்னால் முடிந்த வரைக்குமாக ஒவ்வொரு சிறு காரியத்துக்கும் வசனம் வைத்திருப்பேன் வாரம் முழுவதும் நான் அறைக்குள்ளாக சென்று, அங்கே அமர்ந்து, அதை ஆராய்ந்து வார்த்தையின் பேரில் அதை தியானிப்பேன். பரிசுத்த ஆவியானவர் எனக்கு ஒன்றை கொடுக்கும் போது, நான் அதை எழுதிக்கொள்வேன். பிறகு நான் உட்கார்ந்து மறுபடியுமாக அதைக்குறித்து சிந்தித்து, அவர் என்ன எல்லாம் கூறுகிறாரோ, அதை எழுதி வைத்துக்கொள்வேன். 23. பிறகு ஞாயிற்றுக்கிழமை நான் இங்கே வருவேன், மேஜை முழுவதுமாக காகிதத் தாள்களை வைத்திருப்பேன்... அதைக் கேட்டு எழுதிக் கொள்ள ஒரு அட்டையை நீங்கள் வைத்திருக்க வேண்டும். வாரம் முழுவதுமாக வேத வாக்கியங்களை நீங்கள் பெறும்போது, மக்கள் அதை ஆராய்ந்து, அதை ஒன்று சேர்ப்பர். அதில் அவ்வளவாக... அதில் ஒரு... 24. ஒரு பிரசங்கத்தின் பொருளானது, அது ஒரு அருமையான ஒன்று என்று உங்களுக்கு தெரியும், ஆனால் அதன் பொருத்தமான கருப்பொருள் தான் பிரசங்கத்தின் பொருளை தெளிவாக காண்பிக்கும். உங்களுக்கு புரிகின்றதா? அந்த... அது தான் பிரசங்க பொருளின் கருப்பொருள் ஆகவே இதில் நாம்- நாம் இன்று, நாங்கள் அப்படியே உள்ளே வந்துள்ளோம், எங்கேயாகினும், சிறிது நேரம் பேசுவோம், கர்த்தர் நமக்கு உதவி செய்வார் என்று நம்புகிறோம். இப்பொழுது, நம்முடைய தலைகளை சற்று தாழ்த்துவோம். 25. எங்கள் பரலோகப் பிதாவே, நீர் எங்களுக்கு செய்துள்ள எல்லாவற்றிற்-காகவும் நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம், முக்கியமாக, கர்த்தாவே, எங்கள் பாவங்களை எல்லாம் மன்னித்து, வியாதியையும், வேதனைகளையும் எங்கள் வாசல்களுக்கு புறம்பாக தள்ளி வைத்திருப்பதற்காகவும் நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கின்றோம். அதற்காகவும் மற்றும் இந்த குளிர்கால காலை வேளையில் தேவனுடைய வீட்டில் ஒன்று கூடி உம்மை உம்முடைய பரிசுத்த அலங்காரத்துடனே உம்மை ஆராதிக்க நாங்கள் கொண்டிருக்கும் சிலாக்கியத்திற்காகவும் நாங்கள் மகிழ்ச்சி கொள்கிறோம். ஓ, எவ்வளவாக நாங்கள் உம்மை நேசிக்கிறோம், உம்முடைய சொந்த இரத்தத்தினாலே நீங்கள் தாமே எங்களை கழுவி எங்களை பழுதில்லாதவர்களாக தேவனுக்கு முன்பாக எங்களை வைத்துள்ளீர் என்பதை அறிந்தவர்களாக, குற்றமில்லாதவர்களாக, கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக எங்களை புது சிருஷ்டிகளாக, அந்த நேரம் வரும் படியாக எதிர்நோக்கி காத்திருந்து, அவர் எப்படி இருக்கின்றாரோ அதே விதமாக அவரைக் காணவும், அவருடைய சரீரத்தைப் போலவே நாங்களும் கொண்டிருப்போம் என்று அறிந்துளோம். ஓ, அந்த மணி நேரத்திற்காக நாங்கள் ஏங்கி காத்திருக்கின்றோம். 26. இப்பொழுது, இன்று நாங்கள் ஒன்று கூடியிருக்கையில், நீர் தாமே எங்களுக்கு நியுயார்க்கிற்கு சென்று திரும்ப ஒரு பாதுகாப்பான பயணத்தை எங்களுக்கு அளித்ததற்காக நாங்கள் உமக்கு நன்றியை ஏறெடுக்கிறோம். இங்கே சபையோடு இருந்ததிற்காக உமக்கு நன்றியை ஏறெடுக்கிறோம். காரியங்களில் அநேகத்தில், ஓ, அந்த ஆயிரக்கணக்கான ஆசீர்வாதங்களுக்காக நாங்கள் உமக்கு நன்றி சொல்ல வேண்டியவர்களாக இருக்கின்றோம், ஏனென்றால் அவை எல்லாவற்றையும் நீர் அறிந்திருக்கிறீர், நாங்கள் உமக்கு துதியை ஏறெடுக்க தலை வணங்குகிறோம். 27. பிதாவே, இக்காலையில் வார்த்தையை எடுத்தருளும். அதை இப்பொழுது ஆசீர்வதியும். சபையை ஆசீர்வதியும். பாஸ்டரை ஆசீர்வதியும். தேவனே, அவரோடே இருப்பீராக, ஓ தேவனே, அவரை ஆயிரக்கணக்கானவருக்கு ஆசீர்வாதமாக இருக்கும்படிக்குச் செய்வீராக. பிதாவே, சபையின் டீக்கன்க-ளோடும், தர்மகர்த்தாக்களோடும்(trustees), குழுவினரோடும் மற்றும் சபையார் எல்லாருடனும் நீர் தாமே இருப்பீராக. அங்கே வெளியே சிறு பிள்ளைகளுடன் இருக்கும் ஞாயிறு பள்ளி ஆசிரியர்களோடும் இருப்பீராக. இக்காலையிலே அவர்களுடைய சிறிய இருதயங்களும் தேவனுடைய அன்பால் கொழுந்து விட்டு எரியட்டும். எம்மாவுவிலிருந்து வந்தவர்கள் "வழியிலே அவர் நம் உடனே பேசினபொழுது நம்முடைய இருதயம் நமக்குள்ளே கொழுந்து விட்டு எரியவில்லையா?" என்று கூறினபடியே நாங்களுக்கு புறப்பட்டு செல்லும் போது அதே விதமாக கூறட்டும். அவருடைய நாமத்தில் இதை நாங்கள் கேட்கின்றோம். ஆமென். இப்பொழுது, எபிரெயர் நிருபத்தில்.... 28. இந்த விளக்கின் வெளிச்சத்தின் கீழாக என் கண்கள் கூசுகின்றது, இன்னுமாக நான் ஒரு வாலிபப் பையன் அல்ல. எனக்கு வயதாகிக் கொண்டு இருக்கின்றது. 29. இங்கே சிறிது காலத்திற்கு முன்னர், பனியினால் கண்கள் கூசுவதை போக்க கருப்பு கண்ணாடி ஒன்றை வாங்கிக் கொள்ள நான் சென்று கொண்டு இருந்தேன். நான் ஆப்பிரிக்கா பிரயாணமாக போக வேண்டியிருந்தது, மேலும்.. இல்லை, என்னை மன்னிக்கவும். நான் அங்கே மெய்ன் அல்லது கனடா தேசத்திற்கு வேட்டைக்காக சென்று கொண்டிருந்தேன். அங்கு உள்ள பனியில் இருந்து வரும் ஒளி பிரதிபலிப்பை சமாளிக்க கருப்பு கண்ணாடி அணிய வேண்டும், ஏனென்றால் சூரியன் வெளி வரும் போது, உங்கள் கண்கள் ஏறக்குறைய குருடாகி விடும். உங்கள் கண்கள் மிகவும் பாதிப்படைந்து, உங்கள் தலையை கீழாக தொங்க விட்டு, கீழ் நோக்கிப் பார்த்துக் கொண்டு நடந்து செல்ல வேண்டும், அது மிகவும் சிரமம் வாய்ந்ததாகும். ஆகவே ஒவ்வொரு முறையும் கருப்பு கண்ணாடியை, எந்த விதமான ஒரு குளிரர் ஊட்டும் கண்ணாடியை அணியும் போது, அது எனக்கு மிகுந்த அசௌகரியத்தை உண்டாக்கும். என் தலையை மேலே கூட உயர்த்த முடியாது. எப்போதுமே இந்த விதமாகவே நடந்து செல்வேன். 30. ஆகவே நான் டாக்டர் அடையரை சந்தித்தேன், "எந்த நிற கண்ணாடியை நான் உபயோகிக்க வேண்டும்? நான் பச்சை, நீலம் மற்றும் கறுப்பு நிற கண்ணாடிகளை போட்டு பார்த்து விட்டேன்" என்று கூறினேன். 31. அதற்கு அவர், "பில்லி, அந்த பாதிப்பு கண்ணாடியினால் ஏற்படவில்லை. உங்கள் கண்கள் தான் பிரச்சனை தருகிறது. உங்களுக்கு நாற்பது வயதுக்கு மேலாகிவிட்டது" என்று கூறினார். நான், "ஆம்" என்றேன். "ஆம், உங்கள் கண்கள் வயதாகிக்கொண்டிருக்கின்றது" என்றார். நானோ, அப்படி இல்லை, எனக்கு - எனக்கு நல்ல கண் பார்வை இருக்கின்றதே" என்றேன். அவர் "ஓ!" என்றார். நான் "ஆம், என்னால் நன்றாக பார்க்க முடிகின்றது" என்றேன். 32. ஆகவே அவர் என்னை நதிக்கு அப்பால் இருந்த ஒரு கண் சிகிச்சை நிபுணரிடமாக என் கண்ணை பரிசோதிக்க அனுப்பினார். அது கர்த்தருடைய சித்தம் என்று நான் கண்டேன், ஏனென்றால் அந்த மனிதன் ஒரு பேர் பெற்ற கிறிஸ்தவர் ஆவார், மேலும் அவர், நான் ஆப்பிரிக்காவிற்கு மறுபடியும் செல்லும் போது என்னுடனே அவர் வர விரும்புகிறார். லூயிவில்லில் இருக்கின்ற சிறந்த கண் மருத்துவர்களில் அவரும் ஒருவர், அங்கே இருக்கின்ற பெரிய ஹேபர்ன் கட்டிடத்தில் இருக்கின்றார். அவர் என் கண்களை பரிசோதித்து பார்த்தார், என் கண்கள்... 33. அவர் என்னை ஒரு சிறு அறையில் அழைத்துச் சென்றார், இருட்டாக இருந்த அந்த அறையில் சோதனை செய்யும் கருவி விளக்கு ஒன்றை போட்டார், என் கண்கள் பரிசோதனை செய்யப்படும் முன்னர் கண்களுக்கு ஒரு மருந்தை செலுத்தி என் கண் பாகங்கள் தெளிவாக காணப்படும் நிலைக்கு கண் விரிவடையும்படிக்கு dilate) சிறிது நேரம் உட்காரவைத்தார். அந்த சிறிய சோதனை விளக்கை போட்டார், "20/20" என்றார். அந்த சோதிக்கும் கருவியில் காணப்பட்ட ஒவ்வொரு எழுத்தையும் என் கண் ஒவ்வொன்றைக் கொண்டும் என்னால் தெளிவாக வாசிக்க முடிந்தது. அந்த கருவியை மறுபடியும் அணைத்து போட்டார்; "15/15" என்றார். என்னால் தெளிவாக வாசிக்க முடிந்தது. அவர் மறுபடியுமாக கருவியை வேறு விதமாக அமைத்து விளக்கை போட்டார் "10/10" என்றார். என்னால் என் இரண்டு கண்ணைக் கொண்டும் வாசிக்க முடிந்தது. ஆகவே அது அவ்வளவு தான் சோதனை செய்ய முடியும். எந்த தூரத்திலிருந்தும் என்னால் வாசிக்க முடிந்தது. ஆகவே அப்பொழுது அவர் - அப்பொழுது அவர் கூறினார். 34. பிறகு எனக்கு அந்த சிறிய கருவியை எனக்கு அணிவித்து, ஒரு சிறு அட்டையை எடுத்து அதை என் முகத்திற்கு கிட்டே கொண்டு வந்தார், உடனே நான் "என்னால் வாசிக்க முடியவில்லை" என்று கூறினேன். அப்போது அவர், "நீங்கள் நாற்பது வயதைக் கடந்து விட்டீர்கள்" என்றார். நான் "ஆம்" என்றேன். 35. மேலும் அவர் "அப்படியா. உங்களுக்கு ஆரோக்கியமான கண்கள் உள்ளன. ஆனால் ஒரு மனிதனோ, அல்லது எந்த மானிடனோ நாற்பது வயது கடந்த பிறகு, உங்களுடைய கண் விழியானது தட்டையாக மாறுகின்றது, உங்கள் தலை மயிர் எப்படி வெள்ளையாக மாறுகின்றதோ அதே போன்று தான் இதுவும். அது ஒரு இயற்கையான நிகழவே" என்று கூறினார். மேலும் அவர் "அது தட்டையாக மாறும் போது, அது வழக்கமாக செயல்பட வேண்டிய பிரகாரமாக விரிவடைகிறதில்லை. உங்களுக்கு அருகே எந்த ஒன்றையும் கொண்டு வந்தாலும், உங்கள் கண் விழித்திரை தட்டையாக மாறியதால், கிட்ட பார்வைக்காக அது விரிவடையாமல், அருகில் இருக்கின்றவைகளை உங்களால் பார்க்க முடியாதபடிக்குச் செய்கின்றது. ஆகவே இப்பொழுதோ அல்லது பிறகோ, அருகே இருக்கிறவைகளை பார்க்க, உங்களுக்கு கண் கண்ணாடி வாங்கி, வாசிக்க அதை உபயோகிக்க வேண்டி வரும்" என்றார். நான், "ஓ, என்னே, டாக்டர்!" என்றேன். 36. அதை எனக்கு தூரமாக கொண்டு சென்றால், நன்றாக என்றால் வாசிக்க முடிகின்றது. ஆனால் அதை இவ்விதமாக அருகில் கொண்டு வந்தால், ஓ - ஓ என்னால் முடியவில்லை. நான் சிறிது பின் பக்கம் நகர்ந்து பார்க்க வேண்டி இருந்தது. 37. அதைக் குறித்து சகோதரன் நெவிலிடம் கூறிக் கொண்டிருந்தேன். அதற்கு சகோதரன் நெவில் "ஆம், அதற்கு நீங்கள் உங்களிடமிருந்து தள்ளி நீட்டிக் கொண்டு பார்ப்பீர்கள், உங்கள் கரத்தை நீட்டி அந்த அளவிற்கு வைத்து பார்ப்பீர்கள்" என்றார். 38. ஆகவே, என் அருமையான கண்களுக்கு நன்றியுள்ளவனாக இருக்கிறேன். எந்த இடத்திலும் வெளியே எங்கோ ஒரு இருக்கையின் கீழே இருக்கும் ஒரு முடியை ஏறக்குறைய என்னால் பார்க்க முடிகின்றது. அது மிக தெளிவாக தெரிகின்றது, ஆனாலும் எனக்கு வயதாகிக்கொண்டு இருக்கின்றது. அவ்வளவு தான். 39. ஆகவே எனக்கு வயதாகிக்கொண்டிருக்கின்றது, ஆனால் அங்கே வாலிபமாக இருப்பேன் (உங்களுக்கு புரிகின்றதா?), அது தான் நல்ல ஒரு காரியமாகும். என்றாவது மகிமையான ஒரு நாளில், கர்த்தராகிய இயேசு வருவார், நாம் சிறந்த முறையில் எவ்விதமெல்லாம் இருந்தோமோ, அதே விதமாக நாம் என்றென்றுமாக இருப்போம். மரணம் உள்ளே பிரவேசித்து இதைச் செய்ய ஆரம்பித்தது. நம்முடைய தலையில் உள்ளே முடியை எல்லாம் வெள்ளை-யாக மாற்ற மரணம் உள்ளே வந்தது. மரணம் உள்ளே வந்து உங்கள் முகத்தில் சுருக்கங்களை உண்டாக்கினது. அதனால் உங்களை எடுத்துப் போடத் தான் முடியும், அவ்வளவு தான். பிறகு, திரும்ப அளிக்கப்படுதலிலே, மரணம் உங்களை தொடுவதற்கு முன்னர் எந்த விதத்திலெல்லாம் சிறப்பாக இருந்தீர்களோ, நீங்கள் சுமார் 21, அல்லது 22-வயதில் எப்படியாக இருந்தீர்க-ளோ, உயிர்த்தெழுதலில் அப்படிதான் நீங்கள் இருப்பீர்கள். வேதவசனங்களைக் கொண்டு என்னால் அதை நிரூபிக்க முடியும். என்ன வந்தாலும் அல்லது போனாலும் எப்படியாயினும் எந்த ஒரு வித்தியாசத்தையும் அது உண்டாக்காது, ஏனென்றால் நாம் மறுபடியுமாக புதிதானவர்களாக திரும்பி வரப்போகிறோம் என்பதை அறிவதானது நம்மை மகிழ்ச்சிக்குள்ளாக்குகின்றது. 40. மேலும் இப்பொழுது, எபிரெயர் புத்தகமானது பவுல் எழுதின ஒரு புத்தகம் என்று நாம் விசுவாசிக்கிறோம். அவன் தான் அதை எழுதினான் என்பதற்கான குறிப்புகள் எதுவுமே இல்லை. ஆனால் எபிரெயர் புத்தகத்தை எழுதினது பவுல் என விசுவாசிக்கிறோம், ஏனென்றால் அது எழுதப்பட்டுள்ள விதமானது பவுலினால் எழுதப்பட்டதைப் போலவே உள்ளது. வேதாகம பண்டிதர்கள் அநேகர் அது பவுல் எழுதின ஒன்றே என்று நம்புகின்றனர். ஆனால் எழுதினது யாராக இருந்தாலும் சரி, நிச்சயமாக அது சிறந்த ஒரு வேலைப்பாடாகும் (masterpiece), அது ஆவியினால் ஊக்குவிக்கப்பட்டு எழுதப்பட்ட ஒன்றாகும், அது ஏனைய வேதாகமத்துடன் சரியாக இணைந்து பொருந்துகின்றது. 41. அது எல்லா நிழல்களையும் கொண்டு வருகின்றது. நான் படிப்பறியாத- வனும் சரியாக வாசிக்கத் தெரியாதவனுமாக இருக்கையில், நான் அதை எடுத்து, என்னை வேதாகமத்தில் முன்னடையாளங்களாக வைக்கப்பட்டுள்ள மாதிரிப் படிவங்களை எடுத்து ஆராய்கின்ற(typologist) ஒருவனாக ஆக்கிக் கொண்டு, வார்த்தையின் சத்தியத்தை அறிய அந்த விதமாக செய்ய வேண்டியவனாக இருக்கின்றேன், ஏனென்றால் நான் எப்போதுமே பழைய ஏற்பாட்டை நோக்கிப் பார்ப்பேன். 42. சபை துவக்கப்பட்ட நாளிலிருந்து, நான் முதல் முறையாக ஊழியனாக அபிஷேகிக்கப்பட்ட முதற்கொண்டு, சுமார் இருபது வருடங்களுக்கு முன்னர், இப்போது வரை இருக்கின்ற மக்கள் சிலர் இங்கு உள்ளனர், அவர்களில் 3-அல்லது 4 பேர் உள்ளனர். ஆகவே நான் எப்போதுமே தொடர்ந்து வகை மாதிரிகளை (types) கவனிக்க முயற்சி செய்துகொண்டிருப்பேன். 43. வேறு விதமாகக் கூறுவோமானால், நான் சூரியனை காணாதிருந்து, ஆனால் சந்திரன் என்ன செய்தது என்பதைக்கண்டு, சந்திரன் பூமியின் மீது வெளிச்சத்தை வீசுவதைக்கண்டு, இன்னும் அதைப் போன்று காண்பேனானால், அது வானத்திலிருந்து பிரகாசிப்பதை காண்பேனானால், சூரியன் பிரகாசிக்கும் போது அது என்ன செய்யும் என்பதைக் குறித்ததான சில கருத்துக்கள் எனக்கு தெரியவரும், ஏனென்றால் அது தானே, நான் சந்திரனை பார்த்துள்ளேன்; அது சூரியனின் பிரதிபலிப்பே ஆகும். 44. ஆம், பழைய ஏற்பாட்டில் உள்ள எல்லா பழைய காரியங்களும், நியாயப்பிரமாணத்தின் கீழாக, ஒரு வகை மாதிரியாக, நிழலாக(type) அல்லது சுவிசேஷத்தில் என்ன உள்ளதோ அதன் பிரதிபலிப்பாக இருக்கின்றது. ஆகவே நீங்கள் பழைய ஏற்பாட்டை அறிந்திருப்பீர்களானால், புதிய ஏற்பாடு எப்படியாக உள்ளது என்பதைக் குறித்ததான சிறந்த கருத்துக்களை உங்களால் கொண்டு இருக்க முடியும், ஏனென்றால் ஆகவே இப்பொழுது, இங்கே எபிரெயர் புத்தகத்தில் அதே காரியத்தை தான் பவுல் அளிக்கின்றான். பழைய ஏற்பாடானது வகை மாதிரியாக, நிழலாக இருப்பதையும், புதிய ஏற்பாடானது அந்த வகை மாதிரியின் நிழலாக இருப்பதையும் அவன் காண்பிக்கின்றான். எல்லோரும் அதை விசுவாசிக்கிறீர்களா, அப்படித் தானே? [சபையார் "ஆமென்" என்று கூறுகின்றனர் - ஆசி.) 45. அதனால் தான் நான் தெய்வீக சுகமளித்தலில் அதிகமாக விசுவாசம் வைத்திருக்கின்றேன், ஏனென்றால் பழைய ஏற்பாட்டில் தெய்வீக சுகமளித்த-லானது இருந்தது. அந்த காரியம் தானே நாமோ அதை விட இன்னும் சிறந்ததை கொண்டிருக்கின்றோம். அந்த சிறிய காரியத்தின் கீழாக தெய்வீக சுகமளித்தலை பழைய ஏற்பாடானது பிறப்பித்திருக்குமானால், புதிய ஏற்பாடு ஆனது அதை இன்னும் அதிகமான விதத்தில் தெய்வீகசுகமளித்தலை உடையதாக இருக்கிறது, பழைய ஏற்பாட்டை விட இன்னும் அதிகமான விதத்தில் கொண்டிருக்கின்றது, புதிய ஏற்பாடானது தெய்வீக சுகமளித்தலில் எதை கொண்டிருக்கிறது? ஓ, இன்னும் அதிகமாக அதில் உள்ளது. பாருங்கள்? ஏனென்றால் புதிய ஏற்பாடானது நன்மையானவைகளை பேசுகின்றது (ஆங்கில வேதாகமத்தில் better things, இன்னும் அதிகமான காரியங்களை, என்று உள்ளது - தமிழாக்கியோன்) என்று இங்கு எபிரெயரில் பவுல் கூறுகின்றான். பழைய ஏற்பாடானது பிறப்பித்த ஓ, அது சரி தான். 46. நான் இங்கே இரவு நேரத்தில் வெளியே நடந்து சென்று ஏதாவது ஒன்றை செய்ய, வாசிக்க அல்லது வெளியே ஆராதனைகளை நடத்த, அல்லது ஆம், எனக்கு விருப்பமான இடத்தில் எங்கு வேண்டுமானாலும் செல்வதாகும், அது சந்திரன் ஒளியை தருகிற இரவாக இருக்கலாம். அது மிகவும் அருமையான ஒன்றாகும். அதை நாம் மெச்சுகிறேன். ஆனால் ஒரு சந்திரனால் இவ்வளவு ஒளியை பிரகாசித்து ஒளி வீசக்கூடுமானால், சூரியனால் என்னவெல்லாம் செய்யக்கூடும் பாருங்கள்? அதன் ஒளி மிகவும் பலம் வாய்ந்தது. அந்த சூரிய ஒளி அப்படியே சந்திரனை பின்னால் தள்ளிவிடும்; அவ்வளவு தான். பாருங்கள், சந்திரனால் அங்கே நிற்கவே முடியாது. 47. மேலும் நீங்கள் கவனிப்பீர்களானால், சூரியன் மேலே எழும்பி வரும்போது, சந்திரனால் பிரகாசிக்க முடியாததன் காரணம் என்னவென்றால், சந்திரனும் சூரியனும் ஒன்றொடு ஒன்று கலந்து விடுகின்றது. சந்திரனும் சூரியனும் ஒன்றே ஆகும். உங்களுக்கு அது தெரியுமா? சந்திரன் என்பது காற்றில் மிதந்து கொண்டிருக்கும் ஒரு ஏவுகணையைத் தவிர வேறொன்றுமில்லை. அதன் மீது சூரியன் பிரகாசிக்கின்றது, அதனுடைய ஒளியை சந்திரன் மூலமாக பூமிக்கு பிரதிபலிக்கிறது. சூரியன், சந்திரனின் மூலமாக பிரகாசிக்கின்றது, ஒளியை சந்திரனிற்கு பாய்ச்சி அந்த ஒளியானது பிரதிபலிக்கப்படும்படியாக அப்படியாகச் செய்கின்றது. பாருங்கள்? சூரியன் இந்த பக்கமாக செல்லும் போது, அது தன்னுடைய ஒளியை இங்கே சந்திரன் மீது வீசுகின்றது, சந்திரன் அந்த ஒளியை பூமிக்கு அனுப்புகின்றது. வேறு விதமாகக் கூறுவோமானால், சூரியனும் சந்திரனும் கணவன் மனைவியாகும், கூறப்போனால் சூரியனும் சந்திரனும் இயேசுவும் மற்றும் சபை ஆகும். இயேசு சென்றிருக்கும் போது, அவர் தம்முடைய ஒளியை சபையின் மூலமாக பிரதிபலிக்கின்றார். புரிகின்றதா? ஆகவே சந்திரன் ஒளியை கொடுக்கையில், சூரியன் என்ன செய்யும் என்று நினைக்கிறீர்கள்? 48. ஆகவே நியாயப்பிரமாணம் ஒளியை கொடுத்தது என்றால், நியாயப் பிரமாணம் சுகமளித்தலைக் கொடுத்தது என்றால், சுவிசேஷமானது என்ன எல்லாம் செய்யும்? பாருங்கள்? ஓ, அது வல்லமையுள்ளதாக இருக்கும்! அப்படித்தானே? நிச்சயமாக, அது செய்யும். அவர்கள் செய்தது என்னவென்றால் பாருங்கள், அது ... கவனியுங்கள், இயேசு .... 49. அவர்கள், இஸ்ரவேல் புத்திரர் வனாந்தரத்தில் போய்க்கொண்டிருந்த அந்த பிரயாணத்தில், அவர்கள் தேவனுக்கு எதிராகவும் மோசேக்கும் எதிராக முறுமுறுத்தும், முக்கியத்துவம் தராமல் ஏளனமாகவும் பேசின போது அவர்கள் பாவம் செய்தனர். சர்ப்பங்கள் அங்கே வர ஆரம்பித்து அவர்களை கொத்தவும் மற்றும் கடிக்கவும் செய்தன. அப்பொழுது அவர்கள் மரித்துக் கொண்டிருந்தனர், அவர்கள் கொண்டிருந்த மருந்துகள், பரிகாரங்கள் ஒன்று கூட அவர்களுக்கு உதவவில்லை. மக்கள் ஆயிரக்கணக்கில் மரித்தனர். அப்பொழுது தேவன் கிறிஸ்துவுக்கு வகை மாதிரி, நிழலாக ஒன்றை உண்டாக்கினார். அவர் தாமே, மோசே ஒரு வெண்கல சர்ப்பத்தின் உருவைச் செய்யவும் அதை ஒரு கம்பத்தின் மீது தூக்கி வைக்கவும் கூறினார். இப்பொழுது, அது கிறிஸ்துவுக்கு முன் வகை மாதிரியாக, நிழல் ஆக இருந்தது (அது சரி தானே?), அந்த பாம்பு. 50. இப்பொழுது, சுவிசேஷத்தில் பிள்ளைகளாகிய உங்களில் சிலர் "ஒரு சர்ப்பம் கிறிஸ்துவுக்கு பிரதிநித்துவமாக இருக்குமோ?" என்று யோசிக்கலாம். ஆம், ஏனென்றால் அந்த பாம்பு, அந்த சர்ப்பமானது, ஏற்கெனவே நியாயந்தீர்க்கப்பட்ட பாவத்திற்கு பிரதிநித்துவமாக இருந்தது. 51. ஏதேன் தோட்டத்திலே தேவன் அந்த சர்ப்பத்தை நியாயந்தீர்த்தார். அவர் தாமே- அதற்குரிய நியாயத்தீர்ப்பை அங்கே தேவன் அதற்கு அளித்தார், அதனுடைய கால்களை எடுத்துப் போட்டார், மனித உருவிலிருந்து அது கீழே இருக்கும்படிக்கு அதை கீழாக்கினார், அதன்... ஒரு சம... ஆம், அந்த சர்ப்பமானது ஒரு ஊரும் பிரயாணியாக துவக்கத்தில் இல்லை. வேதாகமம் "அது ஒரு மிருகமென்றும், அது சகல காட்டு ஜீவன்களைப் பார்க்கிலும் தந்திரம் உள்ளதாயிருந்தது" என்று கூறுகின்றது. அந்த சர்ப்பம் ஒரு மனிதனைப் போலவே நடந்தது, எல்லாவற்றையும் செய்தது, "மிகவும் தந்திரம் உள்ளதாயிருந்தது." ஆனால் அவனுக்கிடப்பட்ட சாபமானது அதனை சபித்து, அவனுடைய தந்திரங்களை, அல்லது அதனுடைய அழகை அதனிடமிருந்து எடுத்துப்போட்டு, அதனை பூமியின் மேல் நகரும்படிக்கு கீழே தூக்கிப் போட்டது, அதன் தன் வயிற்றினால் நகரும்படிக்குச் செய்தது. 52. ஆகவே இப்பொழுது, கம்பத்தின் மீது இருந்த அந்த சர்ப்பம், ஏற்கெனவே நியாயந்தீ ர்க்கப்பட்ட பாவத்திற்கு பிரதிநிதித்துவமாக இருக்கின்றது. அது வெண்கலத்தால் செய்யப்பட்டது. இப்பொழுது, வெண்கலம் தெய்வீக நியாயத்தீர்ப்புக்கு அடையாளமாக உள்ளது, பூமிக்குரிய நியாயத்தீர்ப்பு அல்லது மனதளவின் நியாயத்தீர்ப்பு அல்ல, ஆனால் தெய்வீக நியாயத்தீர்ப்பு. பாருங்கள்? அந்த வெண்கல பலிபீடமானது, அது ... பலிகள் எரிக்கப்பட்ட அந்த பலிபீடமானது வெண்கலத்தால் செய்யப்பட்டது. வெண்கல பலிபீடம், அப்படி என்றால் அது தெய்வீகமான ஒன்று என்று அர்த்தமாகும். வெண்கல பலி பீடத்தண்டை தான் தெய்வீக கிரயமானது செலுத்தப்பட்டது. ஆகவே ம... 53. உதாரணத்திற்கு, எலியா வெளியே சென்ற போது, "வானம் வெண்கலம் போன்று காணப்பட்டது" என்றான். அவன் கூறினது... மக்களின் மீது தெய்வீக நியாயத்தீர்ப்பு வந்திருக்கிறது, அவர்கள் ஆகாபின் நாட்களில் தேவனிடமிருந்து புறம்பே சென்றிருந்தனர். கேயாசி சென்று வானம் எப்படி காணப்படுகின்றது என்று காணும்படிக்கு மேல் நோக்கிப் பார்த்தான், பார்த்து விட்டு வந்து "வானம் வெண்கலம் போன்று காணப்படுகின்றது" என்று கூறுகிறான், (பாருங்கள்?), தெய்வீக நியாயத்தீர்ப்பு. 54. வெளிப்படுத்தல்-1, இயேசு தாமே... இல்லை சபையானது, அல்லது, கிறிஸ்துவின் மணவாட்டியானவள் அவர் ஏழு பொன் குத்து விளக்குகளில் நின்று கொண்டிருப்பதை காண்கிறாள், அவருடைய பாதங்கள் வெண்கலத்தால் செய்யப்பட்டிருந்தது. வெண்கலம் என்றால் சபையிலிருந்து உலகத்தின் மேலாக தெய்வீக நியாயத்தீர்ப்பு என்பதாகும். பாருங்கள்? தெய்வீக நியாயத்தீர்ப்பு... 55. அந்த வெண்கல சர்ப்பமானது, நாம் அதைக் குறித்து பேசிக்கொண்டு இருக்கிறோம். இப்பொழுது கவனியுங்கள். அது கம்பத்தின் மேலே உயர்த்தப் பட்டது, கம்பம் சிலுவைக்கு பிரதிநிதித்துவமாக இருந்தது. இப்பொழுது, மூன்று காரியங்கள். இப்பொழுது கவனியுங்கள். அது எந்த நோக்கத்திற்காக மேலே உயர்த்தப்பட்டது? அவர்கள் தாமே அந்த பாம்பின்... இல்லை, அவர்கள் பாவங்கள் மன்னிக்கப்படவும், அவர்களுக்கு ஏற்பட்ட பாம்புக் கடியிலிருந்து குணமாக்கப்படவுமே அது மேல் உயர்த்தப்பட்டது. அது சரியல்லவா? அதை நோக்கிப் பார்த்த எவரும் பிழைத்தனர். அதை நோக்கிப் பார்க்க மறுத்தவர்கள், மரித்தனர். இப்பொழுது, தெய்வீக சுகமளித்தலுடன் ஈடுபடாமல் உங்கள் பாவத்தை கையாள எந்த வழியும் இல்லை, விதமும் இல்லை. உங்களால் முடியாது. தெய்வீக சுகமளித்தல் இல்லாமல் உங்களால் சுவிசேஷத்தை பிரசங்கிக்க முடியாது. உங்களால் அதைச் செய்ய முடியாது. அது சரியே. 56. இப்பொழுது, இங்கே கவனியுங்கள். உதாரணத்திற்கு, இங்கே ஒரு மனிதன் இருந்து, அவன் இங்கே நின்று கொண்டு என்னை கூடுமானவரைக்கு மிகவும் கடினமாக என்னை தன் கையினால் பலமாக அடித்துக் கொண்டிருந்தால், என்னை அடித்துக் கொண்டிருக்கும் அந்த மனிதனை எப்படி துரத்துவது, அவன் அடிப்பதை நிறுத்த அவன் கரத்தை வெட்டி விடவேண்டும் என்பதல்ல. பாருங்கள்? ஒருவே ளை அவன் என்னை தன் கால்களால் உதைக்கின்றான் என்றால், அவன் காலை வெட்டி எடுக்க வேண்டும் என்றல்ல. இப்பொழுது, இருக்கின்ற ஒரே காரியம் என்னவென்றால் அந்த மனிதனின் தலை முதல் முழுவதுமாக அவன் கொல்லப்பட வேண்டும். அது சரி தானே? நீங்கள் தலையை அடித்துக் கொன்றால், நீங்கள் கரத்தை கொல்கிறீர்கள், பாதத்தை கொல்கிறீர்கள், சரீரம் முழுவதையுமே கொன்று போடுகிறீர்கள் (அது சரி தானே?) தலையிலிருந்து கொன்றால் எல்லாமே இறந்து விடும். 57. சரி, இக்காலையிலே நாம் இங்கே இருந்து சந்தித்துக் கொண்டிக்கும் எல்லா பிரச்சனையும் நேரிட காரணமான தலையானது எது? அது எல்லாவற்றிற்கு-மான தலை என்ன? இந்த எல்லா வியாதிகளும், பாவம், அவமானம் எல்லாவற்றையும் பிறப்பித்தது யாது? பாவம் தான் அவை எல்லாவற்றிற்கும் காரணம் ஆகும். பாருங்கள்? பாவம் என்கின்ற ஒன்று இருக்கும் முன்னர்... வியாதி ஒரு தன்மையாகும், பாவத்தை பின் தொடருகின்ற ஒன்றாகும். உங்களிடமாக அதன்... வேறு விதமாக கூறுவோமானால், அது பாவத்திலிருந்து வெளி வந்த ஒன்றாகும். புரிகின்றதா? பாவம் என்கின்ற ஒன்று இருந்ததிற்கு முன்னர், வியாதியோ அல்லது வேறதுவுமே இல்லாது இருந்தது; கவலை இல்லை, எந்த ஒன்றுமே இல்லை, முதிர் வயது இல்லை, கவலையினால் மனம் உடைதல் என்பது இல்லை, வேதனை என்பது இல்லை, உடைந்த குடும்பங்கள் இல்லை, எதுவுமே இல்லை. பாருங்கள்? எல்லாமே பரிபூரணமாக இருந்தது. சரி, எதை எல்லாம் எது பிறப்பித்தது, அதைச் செய்தது பாவம் ஆகும், பா-வ-ம். ஆம், பிறகு வியாதி பாவத்தை பின் தொடர்ந்து வந்தது. உடைந்து போன குடும்பங்கள், அதன் தன்மைகள், அவலட்சணமான வாழ்க்கை வாழுதல், மற்ற எல்லாமே பாவத்திற்கு பிறகு தொடர்ந்து வந்தன. 58. இப்பொழுது, நீங்கள் பாவத்தை கொல்வீர்களானால், அதன் தன்மைகளையும் நீங்கள் கொல்ல வேண்டியவர்களாக இருக்கிறீர்கள், நீங்கள் அப்படி தானே செய்வீர்கள்? உங்களால் தொடக்கூட முடியாது. ஆபத்தான விதத்தில் எந்த ஒரு இலக்கும் இன்றி நீங்கள் இதனுடன் ஈடுபட்டாலொழிய உங்களால் பாவத்துடன் ஆபத்தோடு தொடர்புடையவர்களாக இருக்க முடியாது. நீங்கள் எந்த ஒரு இலக்குமின்றி ஆபத்தான இதனுடன் செயல்படும்போது, அது பாவத்தை பிறப்பிக்கின்றது. புரிகின்றதா? இப்பொழுது, நீங்கள் பாவத்தை கொன்றால், அப்பொழுது நீங்கள் அந்த முழு காரியத்தையுமே கொல்கிறீர்கள். 59. ஆகவே இப்பொழுது- இப்பொழுது நீங்கள் கூறலாம், வியாதி, சில சமயங்களில் நீங்கள் வியாதிப்பட்டு "நான் பாவம் செய்தேனா?" எனலாம். ஓஹ்! நீங்கள் பாவம் செய்தீர்கள் என்பதாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் நீங்கள் நினைவு கொள்ள வேண்டும், வியாதிகளானது பெற்றோரின் அக்கிரமங்கள் பிள்ளைகளின் மேலும், பிள்ளைகளின் பிள்ளைகள் மேலும், மற்றும் அவர்களுடைய பிள்ளைகளின் மேலும் அப்படியே மூன்றாவது நான்காவது தலைமுறை மேலும் வரும். பாருங்கள்? அது தேய்மானம் ஆவது போல, மானிட சரீரங்கள் தேய்மானம் அடைகின்றது, பாவம் மலை போல் குவிகின்றது. ஒழுக்கக்கேட்டினால் ஏற்படுகின்ற பால்வினை நோய்கள், மற்றும் இன்னும் பல அது தொடர்ந்து வருகின்றது. 60. இங்கே சில சமயத்திற்கு முன்னர், ஒரு புகழ்வாய்ந்த மருத்துவர், அவரிடம் பரிசோதனைக்கு வந்த இரண்டு பெண் பிள்ளைகளை பரிசோதித்தார். அந்த பெண் பிள்ளைகளுக்கு கண் பார்வை குறைந்து குருடாகிக் கொண்டிருந்தனர். அவர்கள் பரிசோதித்து பார்த்த போது, பால்வினை நோய் இருந்தது, அப்பெண் பிள்ளைகள் மிகவும் சுத்தமான ஒழுக்கமான ஜீவியம் செய்த பெண் பிள்ளைகள் ஆவர், இங்கே இந்த நகரத்தில் இருந்தனர், அவர்கள் இருவருக்கும் பார்வை மங்கி குருடாகிக் கொண்டிருந்தனர். என்ன செய்வதென்று அவர்-களுக்கு தெரியவில்லை. அவர்களுக்கு கண் கண்ணாடிகளை செய்வித்து, அவர்களுக்கு அணிவித்தனர். பிறகு அவர்களுக்கு இரத்த பரிசோதனை செய்யப்பட்டது, அப்பொழுது அந்நோய் இருப்பது கண்டு பிக்கப்பட்டது. உடனே காரணம் என்ன என்று ஆராய்ந்து பார்த்த போது, அந்த பெண் பிள்ளைகளின் முப்பாட்டனாருக்கு இருந்தது என்று கண்டு பிடித்தனர். பாருங்கள்? 61. இப்பொழுது, பாருங்கள், அது தொடர்ந்து சந்ததி சந்ததியாக அதனூடாக வருகின்றது. அது தொடர்ந்து வழி வழியாக வருகின்றது. ஆம், ஆகவே நீங்கள் பாவத்தை எதிர் கொள்ளும் போது, அதே நேரத்தில் வியாதியையும் நீங்கள் எதிர்கொள்கிறீர்கள். 62. இப்பொழுது, மோசே சர்ப்பத்தை மேலே உயர்த்தினான். பரிசுத்த யோவான் 3-ல் இயேசு "சர்ப்பமானது மோசேயினால் வனாந்தரத்திலே உயர்த்தப் பட்டது போல மனுஷகுமாரனும் உயர்த்தப்படவேண்டும்" என்று கூறினார். வேறு விதமாகக் கூறுவோமானால், அது சூரியனுக்கு, சந்திரன் போல. வருகின்ற ஒன்றுக்கு நிழலாக அது இருந்தது. சரி, வெண்கல சர்ப்பம் உயர்த்த ப்பட்டதில் தெய்வீக சுகமளித்தல் இருக்குமானால், இயேசு கிறிஸ்து உயர்த்தப் பட்டதில் அது இருந்து தான் ஆகவேண்டும். ஏனென்றால், தெய்வீக நியாயத் தீர்ப்பில், தேவனுடைய தெய்வீக நியாயத்தீர்ப்பில் பாவமானது ஏற்கெனவே இயேசு கிறிஸ்துவுக்குள்ளாக நியாயந்தீர்க்கப்பட்டது என்பதற்கான பிரதிபலிப்-பாக அந்த வெண்கல சர்ப்பமானது இருந்தது. அது அந்த உலகமானது அவரை நியாயந்தீர்த்து அவரை கொலை செய்தது. 63. ஆகவே தேவனுடைய தெய்வீக நியாயத்தீர்ப்பானது ஒரு குற்றமும் புரியாத அந்த அப்பாவி நபரை, பாவமாக்கி (ஆமென்) அவரை அங்கே நியாயந்தீர்த்தது. உங்களுக்கு புரிகின்றதா? நம்முடைய - நம்முடைய தெய்வீக நியாயத்தீர்ப்பை அவர் சுமந்தார், என்னுடைய தண்டனையை அவர் எடுத்துக் கொண்டார், உங்களுடைய பாவங்களை அவர் எடுத்துக்கொண்டார், உங்கள் குற்றங்களை, பாதாளத்திற்கான உங்கள் டிக்கெட்டை, சீட்டை, பாதாளத்தில் வேதனைக்கான உங்கள் டிக்கெட்டை, சீட்டை அவர் தம் மேலேயே அதை எடுத்துக்கொண்டார், நம்முடைய இடத்தை எடுத்து அவர் மரித்தார், என் இடத்திற்கு பதிலாக அவர் நரகத்திற்கு சென்றார். ஆமென். 64. அவர் அங்கே தங்கியிருக்கும்படிக்கு தேவனுக்கு பிரியமில்லை, ஆகவே நம்முடைய பரிசுத்தமாக்குதலுக்காக அவரை மூன்றாம் நாளிலே உயிரோடு எழுப்பினார். ஆகவே அதை நோக்கிப்பார்த்து, "நான்... நான் நீதிமானாக்கப்பட்டு உள்ளேன் என்று தேவன் ஆக்கப்பூர்வமாக நிருபித்திருக்கின்றார், ஏனென்றால் அவர் தம்முடைய குமாரனாகிய கிறிஸ்து இயேசுவை உயிரோடெழுப்பினார். ஆதலால், நான் அவருடனேகூட உயிரோடெழுந்து உன்னதங்களிலே அவர் உடனே உட்கார்ந்திருக்கிறேன்" என்று கூறுவேன். அது காரியத்தை முற்று பெறச்செய்து விட்டது. பாருங்கள்? அவர் நீதிமானாக்கினார். நம்முடைய நீதிமானாக்கப்படுதலுக்காக அவர் உயிர்த்தெழுந்தார். அவர் உயிரோடிருந்து என்னை நேசித்தார், மரித்து என்னை இரட்சித்தார், அடக்கம் பண்ணப்பட்டு, அவர் என் பாவங்களை சுமந்து தொலைவில் அகற்றினார். உயிர்த்து, இலவசமாக என்னை என்றென்றைக்குமாக நீதிமானக்குகிறார். ஓர் நாளில் அவர் வருவார், ஓ அது மகிமையான நாளாயிருக்கும். அது தான். அங்கு நிற்கிறீர்கள். எங்கே இருக்கிறது: என் நம்பிக்கையானது கட்டப்பட்டுள்ளது, இயேசுவின் இரத்தம் மற்றும் நீதியின் மேலுமே. அதற்கு கீழாக வேறெதின் மீதும் இல்லை; என் ஆத்துமாவைச் சுற்றிலும் உள்ள எல்லாமே விழுந்து கொண்டிருந்தாலும், அப்பொழுது அவரே என் நம்பிக்கையும் என் ஆதரவுமானவராக இருக்கின்றார். ஏனென்றால் நான் கிறிஸ்துவாகிய ஸ்திரமான கன்மலையில் மேல் நிற்கின்றேன்; மற்ற எல்லா இடங்களும் அமிழ்ந்து கொண்டிருக்கும் மணலாகும், மற்ற எல்லா இடங்களும் அமிழ்ந்து கொண்டிருக்கும் மணலாகும் 65. உங்களுக்கு புரிகின்றதா. சரியாக அங்கே தான் நம்முடைய நம்பிக்கையும் இளைப்பாறிக் கொண்டு இருக்கின்றது. ஓ என்னே! ஓ, அதைக் குறித்து நான் நினைத்துப் பார்க்கையில், அங்கே அதைக் குறித்து நினைக்கையில்... "சர்ப்பமானது மோசேயினால் உயர்த்தப்பட்டது போல," என்று இயேசு கூறினார், அதே நோக்கம், அதே காரியம். "சர்ப்பமானது மோசேயினால் வனாந்தரத்திலே உயர்த்தப்பட்டது போல மனுஷகுமாரனும் உயர்த்தப்பட வேண்டும்" 66. "நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டு பண்ணும் ஆக்கினை அவர் மேல் வந்தது; அவருடைய தழும்பு-களால் குணமானோம். நாமெல்லாரும் ஆடுகளைப் போல வழிதப்பித் திரிந்தோம். தேவனோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர் மேல் விழப்பண்ணினார்." அதோ அக்காரியம் உள்ளது. ஓ, என்னே! அங்கே அப்போது அந்த ஏற்பாட்டில், அந்த பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் நடக்கப் போகிறதை ஒரு தரிசனத்தில் கண்டு, அவர் எருசலேமில் நடந்து கல்வாரிக்கு நடந்து சென்றதையும், சிலுவையின் மீது நம்முடைய பாவங்களை சுமந்ததையும் அவர்கள் கண்டனர். அப்போது அங்கே அவன் "நம்முடைய மீறுதல்களின் நிமித்தம் அவர் காயப்பட்டார்" என்று கூறினான். ஒரு நாளிலே ஏசாயா அதைக்குறித்த காட்சியை பெற்ற போது "நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டார், நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப் பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டு பண்ணும் ஆக்கினை அவர் மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமானோம்" என்று கூறினான். 67. அவர்கள் சென்ற போது, அவர்கள் தங்கள் கல்லறைக்கு சென்ற போது எதைக் காணும்படிக்கு அவர்கள் சென்றனர் என்று நினைக்கிறீர்கள்? "என் மாம்சமும் நம்பிக்கையோடே தங்கியிருக்கும். உம்முடைய பரிசுத்த-வானை அழிவைக் காணவொட்டீர்; அவர் ஆத்துமாவை பாதாளத்தில் விடீர்; உம்முடைய பரிசுத்தவானை அழிவைக் காணவொட்டீர். ஆகையால் என் இருதயமும் களிகூர்ந்தது, என் நாவு பூரித்தது" என்று தாவீது கூறினதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. தாவீது அதை முன் நிழலாக அதை முன்னமே கண்டு களிகூர்ந்தான், ஏனென்றால் கிறிஸ்து மரிக்கும் போது அது காரியத்தை நித்தியம் முதல் நித்தியம் வரைக்குமாக முற்றுப்பெறச் செய்தது என்று தாவீது அறிந்திருந்தான். ஆமென். அப்போது எல்லாம் முடிந்து போயிருக்கும். 68. சுகமளித்தல் இருக்கும் ஒரு சமயமானது இருக்கப் போகின்றது என்று ஏசாயா கூறினான். என்ன! சுகமளிப்பைக் குறித்தா பேசுகிறான்? "நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டார், அவருடைய தழும்புகளால் நாம் குணமானோம்" என்று அவன் கூறினான். 69. அதை வேத வசனங்களிலிருந்து எப்படி உங்களால் எடுத்துப் போட முடியும்? சகோதரனே, உங்களால் அதைச் செய்ய முடியாது. நீங்கள் அதைத் தட்டலாம், அதனுடன் சண்டையிடலாம், மற்றும் எல்லா காரியத்தையும் செய்யலாம், ஆனால் அது தொடர்ந்து அதே விதமாகவே முன்னே போய்க் கொண்டே இருக்கும். காலங்களினூடாக தொடர்ந்து முடிவில்லாமல், யுகங்களினூடாக சென்று கொண்டேயிருக்கும், தொடர்ந்து முன் செல்லும். 70. பவுல் இங்கே பேசுகின்றான், மிக அற்புதமாக இப்பொழுது இங்கே இந்த 6-ஆம் அதிகாரத்தின் முதல் பாகத்தில், இப்பொழுது நாம் அதற்கு திரும்பிச் சென்று அதைச் சிறிது மறுபடியுமாக பார்ப்போம். பரிசுத்த ஆவியானவர் இப்பொழுது கீழே இறங்கி வந்து நம்முடன் இருந்து, நம் மேல் தங்க ஆரம்பிக்கையில், இப்பொழுது நாம் 12-வது, 13-வது வசனத்திலிருந்து ஆரம்பிப்போம், அதில் ஆரம்பித்து சிறிது அடிப்படையான அடித்தளத்தை அமைப்போமாக. 71. 6-ஆம் அதிகாரமானது மன்னிக்கப்பட முடியாத பாவத்தைக் குறித்து பேசுகின்றது. நாம் 6-ம் அதிகாரத்தைக் குறித்து ஆரம்பித்தோம், இப்போது மன்னிக்கப்பட முடியாத பாவத்தைக் குறித்து நாம் பார்த்தோம். மன்னிக்கப்பட முடியாத பாவம் என்ன என்று இங்குள்ள எத்தனைப் பேர் அறிவீர்கள். உங்களுக்கு தெரியுமா, நிச்சயமாக. சுவிசேஷ சத்தியத்தை வேண்டாம் என்று புறக்கணித்தல் என்பதாகும். அது சரியா? அது... 72. "சத்தியத்தை அறியும் அறிவை அடைந்த பின்பு நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ்செய்கிறவர்களாய் இருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொரு பலி இனியிராமல்." சுவிசேஷமானது உங்களுக்கு முன்பாக வெளிப்படையாக (plainly) வைக்கப்பட்டு இருக்கும் போது என்று வேதாகமம் கூறுகின்றது; அதை உங்களால் காணவும் முடிகின்றது, அந்த குழுவினரோடு நீங்கள் ஒத்துப் போகவோ அல்லது வித்தியாசமாக காணப்படவோ நீங்கள் விரும்புவதினால், நீங்கள் மனப்பூர்வமாக சத்தியத்தை விட்டு திரும்பி விடுகிறீர்கள், பரிசுத்தாவியை தூஷணம் செய்து அதனாலே இம்மையிலும் மற்றும் வரவிருக்கும் மறுமையிலும் மன்னிக்கப்பட முடியாத நிலைக்கு சென்று விடுகிறீர்கள். அது சரியே. 73. அவர் தேவனுடைய குமாரன் என்று அவர்கள் அறிந்திருந்தனர். அப்போது அவர்கள்... அவர் தான் என்று அவர்கள் அறிந்திருந்தனர். 74. நிக்கொதேமு அதை வெளிப்படையாகக் கூறினான். அவன் "நிச்சயமாக, நீர் தேவனிடத்திலிருந்து வந்த போதகர் என்று அறிந்திருக்கிறோம்" என்று கூறினான். 75. "இப்படியாக கூறுகிறபடியால். அவன் ஒரு பிசாசு" என்று கூறினான். அவர்... அவர் அங்கே நின்று, அவரால் காரியத்தை முன்னறிந்து அவர்கள் இடமாக கூறமுடிந்தது, ஏனென்றால் அவர் நின்று கொண்டு ஜனக்கூட்டத்-திற்குள் நோக்கிப் பார்த்து, அவர்கள் தங்கள் மனதில் என்ன யோசித்தனர் என்றும் அவரால் கூற முடிந்தது, வியாதியஸ்தரை அவரால் சுகமாக்க முடிந்தது, இன்னும் காரியங்களை அவர் செய்தார்; அவர்களுக்காக ஜெபித்தார், அவருடைய ஜெபத்திற்கு பிரதிபலன்களும் வந்தன, ஆனாலும் அவர்கள், "ஆ, அது பிசாசு" என்று கூறினர். 76. அப்போது இயேசு, "இதோ, சற்று கேளுங்கள். அதற்காக நீங்கள் மன்னிக்கப் படுவீர்கள், ஏனென்றால் நீங்கள் எனக்கு எதிராக பேசுகிறீர்கள். ஆனால் பரிசுத்தாவி வரும் போது, அப்படிப்பட்ட ஒரு கருத்தை சொல்லாதீர்கள். ஏனென்றால் பரிசுத்தாவி உங்கள் இருதயத்தில் உங்களை எச்சரிக்கை செய்வார். இப்பொழுது அவ்விதமாக செய்யப்பட ஒரு வழியும் இல்லை, ஏனென்றால், இப்பொழுது இரத்த அணுக்களால் நான் சுற்றப்பட்டிருக்கிறேன், நான் சுற்றப்பட்டிருக்கும் இரத்த அணுவானது இன்னும் உடைக்கப்பட-வில்லை. ஆனால் ஒரு நாளிலே ஒரு ஈட்டி என்னை குத்தி இந்த பக்கத்தை பிளக்கும், அப்போது அந்த இரத்த அணுவானது வெளி கொணரப்படும். என் ஜீவன் வெளியே புறப்பட்டு வரும், பிதாவுக்குள்ளாகச் செல்லும், பிறகு மறுபடியுமாக தெய்வீக உருவிலும் வல்லமையுடனும் திரும்ப வரும். அப்போது அந்த இரத்த அணு அங்கே இருக்கும், பரிசுத்தாவியானவர் எல்லா இடங்களிலும் மானிட இருதயத்துடனே ஈடுபடுவார். இந்த சத்தியம் உங்கள் முன்னிலையில் வைக்கப்படும்போது, அந்த சமயத்தில் நீங்கள் மனப்பூர்வமாய் அதை புறக்கணித்தால், இம்மையிலும் மறுமையிலும் உங்களுக்கு மன்னிப்பே கிடையாது" என்று கூறினார். சற்று கவனியுங்கள், ஜாக்கிரதையாய் நடந்து கொள்ளுதல் நலம். உங்களுக்கு புரிகின்றதா. பாருங்கள்? 77. "சத்தியத்தை அறிவும் அறிவை அடைந்த பின்பு யாரெல்லாம் மனப் பூர்வமாய் பாவம் செய்கிறார்களோ அல்லது அவிசுவாசிக்கிறார்களோ, அவர்களுக்கு அவர்களின் பாவத்தினிமித்தம் செலுத்தத்தக்க வேறொரு பலி இனியிராமல், நியாயத்தீர்ப்பு வருமென்று பயத்தோடே எதிர்பார்க்குதலும், விரோதிகளை பட்சிக்கும் கோபாக்கினையுமே இருக்கும். மோசேயின் நியாயப் பிரமாணத்தை தள்ளுகிறவன் இரக்கம் பெறாமல் இரண்டு மூன்று சாட்சிகளின் வாக்கினாலே சாகிறானே; தேவனுடைய குமாரனைக் காலின் கீழ் மிதித்து, தன்னை, (கவனியுங்கள், பரிசுத்தமாக்கப்பட்ட ஒரு நபர்) பரிசுத்தம் செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென்றெண்ணி, கிருபையின் ஆவியை நிந்திக்கிறவன் எவ்வளவு கொடிதான ஆக்கினைக்கு (பிரசங்கியோ அல்லது வேறு யாராக இருந்தாலும் சரி) பாத்திரவானாயிருப்பான் என்பதை யோசித்துப்பாருங்கள்." பாருங்கள், கடும் கோபாக்கினையைத் தவிர வேறு எதுவுமே அவனுக்கு விடப்பட்டிருக்கவில்லை, விரோதியை பட்சிக்கும் கோபாக்கினைதான் விடப்பட்டிருக்கிறது. 78. நீங்கள் சுவிசேஷ சத்தியத்தை கண்டு, புகழ்மிக்கவனாகவோ அல்லது உங்கள் சொந்த சபைக்கு செல்லவோ அல்லது அதைக் குறித்து உங்கள் சொந்த வழியை கொண்டிருக்கவோ, அதை மிதித்து அதனைக் கடந்து போவீர்களானால், சகோதரனே, உங்களுக்கு இனிமேல் எந்த விமோசனமும் இல்லாமல் முடிந்து போகின்ற நிலைமைக்கு காரியத்தை செய்துள்ளாய். இப்பொழுது நான் கூறுவது என்னுடைய வார்த்தை அல்ல. நான் அப்படியே செய்வேனானால், ஏதோ வித்தியாசப்பட்ட ஒன்றைச் செய்ய முற்படுவேன். ஆனால் அதைக்குறித்து தேவனுடைய வார்த்தை அப்படித்தான் கூறியுள்ளது. இப்பொழுது, அவர் தாமே அதனோடு ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். 79. இப்பொழுது, நாம் இங்கே 13 ஆம் வசனத்திலிருந்து ஆரம்பிப்போம். தேவன் வாக்குத்ததம் பண்ணின. தேவன் வாக்குத்தத்தம் பண்ணின போது..... (வாசிப்போமாக) ஆபிரகாமுக்குத் தேவன் வாக்குத்தத்தம் பண்ணின போது, ஆணையிடும்படி தம்மிலும் பெரியவர் ஒருவருமில்லாதபடியினாலே தமது பேரிலே தானே ஆணையிட்டு: 80. எந்த விதமான ஒரு உடன்படிக்கையின் கீழாக நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்று உங்களால் நினைத்துப் பார்க்க முடிகின்றதா? இப்பொழுது ஒவ்வொரு... இன்னும் தொடர்ந்து நாம் வாசிப்போம். நிச்சயமாக நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன்னைப் பெருகவே பெருகப்பண்ணுவேன் என்றார். அந்தபடியே, அவன்... 81. தேவன் ஆபிரகாமுக்கு இந்த வாக்குத்தத்தை அளித்து, தாம் அவனை- தாம் அவனை ஆசீர்வதித்து, அவன் என்னவெல்லாம் செய்திருந்தானோ அதில் அவனைப் பெருகப் பண்ணுவேன் என்று வாக்குத்தத்தம் பண்ணினார். 82. இப்பொழுது கவனியுங்கள், தேவனும் கூட, அதன் பிறகு அதன் பேரில் ஆணையிட்டார், தாம் அதைச் செய்யப் போவதாக ஆணையிட்டார். இப்பொழுது, தேவன் தமது பேரிலே தானே ஆணையிட்டார், பிதாவாகிய ஆபிரகாமுக்கு தாம் அளித்திருந்த ஆணையை உறுதிப்படுத்த அவ்வாறு அதைச் செய்தார். 83. பிதாவாகிய ஆபிரகாமுக்கு எதை அவர் உறுதிப்படுத்தினார்? அவர் ஆபிரகாமிடம்... அவர் அவனுக்கு நிபந்தனையில்லாமல் உடன்படிக்கையை அளித்தார், ஆபிரகாம், ஆபிரகாமாக இருந்தான் என்பதனாலல்ல. சில வாரங்களுக்கு முன்னர் அதை நாம் பார்த்தோம், அதை நீங்கள் அறிவீர்கள். அவர் ஆபிரகாமுக்கு வாக்குத்தத்தத்தை அளித்தார். ஏனென்றால் தேவன் தாமே ஆபிரகாமை தெரிந்து கொண்டார், உலகம் அஸ்திபாரம் போடப்படு-வதற்கு முன்னரே அவர் அவனை தெரிந்தெடுத்தார். ஆபிரகாம், அவன் பிறப்பதற்கு முன்பாகவே, அவனைக் குறித்த எல்லாவற்றையுமே தேவன் அறிந்திருந்தார், அவன் என்ன செய்வான் என்று அறிந்திருந்தார். கிருபையி-னாலே அவர் ஆபிரகாமை தெரிந்தெடுத்தார்; ஆபிரகாமை மாத்திரமல்ல ஆனால் அவனுக்கு வருகின்ற ஆபிரகாமின் சந்ததியையும் அவர் தெரிந்து எடுத்தார். ஓ, என்னே! நீங்கள் மாத்திரம்... 84. நாம் எப்பேற்பட்ட ஒரு திடமான அஸ்திபாரத்தை கொண்டிருக்கிறோம் பாருங்கள், பிரபுக்களுக்கெல்லாம் பிரபுவானவர், எல்லா தேவர்களுக்கும் தேவனானவர், எல்லா ராஜாக்களுக்கும் ராஜா, துவக்கங்களுக்கெல்லாம் துவக்கமானவர், ஆபிரகாமுடனும் மற்றும் அவருடைய சந்ததியுடனும் அவர் செய்துள்ள இந்த உடன்படிக்கையை உறுதிப்படுத்த அவர் தமது பேரிலே தானே ஆணையிட்டார். ஏனென்றால் அவருக்கு மேலாக பெரியவர் வேறு யாருமே கிடையாது. 85. இப்பொழுது, ஓ, இந்த காரியம் தாமே இப்படியும் கீழாக, அப்படி மேலெழும்ப வேறே விதமாகக் காணப்படலாம், ஆனால் நாமோ இதை நேராக தெளிவாக அதை அலசிப் பார்த்து அது எப்படிப்பட்டதாக இருக்கிறது என்று காணலாம். 86. தேவைப்பட்டால் நாம் சற்று பின் சென்று ஆபிரகாமுடன் தேவன் செய்த உடன்படிக்கையான ஆபிரகாமிய உடன்படிக்கையை (Abrahamic covenant) எடுத்து, தேவன் எப்படியாக தமது பேரிலே ஆணையிட்டார் என்று நாம் பார்ப்போமாக. தேவன் தமது பேரிலே ஆணையிட்டுக்கொண்டது எங்கே உள்ளது என்று யாருக்காவது தெரியுமா? இப்பொழுது நாம் அந்த பாகத்துக்கு திருப்புவோம்; அது ஆதியாகமம் 22-ஆம் அதிகாரமாகும், 16-வசனத்திலிருந்து என்று நம்புகிறேன். இப்பொழுது நாம் ஆதியாகமம் 22-ஆம் அதிகாரம் 16-ஆம் வசனத்தை எடுத்துப் பார்ப்போம், அதிலே தேவன் தமது பேரிலே தானே ஆணையிட்டதை நாம் காணலாம். சரி, இது தான் என்று நான் நினைக்கிறேன், நான் தவறாக நினைக்கப்படவில்லையெனில், நேரடியாக அந்த பகுதிக்கு சென்று வாசிக்கலாம், 22:16. ஆம். கவனியுங்கள், 15-வது வசனம். கர்த்தருடைய தூதனானவர் இரண்டாந்தரம் வானத்தில் இருந்து ஆபிரகாமைக் கூப்பிட்டு நீ உன் புத்திரன் என்றும், உன் ஏக சுதன் என்றும் பாராமல் அவனை ஒப்புக்கொடுத்து இந்தக் காரியத்தைச் செய்தபடியால் நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன் சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப் போலவும், கடற்கரை மணலைப் போலவும் பெருகவே பெருகப்பண்ணுவேன் என்றும், உன் சந்ததியார் தங்கள் சத்துருக்களின் வாசல்களைச்சுதந்தரித்துக் கொள்ளுவார்கள் என்றும், 87. தேவன் தமது பேரிலே தானே ஆணையிட்டார். அல்லேலூயா! அது தாமே ஒருவனை "அல்லேலூயா" என்று கூச்சலிட வைக்கவில்லையெனில், அங்கே - நீ மரித்துப் போயுள்ளாய். சரியா. ஓ! 88. தேவன் தாமே, "ஆபிரகாமை, நீ இந்த காரியத்தை செய்தபடியால், வேறு யாரோ ஒருவர் செய்ததினால் அல்ல, ஆனால் நீயே இந்த காரியத்தை செய்தபடியால். விசுவாசத்தினாலே நீ நடந்தாய், நான் அந்த காரியத்தை கனம் பண்ணினேன், இனி மேலும் கிரியைகளை கனம் பண்ண மாட்டேன்; இதை நான் கனம் பண்ண மாட்டேன். நான் விசுவாசத்தை கனம் பண்ணுவேன். ஏனென்றால் இதன் முடிவு என்ன என்று அறியாமலே நீ செய்தபடியால் நான் உன்னை காத்துக்கொண்டேன். உன் வித்தையையும் நான் காத்துக் கொள்வேன். என் பேரிலே நான் ஆணையிட்டுக்கொள்வேன்" என்று கூறினார். ஆமென். "உன் வித்து தங்கள் சத்துருக்களின் வாசல்களைச் சுதந்தரித்துக் கொள்வார்கள்." ஆமென். அது தாமே எனக்கு காரியத்தை முற்றுப் பெறச் செய்கின்றது. அது தாமே செய்யப்படவேண்டியதெல்லாம் அது தாமே ஆகும். 89. இங்கே எபிரெயரில் பவுல் மறுபடியுமாக அதைக் குறித்து கூறுகிறான், அந்த காரியத்தை எடுத்து குறிப்பிடுகிறான். ஓ, கலாத்தியரிலும், எபேசியரிலும் மற்றும் முழுவதுமாக அதைக் குறித்து அவர்கள் குறிப்பிடுகின்றனர், அதை குறிப்பிட்டு பேசுகின்றனர், ஆகவே நம்முடைய அஸ்திபாரமானது திடமானதாக உள்ளது(ஆமென்.), ஏதோ ஒரு கட்டுக்கதையின் மேலோ அல்லது ஏதோ அஞ்ஞான மூடபழக்கவழக்கமான ஒன்றிலிருந்து எடுக்கப் படவில்லை. ஆனால் அது கர்த்தர் உரைக்கிறவதாவது என்றிருக்கிறது, ஒரு ஆணையின் பேரில் உள்ளது. ஆமென். தேவன் தமது பேரிலே தானே ஆணையிட்டுக் கொண்டார். ஓ, என்னே. கர்த்தருடைய பரிசுத்தவான்களே, எப்பேற்பட்ட ஒரு திடமான அஸ்திபாரம் பாருங்கள்! ஆமாம். 90. பிசாசுகள் வரும் போது, அதிகாரங்கள் வரும் போது, வியாதி வரும் போது, மரணம் உங்கள் முகத்திற்கு நேராக உற்றுப் பார்க்கும் போது, நாம் அதை எடுத்து சுவிசேஷ ஒளியில் வீசும் போது, அப்போது அவை தன் இடத்தை இழக்கின்றன, சூரிய ஒளியில் பனி உருகி ஓடுவது போல அவை உருகி ஓடிப்போய் விடும். 91. நீங்கள் கவனிப்பீர்களானால், மக்கள், சில சமயங்களில் நீங்கள்... அநேக சமயங்களில், மக்கள் எல்லா விதமான கருத்துக்களையும் காரியங்களையும் எழுதுகின்றனர், அது மக்களை பிராடஸ்டெண்ட் சபையிலிருந்து கத்தோலிக்க சபைக்கு ஓடும்படிக்குச் செய்கின்றது, ஏனென்றால் வார்த்தையானது ஊக்குவிக்கப்பட்டுள்ளது என்று கத்தோலிக்கர் விசுவாசிக்கின்றனர் என்று எழுதுவதால் மக்கள் அப்படிச் செய்கின்றனர். கத்தோலிக்கர் அப்படியாக விசுவாசிக்கின்றனர். மாற்கு:16 ஊக்குவிக்கப்பட்டுள்ளது என்று விசுவாசிக் கின்றனர். நிச்சயமாக விசுவாசிக்கின்றனர். அது ஊக்குவிக்கப்பட்டுள்ளது என்று விசுவாசிக்கின்றனர். ஆனால், பாருங்கள், பிசாசு உள்ளே புகுந்து கிரியை செய்து "சபை வார்த்தையைக் காட்டிலும் மேலானது" என்று கூறுகின்றது. 92. பிறகு, ஒரு பிராடெஸ்டெண்ட் உள்ளே வருகின்றான்; அவனுக்கு ஒத்துப் போகாத ஏதோ ஒரு சிறு காரியத்தை அவன் காண்கிறான். அப்போது அவன், "இது ஊக்குவிக்கப்படாத ஒன்று. இது வார்த்தைக்கான தவறான வியாக்கியானம்." என்று கூறுகிறான். வார்த்தையை அமைக்க அவன் முயற்சிக்கின்றான் (பாருங்கள்?), அதை தன் கட்டுக்குள் எடுக்க முயற்சிப்பான், அல்லது தன்னுடைய விசேஷ வேத கலாசாலை பாடத்தை அதில் பொருத்த முயற்சிப்பான். உங்களுக்கு புரிகின்றதா? வார்த்தையுடன் அதற்கு எந்த வித சம்பந்தமும் கிடையாது. 93. அது தேவனுடைய வார்த்தையாகும். அதன் ஒவ்வொரு வார்த்தையையும் நான் விசுவாசிக்கிறேன். அது தாமே... இதை மற்றும் அதை வெட்டி வெளியே எடுப்பது எனக்குரியதல்ல. எனக்கு தேவையானதோ வார்த்தையானது நான் எந்தெந்த தகுதிகளை பெற்றிருக்க வேண்டும் என்று கூறுகிறதோ அவைகளை நான் ஜீவிக்கவே, அவ்வளவு தான், என்ன செய்யவேண்டும் என்று வார்த்தை உரைக்கிறதோ, நான் அந்த வார்த்தை கூறுவதை ஜீவிக்க வேண்டியவனாக இருக்கின்றேன், அவர் "இதில் ஏதையாவது ஒன்றை ஒருவன் கூட்டினால் அல்லது அதிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், இந்த ஜீவ புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளில் இருந்தும், அவனுடைய பங்கு எடுத்துப் போடப்படும்." அது சரியா? ஆகவே நாம் அதை விசுவாசிக்கின்றோம். 94. இயேசு கிறிஸ்துவுக்குள்ளாக நம்முடைய நங்கூரமானது உறுதியாகவும் நம்பிக்கையாகவும் இருக்குமானால், அப்படியானால், சகோதரனே, உங்களை அசைப்பதற்கு எதுவுமே கிடையாது. நீங்கள்... நீங்கள் நங்கூரம் இடப்பட்டு உள்ளீர்கள். ஆமென். ஓ, ஆம். அது சரியே. 95. "அதன் பிறகு ..." இப்பொழுது 15ஆம் வசனம். அந்தபடியே, அவன் பொறுமையாய்க் காத்திருந்து, வாக்குத்தத்தம் பண்ணப் பட்டதை பெற்றான். 96. ஓ, உம், 7-ஆம் அதிகாரத்துக்கு நம்மால் செல்ல முடியுமா என்று நான் எனக்குத் தெரியவில்லை. அவன் பொறுமையாய்க் காத்திருந்து, (ஆமென்.) வாக்குத்தத்தம் பண்ணப் பட்டதை பெற்றான். 97. அந்த அதே காரியத்தை இக்காலையிலே உங்களால் செய்ய முடியுமா? நீங்கள் உங்கள் விசுவாசத்தைக் கொண்டு, "அது கர்த்தர் உரைக்கிறதாவது. எது வந்தாலும் அல்லது எது சென்றாலும் சரி, இன்று காரியம் எந்த வித பிரச்சனையும் இல்லாமல் இருந்து, நாளை காரியம் கடினமானதாக இருந்தாலும் சரி, அடுத்த நாள் அவர்கள் உங்களை சீண்டி, அதற்கு அடுத்த நாள் உங்களை கேலி பரியாசம் செய்து, அடுத்த நாள் இவன் பைத்தியம் பிடித்தவனென்று கூறினாலும் நான் பொறுமையாக காத்திருப்பேன்." ஆமென். 98. அவன் பொறுமையாய்க் காத்திருப்பதற்கு முன்னர் அல்ல, ஆனால் அவன் பொறுமையாய் காத்திருந்த பிறகே அவன் வாக்குத்தத்தத்தை பெற்றான். ஆமென். ஓ, என்னே! இது தான் காரியம். உங்களால் காண முடிகின்றதா? சகோதரனே, அது எல்லா பிசாசுகளையும் குலுக்கி எடுத்து எல்லாவற்றையும் எடுத்து வீசி விடும். பாருங்கள்-? பாருங்கள்-? இது தான் காரியம். 99. சாத்தான் வந்து, "ஓ, இப்பொழுது, நான் உனக்கு கூறுகிறேன். நீ சிறிது உணர்ச்சி வசப்பட்டுள்ளாய். நீ தானே... அதிலே... இந்த காரியத்தைக் குறித்து நீ மாத்திரம் சற்று யோசித்துப் பார்த்தால் நலமாயிருக்கும்" என்று கூறுவான். அப்போது நீங்கள், "சாத்தானே, அது கர்த்தர் உரைக்கிறதாவது என்று உள்ளது" என்று கூறுங்கள். 100. அது எவ்வளவு கடினமானதாக வந்தாலும் பரவாயில்லை, அது எப்படி காட்சியளித்தாலும் சரி, யார் என்ன கூறினாலும் சரி. நான் பொறுமையோடே செல்ல விரும்புகிறேன், மூர்க்கக் கோபம் கொண்டிருக்காமல்... மனிதன் பொறுமையாக இருக்க முடியவில்லை, எல்லா நேரமும் கோபமும் மூர்க்கமும் கொண்டிருத்தல். நீங்கள் உங்கள் காரியங்களை சரியாக நேராக அதை நோக்கி அமைத்து நேராக நடந்து சென்று கொண்டேயிருக்க வேண்டும். என்ன நடந்தாலும் சரி, தொடர்ந்து முன்னே போய்க்கொண்டே இருங்கள். 101. கவனியுங்கள். நான் ஒன்றைக் கூறப்போகிறேன். கவனியுங்கள். விசுவாச-மானது நினைத்து செயல்படுவது போல் அல்ல, அது நினைக்காமலே செயல்படுவதாகும். ஆமென். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? நான் அநேக வருடங்களாக உலகம் முழுவதுமாக பிரயாணம் செய்து, பல தரப்பட்ட மக்களை சந்தித்த போது அதைக் குறித்து நான் அறிந்து கொண்டேன். விசுவாசமானது நினைக்காமல் செயல்படுதல் ஆகும். நீங்கள் விசுவாசம் கொண்டிருப்பீர்கள் ஆனால் அதைக் குறித்து நீங்கள் அறியாமலே இருப்பீர்கள். அது சரியே. 102. இயேசு கிறிஸ்து, அவர் ஒரு புயலில் இருந்தாலோ அல்லது கடும் காற்று படகை இங்குமங்குமாக அசைத்துக் கொண்டிருந்தாலோ அல்லது பிசாசுகளின் கூட்டம் தமக்கு முன்னால் நிற்க அதற்கு நேராக அவர் நின்றிருந்தாலும் சரி; அவர் எந்த ஒரு இடத்தில் இருந்திருந்தாலும் சரி, அது அவரை ஒருபோதும் அசைக்கவே இல்லை. அவர் சரியாக நேரே எப்போதும் போல சாந்தமாகவும் அமைதியுடனும் நடந்து சென்றார். ஏன்? அவர் பயத்தைக் குறித்த நினைவே இல்லாமல் இருந்தார் அவ்வளவு தான், அவரைச் சுற்றி எது இருந்தாலும் சரி, அவர் அப்படியே இருந்தார். அது சரியே. அது சம்பவிக்க போகிறதோ அல்லது அது சம்பவிக்கவில்லையோ; அது நடக்கப்போகிறது என்று அவர் அறிந்து இருந்தார் ஏனென்றால் தேவன் அவ்விதமாகக் கூறியிருந்தார். அவர் "ஓ, நான் போதுமான ஜெபம் செய்தேனா? நீண்ட நேரம் உபவாசித்தேனா? இதைச் செய்தேனா?" என்று கூறவில்லை. அவர் அதைக் குறித்த நினைவு இல்லாமல் அப்படியே நடந்து சென்று கொண்டிருந்தார். அது சரியே. தேவன் கூறினது சாத்தியம் என்று அவர் விசுவாசித்தார். வார்த்தைகள் நிறைவேற்றப்பட வேண்டும், அவருடைய ஜீவியமானது அவைகளை நிறைவேற்றவே உள்ளது என்று அவர் அறிந்திருந்தார். அது சரியே. 103. ஆகவே அதை நிறைவேற்ற நீங்களும் கூட இங்கே இருக்கிறீர்கள். பயத்தைக்குறித்த நினைவே இல்லாமல் அப்படியே நடந்து கொண்டே இருங்கள். குறை கூறுதலைக் குறித்த நினைவே இல்லாமல் அப்படியே சென்று கொண்டிருங்கள். கிறிஸ்துவுக்குள் நீங்கள் நடக்கின்ற விதமாகவே தொடர்ந்து நடந்து கொண்டேயிருங்கள். அவரோடே நடந்து கொண்டே இருங்கள், வலது அல்லது இடது கைக்கு எந்த ஒரு கவனத்தையும் செலுத்தாமல் அப்படியே தொடர்ந்து முன்னே போய்க் கொண்டேயிருங்கள். சபையில் ஏதாவது வருமானால், தேவனுடன் நடந்து கொண்டேயிருங்கள். அல்லேலூயா. வியாதி உங்களை தாக்கும் போது, தேவனுடன் நடந்து கொண்டேயிருங்கள். உங்கள் அண்டை வீட்டார் உங்களை விரும்பவில்லை என்றாலும், தேவனுடன் நடந்து கொண்டேயிருங்கள். தேவனுடன் நடந்து கொண்டேயிருங்கள். 104. ஒரு நாளிலே ஏனோக்கு அதே விதமாக தேவனோடே சஞ்சரித்தான், நடந்து கொண்டிருந்தான் (walked). அவன் என்ன செய்தான் என்று உங்களுக்கு தெரியுமா? அவன் அப்படியே தேவனுடன் நடந்து பரம வீட்டுக்கு சென்று விட்டான்; அவன் பாதையில் இவ்வளவு தூரம் நடந்து வந்தான், பிற்பாடு மறுபடியுமாக திரும்பிச் செல்ல அவனுக்கு விருப்பமே இல்லை. ஆமென். 105. தேவனோடு நடந்துகொண்டேயிருங்கள். நீங்கள் மரிக்கப் போகிறீர்கள் என்று மருத்துவர் கூறினால்; தேவனோடு நடந்து கொண்டேயிருங்கள். மருத்துவர் உங்களிடமாக, நீங்கள் என்று கூறினால், பரவாயில்லை; தேவனோடு நடக்க மாத்திரம் செய்யுங்கள். தேவனோடு நடக்க மாத்திரம் செய்யுங்கள்; அவ்வளவு தான். ஏனென்றால் "நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை இதோ உலகத்தின் முடிவு பரியந்தம் சகலநாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்" என்று தேவன் உங்களுக்கு வாக்குத்தத்தம் செய்துள்ளார். அவர் உங்களுக்கு அளித்திருக்கும் உடன்படிக்கையின் பேரிலே அவர் ஆணையிட்டு கொடுத்து உள்ளார், அவர் அதை உறுதிப்படுத்துவார். அப்படியானால் தேவனுடன் நடந்து கொண்டேயிருங்கள், அவ்வளவு தான். 106. உங்களுக்கும் ஏற்றங்களும் தாழ்வுகளும் இருக்கும். ஆனாலும் கவலை கொள்ளாதீர். நீங்கள் முட்புதர்கள் நிறைந்த வழியிலும், மிகவும்கூர்மையான பாறைகளின் மேலும், குறுகின செங்குத்தான உயர்ந்த பாறைகளின் மேலும், மலைகளின் கீழாக இருக்கும் பள்ளங்களிலும், மலைகளினூடாகவும், தண்ணீர்களூடானகவும் நடக்க வேண்டியவர்களாக இருக்கிறீர்கள் ஆனாலும் தொடர்ந்து தேவனோடு நடந்து கொண்டேயிருங்கள். ஆம் ஐயா, "நீங்கள் ஏறி கடக்க வேண்டிய அநேக மலைகள் உண்டு," என்கின்ற பழைய பாடலை கேட்டிருப்பீர்கள், "ஆனால் பாதையின் முடிவில் அவை மிகவும் சிறிதானதாக காணப்படுகின்றன." என்னே, என்னே! இருந்த எல்லா காரியங்களையும் நோக்கி மாத்திரம் பாருங்கள். நீங்கள் விட்டு வந்துள்ள உங்கள் காலடித் தடங்களை திரும்பிப் பாருங்கள்; அது மிக அதிகளவில் இருக்காது. அவன் பொறுமையாய்க் காத்திருந்து, வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதை பெற்றான். மனுஷர் தங்களிலும் பெரியவர் பேரில் ஆணையிடுவார்கள்; உறுதி பண்ணும் படிக்கு ஆணையிடுதலே சகல விவாதத்திற்கும் முடிவு. 107. வேறு விதமாகக் கூறுவோமானால், மனிதர் ஆணையிடும் போது, அவர்கள் உங்களிடமாக வந்து ஆணையிட்டுக் கொள்வார்களானால், அப்போது எல்லா விவாதத்திற்கும் ஒரு முடிவு ஏற்படுகின்றது; நீங்களும் அதை நம்புகிறீர்கள். பாருங்கள்? அந்தபடி, தேவனும் வாக்குத்தத்தம் பண்ணப்பட்டவைகளைச் சுதந்தரித்துக் கொள்ளுகிறவர்களுக்குத் தமது ஆலோசனையின் மாறாத நிச்சயத்தைப் பரி பூரணமாய்க் (ஓ).... காண்பிக்கும்படி சித்தமுள்ளவராய், ஓர் ஆணையினாலே... (ஓ)..... அதை ஸ்திரப்படுத்தினார். 108. தேவன் உங்களுக்கு காண்பிக்க விரும்பினார். தம்முடைய ஆலோசனையின்படி அவர் காண்பிக்க விரும்பினார். அவர் அதை ஒரு ஆணையினாலே ஸ்திரப்படுத்தினார், அதினாலே நீங்கள் தாமே அதைக் குறித்த எந்த வித படப்படப்பும் கொள்ளாதபடிக்கு அவ்விதமாகச் செய்தார். இப்பொழுது இங்கே கவனியுங்கள். நமக்கு முன் வைக்கப்பட்ட நம்பிக்கையைப் பற்றிக் கொள்ளும்படி அடைக்கலமாய் ஓடி வந்த நமக்கு இரண்டு மாறாத விசேஷங்களினால் நிறைந்த ஆறுதலுண்டாகும்படிக்கு எவ்வளவேனும் பொய்யுரையாத தேவன் அப்படிச் செய்தார். 109. தேவன் பொய் சொல்வதானது முற்றிலும் கூடாத ஒரு காரியமாகும். அந்த ஒரு காரியம் மாத்திரம் தேவனால் முடியாத ஒன்றாகும். அது சரியா? இப்பொழுது, பொய் சொல்வதானது தேவனால் முடியாத ஒன்றாகும். தேவனால் கூடாதது இரண்டு காரியம் உண்டு. முதலாவது, பொய் சொல்லுதல் தேவனால் கூடாத ஒரு காரியமாகும். இப்பொழுது, அடுத்த காரியமானது அவர் ஆணையிட்டு கொடுத்த காரியத்தை குறித்து தேவனாலே பொய்யாக உரைக்க முடியாது, இந்த இரட்டை காரியம் அவராலே முடியவே முடியாது. அவர் தாமே அதன் பேரிலே ஆணையிட்டார் (ஆமென்.) இந்த ஆணையை ஸ்திரப்படுத்துவேன் என்றார். ஓ, என்ன ஒரு மகத்தான... 110. இப்பொழுது நாம் சற்று திரும்பிச் சென்று ஆணை என்றால் என்ன என்று பார்ப்போமாக, சரியா? ஒரு நிமிடத்திற்கு, ஒரு நிமிடம் மாத்திரமே. திருப்பி, ஆதியாகமம் புத்தகத்தில், முந்தைய நாளில் நான் அதை வாசித்துக் கொண்டு இருந்தேன், ஆதியாகமம் 15-ஆம் அதிகாரம். இதோ நாம் பார்க்கலாம். தேவன் ஆணையிட்டுக் கொடுத்த காரியத்தை சற்று கவனியுங்கள், உங்களை சற்று நலமாக உணரச் செய்யக்கூடிய ஒன்றை நீங்கள் வாசிக்க விரும்பினால் இதைப் பாருங்கள். இந்தக் காரியங்கள் நடந்த பின்பு, ''கர்த்தருடைய வார்த்தை ஆபிரகாமுக்குத் தரிசனத்திலே உண்டாகி, அவர்: ஆபிரகாமே, நீ பயப்படாதே; நான் உனக்குக் கேடகமும், உனக்கு மகா பெரிய பலனுமாயிருக்கிறேன்,'' என்றார். 111. "நான் உனக்கு கேடகமும்." தேவன் உங்களுக்கு கேடகமுமாயிருக்கிறார் என்றால், உங்களை தாக்க பிசாசால் எப்படி முடியும்? பாருங்கள்? பாருங்கள்? "நான் உனக்குக் கேடகமும், உனக்கு மகா பெரிய பலனுமாயிருக்கிறேன்." யார்? "நானே", கர்த்தர், "உனக்கு மகா பலனுமாயிருக்கிறேன்." அதற்கு ஆபிரகாம். கர்த்தராகிய ஆண்டவரே, அடியேனுக்கு என்ன தருவீர்? நான் பிள்ளையில்லாமல் இருக்கிறேனே; தமஸ்கு ஊரானாகிய இந்த எலியேசர் என் வீட்டு விசாரணைக்கர்த்தனாய் இருக்கிறானே என்றான். பின்னும் ஆபிராம்: தேவரீர் எனக்குப் புத்திர சந்தானம் அருளவில்லை; இதோ என் வீட்டிலே பிறந்த பிள்ளை எனக்குச் சுதந்தரவாளியாய் இருக்கிறான் என்றான். அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாகி இவன் உனக்கு சுதந்தரவாளியல்ல, உன் கர்ப்பப்பிறப்பாயிருப்பவனே உனக்குச் சுதந்தரவாளி-யாவான் என்று சொல்லி 112. தேவன் தாம் செய்யப்போவதற்கு இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னர் அவனிடமாக இதை கூறினார். ஆகையால் ஆபிரகாம், "சரி ஆண்டவரே, இது எப்படி இப்பொழுது ஆகப்போகிறது? எனக்கு நூறு வயது ஆகிவிட்டதே" என்று யோசிக்க ஆரம்பித்தான். 113. இப்பொழுது, சற்று கவனியுங்கள் "அவர் அவனை வெளியே அழைத்து"... (இதோ - இதோ அது வருகிறது.) அவர், அவனை வெளியே அழைத்து நீ வானத்தை அண்ணாந்து பார், நட்சத்திரங்களை எண்ண உன்னாலே கூடுமானால், அவைகளை எண்ணு என்று சொல்லி: பின்பு அவனை நோக்கி: உன் சந்ததி இவ்வண்ணமாய் இருக்கும் என்றார். 114. அவனுக்கு இன்னுமாக எந்த ஒரு பிள்ளையும் இல்லாதிருந்தது, அவனுக்கு நூறு வயதாகியிருந்தது. "மேலே வானத்தை நோக்கிப் பார். அதோ அங்கே இருக்கின்ற நட்சத்திரங்களை உன்னால் எண்ண முடியுமா?" என்று கூறினார். 115. கலிபோர்னியாவில், இங்கே பாலோமார் மலையில், இல்லை, வில்சன் மலையில் அங்கே இருக்கின்ற அந்த பெரிய வான் ஆய்வுகூடத்தில், ஒரு கண்ணாடியின் மூலமாக 120-கோடி தூர அளவில் உள்ள விண்வெளியில் இருக்கின்ற காரியங்களை உங்களால் பார்க்கமுடியும்... இப்பொழுது, உங்கள் கண்களால் அவ்வளவு தூரம், பல ஆயிரக்கணக்கான மைல் தூரத்தில் உள்ளவைகளை (பாருங்கள்?), ஒருக்கால் 20-இலட்சம் மைல், அல்லது சில 10-இலட்சத்திற்கு அதிகமான தூரம் பார்க்க முடியும் என்று யோசிக்கிறீர்கள். நீங்கள் அந்த சூரிய மண்டலத்தில் எதைப் பார்க்கிறீர்கள் என்றால், வெறும் நட்சத்திரங்களைத் தான் பார்க்கிறீர்கள். அவைகளில் சில நெருக்கமாகக் காணப்படுகின்றன, சில நட்சத்திரங்கள் தூரமாகவும் அப்படிப்பட்டதாகவும் காணப்படுகின்றன. ஆனால் 120-கோடி வருடங்கள் தூர அளவில் விண் வெளியில் இருக்கும் போது, நீங்கள் எவ்வளவு தூரம் என்கின்ற இலக்க எண்களை எடுத்து இந்த சபையை சுற்றிலுமாக இலக்க எண்களாக ஒன்பதில் பத்து தடவை சுற்றி சுற்றி வைத்து, அப்படியாக வைத்து எத்தனை மைல்கள் தூர இருக்கும் என்று பாருங்கள். ஆனால் அங்கே அண்ட சராசரத்தில் இன்னும் நிலவுகள் நட்சத்திரங்கள் அதைத் தாண்டி இருக்கின்றன. 116. ஆபிரகாமின் சந்ததி! "அவைகளை எண்ணு" என்றார். உன்னால் அது முடியாது. "உன் சந்ததியும் அவ்விதமாக இருக்கும்." மேலும் கவனியுங்கள். அதைச் செய்தது இதோ இங்கே உள்ளது. அவன் கர்த்தரை விசுவாசித்தான். (ஓ). அதை அவர் அவனுக்கு நீதியாக எண்ணினார். 117. "இதோ பாருங்கள் கர்த்தாவே, நான் என்ன செய்யப்போகிறேன் என்று உம்மிடம் கூறப்போகிறேன். நான் ஒரு குறிப்பிட்ட குறிப்பிட்ட காரியத்தை செய்வேன். நான் இதை அல்லது அதை செய்யப் போகிறேன்" என்று அவன் கூறவில்லை. அவன் கர்த்தரை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது, ஏனென்றால் தேவன் அப்படியாக கூறியிருந்தார். அவர் அதன் பேரிலே ஆணையிட்டார், தாம் அதைச் செய்யப் போவதாக ஆணையிட்டார். பின்னும் அவர் அவனை நோக்கி: இந்த தேசத்தை உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும் பொருட்டு, உன்னை ஊர் என்கிற கல்தேயருடைய பட்டணத்தில் இருந்து அழைத்து வந்த கர்த்தர் நானே என்றார். அதற்கு அவன், கர்த்தராகிய ஆண்டவரே, நான் அதைச் சுதந்தரித்துக் கொள்வேன் என்று எதினால் அறிவேன் என்றான். 118. "இப்பொழுது எனக்கு பிள்ளைகளே இல்லையே. ஆகவே நீர் தாமே ஏதாவது ஒரு விதமான அடையாளத்தை எனக்கு தருவீரா?" 119. உங்களுக்கு தெரியும், நான் அடையாளம் தேடுபவன் அல்ல, ஆனால் அடையாளங்களில் எனக்கு விசுவாசம் உண்டும். அது சரியே. பாருங்கள்? இன்று மனிதனுக்கு காணக்கூடாத அடையாளம் ஒன்று கொடுக்கப்பட-வில்லையென்றால் 120. ஆம், மக்கள் விசுவாசிப்பதில்லை என்பதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. அவர்கள் சுற்றும் முற்றும் செல்கின்றனர், மக்கள் வேதாகமத்திலிருந்து இயற்கைக்கு மேம்பட்டவைகள் எல்லாவற்றையும் வெளியே எடுத்து போட்டு விட்டனர், அவர் அதிலிருந்து எடுத்து.... ஒரு - ஒரு மனிதன் வந்து "நான் இரட்சிக்கப்பட்டேன்" என்று கூறுகிறான். நிச்சயமாக. ஆம், அவன் கூறுவதில் எந்த சந்தேகத்தையும் நீங்கள் கொள்ள முடியாது. அது சரியே. அவன் கூறியதை சந்தேகிக்கவே முடியாது. தெருவில் ஒரு மனிதன் நடந்து வந்து, அவனால் முடிந்த அளவிற்கு மது குடித்து, வாயில் சுருட்டை புகைத்துக் கொண்டு தள்ளாடி "உய்ய்ய்ய்" என்று கூச்சலிட்டு, ஒவ்வொரு மூச்சிற்கும் கெட்ட வார்த்தைகளை கூறிக் கொண்டும் வருவான், அவன் "நான் "இரட்சிக்கப்பட்டேன், ஏனென்றால் நான் விசுவாசிக்கிறேன்" என்று கூறுவான். உங்களால் அதைக் குறித்து நீங்கள் என்ன கூறப்போகிறீர்கள்? உங்களால் ஒன்றுமே செய்ய முடியாது. "என் சபை நான் அதை சேர்ந்து கொள்ள அனுமதிக்கிறது. நான் ஒரு அங்கத்தினன்." அதைக் குறித்து நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்? உங்களால் ஒன்றுமே செய்ய முடியாது. அது சரியே. அது முற்றிலும் சரியே. 121. ஆனால் ஒரு அடையாளத்தின் மூலமாக தவிர வேறு எந்த விதத்திலும் உங்களால் காரியங்களை சொல்ல முடியாது. அது சரியா? [சபையார் "ஆமென்" என்று கூறுகின்றனர்-ஆசி.) அது முற்றிலும் சரியே. அதை காண்பிக்க நீங்கள் அந்த அடையாளத்தை காண வேண்டியவர்களாக இருக்கின்றீர்கள். இப்பொழுது, அது விசுவாசத்திலே மாத்திரமானால், வெறும் விசுவாசத்தைக் கொண்டே என்றல்ல. 122. ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான். அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது. ஆனால் தேவன் அவனுக்கு ஒரு அடையாளத்தை அளித்தார், ஒரு அடையாளமாக, ஒரு முத்திரையாக அவனுக்கு விருத்தசேதனம் பண்ணினார். ஆகவே ஆபிரகாமின் சந்ததி இன்னும் விருத்தசேதனத்தை பெற்றுக் கொண்டிருக்கின்றது. காலங்களினூடாக அவர்கள் அதைச் செய்தனர், சந்திரன் மறைந்து போகும் வரைக்குமாக செய்தனர், நியாயப்பிரமாணம், சன், (Son), குமாரன் வந்தார். தேவனுடைய குமாரன் வந்த போது, அவர் அவர்களை இன்னுமாக விருத்தசேதனம் செய்தார். 123. இன்றைக்கு ஆபிரகாமுடைய ஒவ்வொரு குமாரனும் விருத்தசேதனம் செய்யப்படுகிறான், மாம்சத்தில் அல்ல, ஆனால் இருதயத்திலே விருத்தசேத- னம் செய்யப்படுகிறான். பரிசுத்தாவியானவர் இருதயத்தை விருத்தசேதனம் செய்கின்றார், உலகத்தின் காரியங்களை வெட்டிப் போடுகிறார், கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக புதுசிருஷ்டியாக உங்களை ஆக்குகிறார். "விருத்தசேதனம்" என்றால் "மிகுதி மாம்சத்தை வெட்டி எறிதல்." ஆண்களுக்கு மாத்திரம் தான் விருத்தசேதனம் செய்யப்பட முடியும். உடன்படிக்கையில் ஆண்கள் மாத்திரமே இருந்தனர். ஒரு பெண், விவாகம் செய்யப்படுகையில் உள்ளே கொண்டு வரப்பட்டாள். நீங்கள் அதை ... இன்றைக்கு அது இப்பொழுது நான் கூற விழைவது.. 124. இங்கே நிறைய பெண்கள் உள்ளனர், பெண்னினம் என்பது மிகவும் அற்புதமான காரியம் ஆகும். தேவன் ஒரு மனிதனுக்கு ஒரு பெண்ணைக் காட்டிலும் சிறந்த ஒன்றைக் கொடுப்பாரானால், அவர் செய்திருப்பார். ஆனால் அவர் ஒரு பெண்னை கொடுத்தார். 125. ஆனால் இதுவோ ஒரு பெண்ணின் உலகம் ஆகும். அவள் தான் முழு காரியத்தையும் நடத்திக் கொண்டிருக்கிறாள், இங்கே உள்ளே வீட்டு தாய்மார்களாகிய உங்களைக் குறித்து அல்ல; உலகத்தில் உள்ளவர்களைக் குறித்து தான் கூற விழைகிறேன். அங்கே உள்ள ஹாலிவுட்டில் ஆடைகளை களைந்து கொண்டே நடனம் ஆடுகின்ற ஒரு இளம்பெண் தன் தலை முடியை ஒரு விதமாக வெட்ட ஆரம்பிப்பாளானால், எல்லா சிறு பெண்களுமே தங்கள் தலை முடியை அதே விதமாக வெட்ட ஆரம்பிப்பதை கவனியுங்கள். அல்லது ஹாலிவுட் பெண் தன் ஆடையில் ஒரு வடிவை, பாணியை அமைக்க ஆரம்பித்தால், எல்லா சிறு பெண்களும் அதே விதமாக செய்வதை கவனியுங்கள். ஆனால் அவர்கள் எல்லோரும் கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொள்கின்றனர். அது சரியே. இது பெண்களின் உலகம் ஆகும். 126. நீங்கள் கவனியுங்கள், அவர்கள் ஒரு தேவ தூதனின் படத்தை வரையும் போது அதை ஒரு பெண்ணைப் போல சித்தரிக்கின்றனர். ஒரு பெண் தேவ தூதன் என்கின்ற ஒரு காரியம் இல்லவே இல்லை. அதை வேதாகமத்தில் எந்த ஒரு இடத்திலாகிலும் எனக்கு காண்பியுங்கள். ஒவ்வொரு தேவதூதனும் ஆணாக இருக்கின்றான், தூதன் ஒரு பெண் அல்ல. பெண் தூதர்கள், மரியாள் தாய்கள், அதைப் போன்ற காரியங்கள் எல்லாமே, அப்படிப்பட்ட ஒரு காரியமானது இல்லவே இல்லை. ஒரு தேவ தூதன் பெண் என்று வேதாகமத்தில் எங்கேயாவது குறிப்பிடப்பட்டிருக்கிறதா என்று கண்டு பிடியுங்கள் பார்க்கலாம். அது எப்போதுமே, "அவன்" என்று தான் உள்ளது. மிகாவேல்! காபிரியேல்! "தூதன் தன் உருவின பட்டயத்தை பிடித்திருந்தான்." அது எப்போதுமே "அவன், அவன், அவன், அவன்" என்று தான் உள்ளது. அது சரியே. 127. பெண் ஆணுக்காக உண்டாக்கப்பட்டாள், மனிதன் பெண்களுக்காக உண்டாக்கப்படவில்லை. நிச்சயமாக. அவர்கள் எப்படியாக, எப்படி அவர்கள்... 128. ஏதேன் தோட்டத்தில் தன்னுடைய கருவியாக பிசாசு பெண்ணை எடுத்துக் கொண்டான். அவன் இன்னுமாக அவளை தன் கருவியாக உபயோகித்துக் கொண்டிருக்கிறான். அது சரியே. 129. மனமாற்றம் அடைந்தவர்களை அல்ல, மனமாற்றம் அடைந்தவர்களை அல்ல, கிறிஸ்தவளாக இல்லாதிருக்கின்ற பெண்ணையே, ஒரு நல்ல பெண் எப்படிப்பட்டவளாக இருக்கின்றாள் என்றால், ஒரு மனிதன் இரட்சிப்புக்கு அடுத்ததாக கண்டடைகின்ற ஒன்றாக இருக்கின்றாள். ஆனால் நல்ல பெண்ணாக இல்லாதிருக்கிற ஒருவள்... அதற்கு வெளியே அவன் கண்டெடுக்கின்றவள். அது சரியே. 130. ஒரு நல்ல பெண் மனிதனின் கிரீடத்தில் இருக்கும் இரத்தினமாக இருக்கின்றாள், ஆனால் அநீதியுள்ள ஒரு பெண்ணோ அவன் இரத்தத்தில் தண்ணீராக இருக்கின்றாள். அவனுடைய இரத்தம் தான் ஜீவனாகும். தன் இரத்தத்தில் தண்ணீர் ஒருவனுக்கு இருந்தால் எப்படியிருக்கும். அது அவனைக் கொன்று போடும். 131. இப்பொழுது கவனியுங்கள், தேவன், ஆபிரகாமுடன் பேசுகின்றார். இப்பொழுது கவனியுங்கள். அதற்கு அவன். கர்த்தராகிய ஆண்டவரே, நான் அதைச் சுதந்தரித்துக் கொள்வேன் என்று எதினால் அறிவேன் என்றான். அதற்கு அவர், 3-வயது கிடாரியையும், 3-வயது வெள்ளாட்டையும், 3-வயது ஆட்டுக்கடாவையும், ஒரு காட்டுப்புறாவையும், இரண்டு புறாக்குஞ்சுகளையும், என்னிடத்தில் கொண்டு வா என்றார். 132. இதோ இங்கே அது வருகின்றது. இப்பொழுது சற்று கவனியுங்கள். அவன் அவைகள் எல்லாவற்றையும் அவரிடத்தில் கொண்டு வந்து, அவைகளை நடுவாகத் துண்டித்து, துண்டங்களை ஒன்றுக்கொன்று எதிராக வைத்தான். (ஓ, என்னே. இது எப்பேற்பட்ட ஒரு அர்த்தம் கொண்டிருப்பதை பாருங்கள்.) பட்சிகளை (birds) அவன் துண்டிக்கவில்லை. 133. இப்பொழுது, அவன் கிடாரியையும், வெள்ளாட்டையும் துண்டித்து, அவைகளை தனித்தனியாக வைத்து, ஒன்றுக்கொன்று எதிராக வைத்தான், ஒரு யுகத்திலிருந்து மற்றொன்றிற்கு சரியாக அவை பொருந்தும் என்பதை காண்பித்தான். ஆனால் அந்த காட்டுப் புறாக்களையோ, அதை, அவன் அவைகளை துண்டு துண்டாக வைக்கவில்லை. ஆகாயத்துப் பறவைகள் அந்த உடல்களின் மீது இறங்கின, அப்போது ஆபிரகாம் அவைகளை துரத்தினான். சூரியன் அஸ்தமிக்கும் போது, ஆபிராமுக்கு அயர்ந்த நித்திரை வந்தது. திகிலும் காரிருளும் அவனை மூடிக் கொண்டது. அப்பொழுது அவர் ஆபிராமை நோக்கி: உன் சந்ததியார் தங்களுடையதல்லாத அந்நிய தேசத்திலே பரதேசிகளாயிருந்து, அத்தேசத்தாரை சேவிப்பார்கள் என்றும், அவர்களால் 400-வருஷம் உபத்திரவப்படுவார்கள் என்றும், நீ நிச்சயமாய் அறியக்கடவாய். 134. தேவன் ஆபிரகாமிடமாக, அவனுக்கு பின்னர் - பின்னர் - பின்னர் - பின்னர் இருக்க போகின்ற அவனுடைய பேரப்பிள்ளைகள் ஒரு அந்நிய தேசத்திலே 400-வருஷங்கள் சஞ்சரிப்பார்கள் என்றும் அவர்களால் உபத்திரவப்படுவார்கள் என்றும் முன்னறிவித்துக் கொண்டிருந்தார்; ஒரு குறிப்பிட்ட காலத்தையும், சரியாக எவ்வளவு காலம் இருப்பார்கள் என்றும் கூறினார். இப்பொழுது, கவனியுங்கள். இவர்கள் சேவிக்கும் ஜாதிகளை நான் நியாயந்தீர்ப்பேன்; பின்பு மிகுந்த பொருள்களுடனே புறப்பட்டு வருவார்கள். 135. அவர்கள் தாமே... "நீ..." கவனியுங்கள். நான் எதைக் குறித்து பேசுகிறேன் என்றால் பரிசுத்த... கவனியுங்கள். அது என்ன... நிபந்தனையில்லாத... என்ன? நீ சமாதானத்தோடே உன் பிதாக்களிடத்தில் சேருவாய்; (ஆமென்) - நல்ல முதிர் வயதிலே அடக்கம் பண்ணப்படுவாய். 136. "நான் குறிப்பிட்ட காரியங்களை செய்யப் போகிறேன்" என்றல்ல. ஆனால், "நான் ஏற்கெனவே செய்து விட்டேன், இலக்கை குறித்து வைத்து விட்டேன்." ஆமென்! ஓ, என்னே! நான் இதை பார்க்கும் போது, மிகவும் பரவசமாகிறேன், என் நரம்புகள் என் சரீரத்தில் மேலும் கீழுமாக குதித்து இந்த விதமாக காணப்படுவது போல. நான் அந்த வாக்குத்தத்தத்தை குறித்து நினைக்கையில், ஓ, சகோதரனே!.. 137. இன்று காலை என் மனைவியினிடமாக கூறிக் கொண்டிருந்தேன். நான் அவளைப் பார்த்து, கூறினேன், "தேனே, உனக்குத் தெரியுமா...." நான் என் சகோதரனையும் அவர்களையும் குறித்தும் கூறிக்கொண்டிருந்தேன், எப்படியாக அவர்கள் பிள்ளைகள்... இங்கே ரெபெக்கா ஏறத்தாழ ஒரு வாலிபப் பெண்ணாகிக் கொண்டிருந்தாள். அப்போது நான் "இந்த பள்ளியில் அவள் செல்வதற்கு முன்னர் இங்கிருந்து செல்ல நான் பேசிக் கொண்டிருந்தேன். மேலும் நான், "உனக்குத் தெரியும், நாம் இன்னும் பிள்ளைகள் அல்ல" என்றேன். "நான் இன்னும் அப்படியே இல்லை" என்றேன். "உனக்குத் தெரியும், கூடிய விரைவில் எனக்கு 46-வயதாகப்போகிறது. எனக்கு வயதாகிக் கொண்டு இருக்கின்றது" என்று கூறினேன். 138. ஆனால், ஓ, என்னே, தேவன் எனக்கு அளித்திருக்கும் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட ஆணையிட்டுள்ள உறுதிப் பிரமாணத்தைக் குறித்து என் மனம் திரும்பி நினைக்க ஆரம்பிக்கும் போது, அப்போது என் மனதின் எல்லா ஐயங்களும் அப்படியே மறைந்து போகின்றது. அப்போது நான்... எல்லாமே வித்தியாசமாக காணப்படுகின்றது. இப்பொழுது, கவனியுங்கள். வயது சென்ற காலத்தில்... நாலாம் தலைமுறையிலே அவர்கள் இவ்விடத்துக்குத் திரும்ப வருவார்கள், ஏனென்றால் எமோரியருடைய அக்கிரமம் இன்னும் நிறைவாகவில்லை 139. தேவன் தம்முடைய வாக்குத்தத்தத்தை செய்து கொண்டிருக்கின்றார், தேவன் அதை ஆபிரகாமுக்கு நிபந்தனையின்றி அளித்தார்... இப்பொழுது, அவர் இதைக் கூறும் போது இருக்கிறதை கவனியுங்கள். ஓ, இங்கே ஒரு அழகான காட்சி உள்ளது, நமக்கு இதை பார்த்து முடிக்க போதுமான நேரம் இருக்குமானால், தேவன் அமைத்துள்ள இந்த அருமையான காட்சியை நாம் பார்த்து முடித்தால் கவனியுங்கள். "மூன்று வயதுக் கிடாரியை என்னிடத்தில் கொண்டு வா" என்று கூறினார். 140. கவனியுங்கள், மூன்று. வேதாகமத்தில் உள்ள ஒவ்வொன்றும் மூன்றாக உள்ளது. மூன்றும் ஒன்று சேர்ந்து ஒன்று என்றாகிறது. பாருங்கள்? பிதா, குமாரன், பரிசுத்த ஆவி, மூன்று தேவன் அல்ல: ஒன்று. விசுவாசம், நம்பிக்கை, அன்பு, மூன்று வித்தியசமான காரியங்கள் அல்ல, ஆனால் அன்பு என்ற ஒன்றின் சாரம்(essence) ஆகும். 141. இப்பொழுது, நீதிமானாக்கப்படுதல், பரிசுத்தமாக்கப்படுதல் பரிசுத்தாவியின் அபிஷேகம், என்பவை இருந்தன, அவை மூன்று வித்தியாசப்பட்ட யுகங்களை சேந்ததல்ல, கிருபையின் மூன்று கிரியைகள் அல்ல, ஆனால் மூன்று வித்தியாசப்பட்ட வெளிப்படுதல்களின் ஒரே கிரியை தான் அவைகள். அதே பரிசுத்தாவியானவர் தான் லூத்தருடன் நீதிமானாக்கப்படுதலில் கீழாக இருந்தார், பரிசுத்தமாக்குதலோடு வெஸ்லியுடன் இருந்தார், இப்பொழுது பரிசுத்தாவியின் அபிஷேகத்தில் சபையில் இருக்கின்றார்: அந்த அதே பரிசுத்த ஆவியினாவர், இரண்டு பரிசுத்த ஆவிகள் அல்ல, அதே பரிசுத்த ஆவி தான். 142. இங்கே வளர்ந்து மேலே வருகின்ற அந்த சிறு தானியம், முதல் காரியம், அந்த விவசாயி அதைப்பார்த்து, அந்த சிறு தானியம் முளைகள் வளருவதைக் கண்டான். "அற்புதம்!" அவன் குதுகலித்தான். சிறிது காலம் கழித்து அவை முதிர்ந்து பட்டுப்போய் கீழே விழுந்தன, ஆனால் தானியமோ தொடர்ந்து மேலே சென்றது. முதலாவதாக முளைத்த தண்டில் இருந்த அந்த அதே ஜீவன் தான், இப்பொழுது மேலே உள்ள கோதுமைக் கதிரில் உள்ளது, அதே விதத்தில் மாறாமல் உள்ளது. அது மேலே மேலே வளர்ந்து சென்றது, இன்னும் மேலே, மேலே வளர்ந்து சென்றது. 143. அதே போல தான் சபையும் தொடர்ந்து இயேசு வரப் போகின்ற அந்த பரிபூரண நாளிற்கென வளர்ந்து கொண்டிருக்கின்றது. பாருங்கள்? அதே பரிசுத்தாவி, அதே காரியம், வித்தியாசமான யுகங்கள் அவ்வளவு தான். 144. இப்பொழுது, இதன் தொடர்ச்சியாக, கவனியுங்கள். சிகப்பு கிடாரிகள், வெள்ளாடுகள் மற்றும் எல்லாமுமே மூன்று வயதாக இருக்கவேண்டும், மூன்று வித்தியாசப்பட்ட யுகங்கள் பிதாத்துவம், குமாரத்துவம், பரிசுத்தாவி. பாருங்கள்? "மூன்று வருடங்கள்", எல்லா காரியமும் மூன்று வருடங்களாக இருந்தன, அது எதைக் குறிக்கிறதென்றால், பிதா, குமாரன், பரிசுத்த ஆவி: அந்த யுகத்தில் இருந்த அதே தேவன் தான், இந்த யுகத்தின் கீழும் இருக்கின்றார், அந்த யுகத்தின் கீழாக இருந்தவர், இதிலும் அதே தேவனாகவே இருப்பார். ஒரே ஒரு தேவன், மூன்று யுகங்கள், மூன்று தேவன்கள் அல்ல: அதே தேவனின் மூன்று யுகங்கள். 145. அக்கினி ஸ்தம்பத்தில் இருந்த அதே தேவன் கிறிஸ்து இயேசுவுக்குள் இருந்தார். கிறிஸ்து இயேசுவுக்குள்ளும் இருந்தார். கிறிஸ்து இயேசுவுக்குள் இருக்கின்ற அந்த அதே ஒருவர் உங்களுக்குள்ளும் இருக்கின்றார். அது சரியே. மகிமையின் நம்பிக்கையாக தேவன் உங்களுக்குள் இருத்தல். அது சரி தானே? பரிசுத்தாவியின் அபிஷேகம் அந்த நபருக்குள் இப்பொழுது வாசம் பண்ணுகிறதென்றால், அப்படியானால் நீங்கள் என்னவாகின்றீர்கள். தேவனு-டைய குமாரர். 146. தேவன் தாழ இறங்கி கன்னி மரியாளை நிழலிட்டபோது, அவரே ஒரு ஜீவனாக இருந்தார். ஆகவே அந்த ஜீவனானது நிழலிட்டு தம்மைச் சுற்றிலும் ஒரு இரத்த அணுவை சிருஷ்டித்தது. 147. இரத்த அணுவானது எங்கிருந்து வருகின்றது என்று யாருக்காவது தெரியுமா? ஆணிலிருந்து. அது சரி தானே? இரத்த அணுவில் தான் ஜீவன் இருக்கின்றது, மேலும் அந்த இரத்த அணுவானது ஆணிலிருந்து வருகின்றது, ஒரு பெண்ணிலிருந்து அல்ல. அங்கே தான் ஜீவன் இருக்கின்றது, ஆணின் விந்தணுவில். 148. கவனியுங்கள். பிறகு தேவன் தாமே கன்னி மரியாளின் கர்ப்பத்திற்குள் வந்து தம்மைத் தானே ஒரு இரத்த அணுவில் சுற்றிக் கொண்டார். அல்லேலூயா! 149. அதன் காரணமாகத்தான் நாம் நித்திய ஜீவனைக் கொண்டிருக்கிறோம். பிறகு அந்த இரத்த அணுவானது, பாவத்தின் காரணத்தினால் ஒரு பட்டயத்தால் குத்தப்பட்டு, உடைக்கப்பட்டு, தேவனை வெளியே கொணர்ந்தது. அவர் அந்த இரத்த அணுவை உடைத்து, நம்மைக் கழுவி, பரிசுத்த ஆவியினாலே நம்மை தமக்குள்ளாக கொண்டுச் சென்றார். உங்களுக்கு புரிகின்றதா-?. ஆகவே இப்பொழுது நாம் தேவனுடைய குமாரர்களாக, தேவனுடைய பாகமாக இருக்கின்றோம். தெய்வீக நிலை தாமே ஒவ்வொரு விசுவாசிக்குள்ளாக ஜீவிக்கின்றது. தேவனுடைய ஆவியினாலே பிறந்த ஒவ்வொரு மனிதனும் தேவனுடைய பாகமாக இருக்கின்றான். 150. அவன் இயற்கைக்கு மேம்பட்டதில் விசுவாசம் கொள்கின்றது ஆச்சரியம் ஒன்றுமில்லை. அவனால் எதையும் விசுவாசிக்க இயலுவதில் எந்த ஒரு ஆச்சரியமும் இல்லை. ஏன் அப்படியாக அவன் இருக்கின்றான்? அவனுக்கு உள்ளாக தேவனுடைய பாகம் இருக்கின்றது, இந்த சரீரத்தை உண்டாக்கி உள்ள, பாவம் மற்றும் எல்லாமே இருக்கின்ற அந்த அழிவுள்ள சரீரத்திற்கு உள்ளாக அது சுற்றப்பட்டிருக்கின்றது. ஆனால் அந்த சரீரத்திற்குள்ளாக பார்ப்போமானால், மறுஜென்மத்தினாலே, தேவனுடைய ஒரு கிரியையானது, அதனூடாக வந்துள்ளது, தம்முடைய சொந்த இரத்தத்தை சிந்துதலினாலேயும் மற்றும் ஒரு வழி என்பதாக, அதில் இருந்த அந்த இரத்தத்தை எடுத்து அதை அப்புறம் வைத்து, இந்த பாவம் நிறைந்த மனிதனுக்குள் நுழைந்தார். அவனுக்-குள்ளாக ஒரு நம்பிக்கையை வைத்து, அதனாலே அவன் அதற்காக மரித்து, அவன் அங்கே தாராளாமாக நிற்கும்படிக்கு ஏதுவாக இருந்தது. அவனிடமாக அதைப்பேசுங்கள், நிச்சயமாக அவன் அதை விசுவாசிக்கின்றான்! 151. "விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின் தொடரும்; என் நாமத்தினாலே பிசாசுகளை துரத்துவார்கள்; நவமான பாஷகளை பேசுவார்கள்; சர்ப்பங்களை எடுப்பார்கள், அல்லது சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அல்லது வியாதிஸ்தர்கள் மேல் கைகளை வைப்பார்களானால் அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்" என்று இயேசு கூறினார். இயேசு அதைக் கூறினார். 152. ஏன்? அவன் அவருடைய பாகமாக ஆகிவிட்டான். ஆம், ஐயா. தேவன் உடனடியாக காட்சியில் வருகின்றார். அவர் எதை வேண்டுமானாலும் அருளுவார், நிறைவேற்றுவார். அவர் ஒரு வழியை உண்டாக்குவார். வழி இல்லாதிருக்கின்ற இடத்திலே, அவர் ஒரு வழியை உண்டாக்குவார். அவரை விசுவாசிக்கின்ற எந்த ஒரு மனிதனும், அந்த அதே காரியத்தை விசுவாசிக்-கின்றான். அவன் விசுவாசித்துதானாக வேண்டும். அவன் தேவனுடைய ஒரு பாகமாக இருக்கின்றான். அவன் தேவனுடைய சந்ததி ஆவான். அவன் தேவனுடைய குமாரனாக இருக்கின்றான் அல்லது குமாரத்தியுமாக இருக்கின்றான். அவனால் எந்த ஒன்றுமே செய்ய இயலாது, ஏனென்றால் தேவன் சரியாக அவனுடனே காட்சியில் இருக்கின்றார். அவன் தேவனுடைய ஒரு பாகமாக இருக்கின்றான். 153. கவனியுங்கள். அக்கினி ஸ்தம்பத்தில் தேவன் கொண்டிருந்த எல்லாவற்றையும், குமாரனாகிய இயேசு கிறிஸ்துவுக்குள் ஊற்றி விட்டார். தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப் பிரகாரமாக அவருக்குள்ளாக வாசம் செய்தது. அது சரியா? தேவன், தே-வ-ன் தாமே, யெகோவா, வல்லமை உள்ளவர், கேடகமுமானவர், பரிசையுமானவர், அவருடைய மீட்புக்குரிய எல்லா நாமங்களும், அவர் என்னவாகவெல்லாம் இருந்தாரோ அவை எல்லாவற்-றையும் இயேசு கிறிஸ்துவுக்குள்ளாக ஊற்றினார். 154. ஆகவே இயேசு கிறிஸ்து ஒரு இரத்த அணுவிலிருந்து உருவானார். அந்த அணுவிற்கு வெளியே சுற்றப்பட்டுள்ள பாதுகாப்பான மேல் அமைப்பே ஒரு மானிட கண் காணும் ஒரு சிறு பொருளைக் காட்டிலும் கோடிக்கணக்கான கோடிக்கணக்கான அளவு சிறிதாக உள்ளது, அதுதான் கர்த்தராகிய இயேசுவின் சரீரமாக இருந்தது. அந்த பாதுகாப்பு வளையத்திற்கு உள்ளாக தேவன் தாமே, தம்மை அந்த இரத்த அணுவுக்குள்ளாக சுற்றிக் கொண்டார், தம்முடைய சொந்த இரத்தத்தை எடுக்கவும், தம்முடைய சொந்த இரத்தத்தை சிந்தவும், மற்றும் அதை இலவசமாக கொடுக்கவும், அதினாலே, அந்த இரத்த அணுவானது உடைக்கப்பட்டு, நம்முடைய அழிவுள்ள சரீரம் போலவே உடைத்தார், அது உடைந்தபோது, அப்போது நம்முடைய ஜீவனானது இதில் இருந்து வெளியேறி அந்த மீட்பின் மூலமாக, தேவனுக்கு தேவையாயிருந்த அந்த இரத்தத்தின் மீட்பின் மூலமாக செல்கிறோம், அதினாலே நாம் தாமே அந்த சரீரத்துக்குள்ளாக கொண்டு வரப்பட்டு, தேவனுடைய குமாரனாக தேவனுடைய ஒரு பாகமாக ஆகும்படிக்கு அப்படியாக செய்தார். 155. சகோதரனே, உன்னால் அதை ஜீரணிக்க முடியுமானால், நிச்சயமாக அது உனக்கு நன்மை பயக்கும். அது என்னவாயிருக்கின்றது என்று மாத்திரம் உங்களுக்கு காண்பிக்க என்னிடம் வேறு வழி ஏதாவது இருந்தால் நலமாயிருக்கும் என்று நான் விரும்புகிறேன். தேவனாகிய யேகோவா, கிழே வந்து ஒரு பெண்ணின் கர்ப்பத்திற்குள்ளாக சென்றார், நிழலிட்டார் என்பதைக் குறித்து சற்று சிந்தித்துப்பாருங்கள். கிழே இறங்கி வந்தார், ஆவியாக இருக்கும்படிக்கு இறங்கி வந்தார், அவர் அங்கே இருக்கின்றார். அவர் எப்படிப்பட்டவராய் இருக்கின்றார்? அவர் சிருஷ்டிகர் ஆவார். அவர் அப்போது எந்த பெண்ணின் கர்ப்பப்பைக்குள் இருந்தாரோ அந்த அதே பெண்ணை அவர் சிருஷ்டித்தார். தேவன் தாமே தம்மை சிறிதாக்கிக் கொண்டு, கிழே இறங்கி வந்து அந்த இரத்த அணுவிற்குள் தம்மை புகுத்திக் கொண்டார். பிறகு அவரைச் சுற்றிலும் ஒவ்வொன்றாக கட்ட ஆரம்பித்தார். அது என்னவாயி இருந்தது. 156. பாருங்கள், ஆரம்பத்திலே இந்த காரியத்தை பிறப்பித்தது எதுவாயிருந்தது? இரத்தம். இரத்தம், இரத்தத்தில் ஜீவன் இருந்தது. ஆகவே முன்னர் அந்த காரியம் நடக்க அதுவே காரணமாயிருந்தது. இப்பொழுது, அதை எடுத்து போட, தேவன் தாமே கீழே இறங்கி வந்தார். 157. ஆகவே அவர் தாமே தம்மை ஒரு மிகச் சிறிய ஒன்றாக ஆக்கிக்கொண்டு, மரியாளின் கர்ப்பப்பைக்குள்ளாக வந்து, தம்மை சுற்றிலும் ஒரு சுவற்றை உண்டாக்கிக்கொண்டார், அது இரத்த அணுவாக இருந்தது (எந்த மனிதனும் அதைக் குறித்து அறிந்திருக்கவில்லை.) அந்த இரத்த அணுவை சிருஷ்டித்தார். அந்த இரத்த அணுவானது இன்னொன்றை உந்தித் தள்ளினது, இன்னொன்றை, இன்னொன்றை உந்தித் தள்ளி, பிறகு நரம்புகள் எல்லாம் மற்றும் எல்லாமே வர ஆரம்பித்தது. தேவன் தாமே இதற்குள்ளாக ஜீவித்தார், ஒரு கூடாரத்தை உண்டாக்கிக் கொண்டார், அவர் கிறிஸ்துவுக்குள் வாசம் செய்தார். 158. அங்கே தேவன் நடந்து சென்று கொண்டிருந்தார். அவர், "நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம். என் பிதா என்னில் இருக்கின்றார்" என்று கூறினார். 159. "பிதாவை எங்களுக்கு காண்பியும், பிதாவை எங்களுக்குக் காண்பியும். அது எங்களுக்குப் போதும்" என்று பிலிப்பு கூறினான். 160. அதற்கு அவர், "பிலிப்புவே, இவ்வளவு காலம் நான் உங்களுடனே கூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா. நீ என்னை காணும் போது நீ பிதாவைக் காண்கிறாய். அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று எப்படிச் சொல்லுகிறாய், பிதா இப்பொழுது என்னில் ஜீவித்துக் கொண்டு இருக்கின்றார். கிரியைகளை செய்வது நான் அல்ல; என்னில் வாசம் செய்கின்ற அவர் தான் கிரியைகளை செய்து கொண்டிருக்கின்றார்" என்று கூறினார். ஓ, என்னே! 161. ஒரு மனிதனிடம் அவன் தவறாயிருக்கின்றான் என்று என்னால் எப்படி கூறமுடியும்? பத்து வருடங்களுக்கு பிறகு அவனுடைய பிற்காலம் எப்படியாக இருக்கும் என்று என்னால் எப்படி கூற முடியும், அல்லது நாற்பது வருடங்களுக்கு முன்னால் எப்படியாக அவன் இருந்தான் என்று எப்படி கூற முடியும்? அது நானல்ல. அல்லேலூயா! அது எனக்குள் ஜீவிக்கின்ற அவரே ஆகும். கீழே இறங்கி வந்துள்ள, தம்முடைய இரத்தத்தின் மூலமாக என்னை அவருடனே ஐக்கியத்திற்குள்ளாக கொண்டு வந்துள்ள அவரே ஆகும். அல்லேலூயா. வியாதியஸ்தர் சுகமடைவது என் கரங்களால் எப்படி நடக்கும்? என் கரத்திற்கு எந்த ஒரு வல்லமையும் கிடையாது. அது நான் அல்ல. ஆனால் எனக்குள்ளாக வாசம் செய்கின்ற அவரே தான் அதை செய்கின்றார். 162. இந்த மனிதனால் எப்படி சுவிசேஷத்தை பிரசங்கிக்க முடிகின்றது அவனால் எந்த ஒரு சுவிசேஷத்தையும் பிரசங்கிக்க முடியாது. அதை செய்வதற்கு அவனிடம் ஒன்றுமே இல்லை. சுபாவத்தில் அவன் ஒரு பாவி ஆனால் தேவன் கீழே இறங்கி வந்து அவனுக்குள்ளாக வாசம் செய்து, அவனை ஒரு தேவனுடைய குமாரனாக ஆக்கினார், பிறகு அவன் என் வார்த்தையை விசுவாசிக்கின்றான்? ஏனென்றால், அதே தேவன், அந்த வார்த்தையை உண்டாக்கின அதே தேவன் தாமே சரியாக அவன் மூலமாக... 163. எப்படியாக என்னால் அதைக் காண முடிகின்றது! உங்களால் அதைக் காண முடிகின்றதா? [சபையார் "ஆமென்" என்று கூறுகின்றனர் - ஆசி.) அதோ அது உள்ளது. வார்த்தையை எழுதின அந்த அதே தேவன் தாமே, மனிதனுக்குள் இருந்து கொண்டு, "அது தான் சத்தியம். யார் என்ன கூறினாலும் அதைக் குறித்து எனக்கு அக்கறையில்லை. அது தான் சத்தியமாகும்" என்று கூறுகின்றார். சகோ. பிரன்ஹாம் தன் விரல்களை ஒரு தடவை சொடுக்குகிறார் - ஆசி.] தேவன், மனிதனில் இருந்து, தம்முடைய சொந்த வார்த்தையை அடையாளம் கண்டு கொள்கின்றார். அல்லேலூயா! அது காரியத்தை முற்றுபெறச் செய்கின்றது. தேவன் இங்கே இதற்குள்ளாக சுவிசேஷத்தை பிரசங்கித்தான். பிரசங்கிக்கின்றார். இருக்கின்றார். 164. "சகலத்தையும் விசுவாசிக்கும். சகலத்தையும் நம்பும். சகலத்தையும் சகிக்கும்." அது சரியா. வேத வாக்கியங்கள் எல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது. தேவன் அதை எழுதினார். 165. தேவன் இங்கே வரும் போது, தேவன் தம்முடைய சொந்த வார்த்தையை அடையாளம் கண்டு கொள்ளுகிறார். "நிச்சயமாக, அது தான் சாத்தியம்" என்று கூறுகின்றார். இப்பொழுது, நீங்கள் அதை ஏதாவதொரு இடத்தில் உங்களுக்கு ஏற்றவாறு போலியாக மாற்றி அமைக்க விழைவீர்களானால், அது உங்களுக்கும் தேவனுக்கும் இடையேயுள்ள ஒரு காரியமாகும். ஆனால் தேவன் தம்முடைய சொந்த வார்த்தையை அடையாளம் கண்டு கொள்கின்றார். ஆமென். ஓ, அது எப்படியாக நம்மை நலமாக உணரும்படிக்குச் செய்கின்றது; தேவனுடைய ஆவியினால் ஊக்குவிக்கப்பட்டு அருளப்பட்ட வார்த்தை! 166. கவனியுங்கள். இன்று காலை நியூ ஆல்பனியில் அந்த சிறிய நசரீன் சபை பிரசங்கி வேதாகமத்தின் பக்கமாக தன்னுடைய நிலையை அமைத்து பேசினதை நான் கேட்டேன். சகோதரனே, அவரும் அதை மிக ஆணித்தரமாக கூறினார் "வேத வாக்கியங்களெல்லாம் தேவனுடைய ஆவியால் ஊக்குவிக்கப்பட்டு அருளப்பட்டிருக்கிறது" என்பதைக் கூறித்து கூறினார். ஆம், அது அப்படித்தான் உள்ளது. 167. இப்பொழுது, தேவன் ஒரு வாக்குத்தத்தத்தை செய்தார், பிறகு அவர் தாம் என்ன செய்யப்போகிறோம் என்பதை ஆபிரகாமிடம் கூறினார். அவர் தம்முடைய ஆணையை(oath) செய்தார். அவர் தம்பேரிலே ஆணையிட்டுக் கொண்டார்; அவரைக் காட்டிலும் வேறு யாருமே பெரியவர் அல்ல. ஆகவே தேவன் தாமே... 168. அவர் அக்கினி ஸ்தம்பத்திற்குள் எப்படியாக எல்லாமாக இருந்தாரோ அவை எல்லாமாக கிறிஸ்து இயேசுவுக்குள் இருந்தார். "ஏனென்றால் தேவன். வேதாகாமம் கூறுகின்றது. தேவன் தம்மை கிறிஸ்துவுக்குள்ளாக ஊற்றினார் (நாம் ஒரு பாத்திரத்தை காலி செய்தால் எப்படி செய்வோம் என்று உங்களுக்கு தெரியும்) - தம்மைத் தாமே கிறிஸ்துவுக்குள்ளாக ஊற்றினார். சற்று யோசித்துப் பாருங்கள். தேவன் தம்மை தாமே வெறுமையாக்கி கிறிஸ்துவுக்குள் ஊற்றினார். தேவனுக்கு சமமாயிருப்பதை கொள்ளையாடின பொருளாக கிறிஸ்து எண்ணவில்லை, ஏனென்றால் அவர் தேவனாவார். 169. அந்த காரியத்திற்காகத்தான் அவரை அவர்கள் கொலை செய்தனர். ஓய்வு நாளை மீறினதற்காகவும், தம்மை தேவன் என்று கூறினதற்காகவுமே அவர்கள் அவரை கொலை செய்தனர். 170. அவர் ஓய்வு நாளிற்கு கர்த்தராக இருந்தார், அவர் தேவன் இம்மானுவேலாக இருந்தார். கிறிஸ்து... தேவன் கிறிஸ்துவுக்குள்ளாக இருந்து உலகத்தை தமக்கு ஒப்புரவாக்கினார். இப்பொழுது, தேவனாக இரும். எல்லாவற்றையுமே, அவர் கிறிஸ்துவுக்குள்ளாக ஊற்றினார். 171. கிறிஸ்துவாக கொண்டிருந்த எல்லாவற்றையுமே, சபைக்குள்ளாக ஊற்றினார். ஆகவே உங்களால் காணமுடிகிறதா எப்படியாக.... 172. வேதாகம கலாசாலை நிபுணர்கள் என்ன கூறினாலும் அதை பொருட் படுத்தாமல், கிறிஸ்து, தாமே பிதாவை விசுவாசிக்கிறேன் என்று கூறினார். அது சரியா? 173. அப்போது அவர்கள், "அவனுக்கு பயித்தியம் பிடித்து விட்டது!" என்றனர். அவர்கள், "அவன் பெயல்செபூல்! அவன் ஒரு பிசாசு!" என்று கூறினார்கள். 174. அப்போது அவர், "நீங்கள் என்னைக் குறித்து இப்படியாக பேசி, இப்பொழுது தப்பித்துக்கொள்ளலாம். ஆனால் பரிசுத்தாவி வரும் போது, இப்படி கூற ஒரு போதும் முயற்சி செய்யாதீர்கள்" என்று கூறினார். புரிகின்றதா? 175. ஏனென்றால் கிறிஸ்து பிதாவை விசுவாசித்தார். அந்த போதகர்கள் என்ன கூறினாலும் சரி அதை அவர் பொருட்படுத்தவில்லை, அவர் பிதாவை விசுவாசித்தார். அது சரி தானே? ஏனென்றால், தேவன் தம்மைத் தாமே கிறிஸ்துவுக்குள்ளாக ஊற்றினார், தெய்வீகமானது கிறிஸ்துவுக்குள் இருந்தது. வியூ! உங்களால் அதைப்புரிந்து கொள்ளமுடிகின்றது என்று நான் நம்புகிறேன். 176. கிறிஸ்துவாக இருந்த எல்லாமே, அவர் பரிசுத்த ஆவி விசுவாசிக்குள்ளாக ஊற்றினார். ஆகவே யார் என்ன கூறினாலும் பரவாயில்லை, அவன் தேவனுடைய வார்த்தையை விசுவாசிக்கின்றான். பாருங்கள்? அவர் செய்தாக வேண்டும், ஏனென்றால் கிறிஸ்துவாக எல்லாமே.... தேவன் என்னவெல்லா-மாக இருந்தாரோ, அப்படியெல்லாவற்றையும் கொண்டு கிறிஸ்துவுக்குள்ளாக இருந்தார். கிறிஸ்து என்னவாக இருந்தாரோ, அவையெல்லாம் விசுவாசியாகிய உங்களுக்குள் இருக்கின்றார். 177. கிறிஸ்து உங்களிடமாக ஒன்றைக் கூறி, பிறகு திரும்பி அதை மறுதலிக்க முடியாது. அவரால் தம்முடைய வார்த்தையை திரும்ப வாபஸ் வாங்க முடியாது. அவராலே இப்பொழுது, என்னால் கூற நான் ஒன்றைக் கூறி பிறகு "உம், என்னை மன்னிக்கவும். நான் அந்த விதமாக கூற விழையவில்லை" என்று கூறலாம். ஆனால் அவர் அப்படியாக செய்ய முடியாது. தாம் என்ன கூறுகின்றாரோ அதிலேயே அவர் நிலையாக இருந்தாக வேண்டியவராக இருக்கின்றார். அவர் தேவன். அவரால் தவறே செய்ய முடியாது, தாம் என்ன கூறுகின்றாரோ அதிலேயே அவர் அப்படியே தரித்து இருக்க வேண்டியவராக இருக்கின்றார். ஒலி நாடாவில் காலியிடம் - ஆசி.] தேவன், தெளிவான திருஷ்டாந்தகளைக் கொண்ட தவற முடியாத ஒருவர், தாம் என்ன கூறுகின்றாரோ அதிலே அவர் அப்படி தரித்திருக்க வேண்டியவராக இருக்கின்றார். 178. தேவன் ஒரு ஆணையை செய்தார், ஆபிரகாமுக்கு வாக்குத்தத்தத்தை அளித்து, "நான் உன்னையும் உனக்கு பின்வரும் உன் சந்ததியையும் காப்பேன்" என்று தம் பேரிலே ஆணையிட்டுக் கொண்டார். இப்பொழுது ஆபிரகாமின் சந்ததி என்னவாயிருக்கின்றது? இந்த நிச்சயமாக பற்றிக் கொண்டு இருப்பவர் யார்? இந்த அஸ்திபாரத்தின் மீது கட்டப்பட்டுள்ளவர்கள் யார் ? 179. எல்லா வகையினரும் அப்படியாக இருக்க மாட்டார்கள். "ஆனால் பரலோகத்தில் இருக்கின்ற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி கர்த்தாவே, கர்த்தாவே என்று சொல்லுகிறவர்கள் அதில் பிரவேசிப்பதில்லை." ஆகவே இது தான் பிதாவின் சித்தம் ஆகும். இது தான் அவருடைய வார்த்தை ஆகும். 180. "அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா, உம்முடைய நாமத்தினாலே பிரசங்கித்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே நான் பிசாசுகளை துரத்தினேன் அல்லவா? இந்த எல்லா காரியங்களையும் உமது நாமத்தினாலே நான் செய்தேன் அல்லவா?" அப்பொழுது அவர், "நீங்கள் யார் என்று கூட எனக்குத் தெரியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே, என்னை விட்டு அகன்று போங்கள்" என்று கூறுவார். 181. மனிதன் உணர்ச்சி வசத்தால் பொங்கி எழுந்து, தான் பெற்ற வேதாகம கல்லூரி பயிற்சியின் படியும், வேதாகமத்தின் பேரிலும் வேத வாக்கியங்களை போதித்து அதற்கு தங்கள் சொந்த வியாக்கியானத்தை அளித்து, அந்த காரியங்களை அங்கே கூறுகின்றனர். "தேவ பக்தியின் வேஷத்தை தரித்து அதின் பலனை மறுதலிக்கிறவர்கள்." 182. "கடைசி நாட்களில் அவர்கள் இறுமாப்புள்ளவர்களாயும், தேவப் பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும், இணங்காத வர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும் தேவ பக்தியின் வேஷத்தை தரித்து, அதின் பலனை மறுதலிப்பவர்களாக இருப்பார்கள்" என்று அவர் கூறியுள்ளார். சகோதரன் பிரன்ஹாம் பிரசங்க பீடத்தை ஏழு தடவை தட்டுகின்றார் - ஆசி.) அது தான் காரியமாகும். "இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு. பாவங்களால் நிறைந்து, வீட்டுக்கு வீடு திரிந்து நுழைந்து, பற்பல இச்சைகளால் இழுப்புண்டு, எல்லா விதமான இச்சைகளையும் கொண்டு, சத்தியத்தை அறிந்து உணராது இருக்கின்ற பெண் பிள்ளைகளை வசப்படுத்திக் கொள்ளுகிறார்கள்" என்று கூறினார். ஆம், வருகின்ற ஒவ்வொரு சிறிய காரியத்தையும் கண்டு அவர்கள் கூச்சலிடுகிறார்கள். 183. ஆனால் ஒரு மறுபடியும் பிறந்த கிறிஸ்தவர் தாங்கள் எங்கே நிற்கின்றோம் என்று அறிந்திருக்கிறார்கள். அவர்களை அசைக்க ஒன்றுமே இல்லை. அவர்கள் நேராக கல்வாரியை நோக்கி நடந்து கொண்டிருக்கின்-றார்கள் வழி நெடுகிலும் காரியத்தை போலியாக செய்து காண்பிக்கும் நிறைய போலியாட்கள் (impersonators) இருக்கின்றார்கள்; அது சரியே. ஆனால், சகோதரனே, அது எதைக் காண்பிக்கிறதென்றால், அதை உண்மையாக பெற்றிருப்பவர்கள் இருக்கின்றார்கள் என்பதையே காண்பிக்கின்றது. நம் இடையே போலி டாலர் நோட்டுகள், அதைப் போன்றே காணப்படுகின்ற டாலர் நோட்டுகள் இருக்கின்றன, ஆனால் அது எதைக் காண்பிக்கிறதென்றால் ஒரு உண்மையான டாலர் நோட்டு உள்ளது என்பதையே. சரியாக அதனுடனே தரித்திருங்கள். தொடர்ந்து முன்னே சென்று கொண்டிருங்கள். 184. ஆபிரகாம், அவன் பொறுமையாகக் காத்திருந்த பிறகு... அவன் அதை சகித்தான், மிகுந்த போராட்டத்தை சந்தித்தான், இன்னும் பிறவற்றை சகித்தான். அவன் பொறுமையாக காத்திருந்து வாக்குத்தத்தம் பண்ணப் பட்டதைப் பெற்றான். 185. "யந்நேயும் யம்பிரேயும் மோசேக்கு எதிர்த்து நின்ற போல...." ஆம், யந்நேயாலும் யம்பிரேயாலும் என்னவெல்லாம் செய்ய முடிந்ததென்று பாருங்கள். மோசே செய்த அதே காரியங்களை எல்லாம் ஏறக்குறைய அவர்களால் செய்ய முடிந்தது. ஆனால் ஒரே ஒரு காரியத்தை தான் அவர்களால் செய்ய முடியவில்லை. அவர்களால் வியாதியஸ்தரை சொஸ்தமாக்க முடியவில்லை. அவர்களுக்கும் மோசேக்கும் இருந்த வித்தியாசத்தை அந்த ஒன்று தான் காண்பித்தது. மோசேயால் கோலை கீழே போட்டு, அதை ஒரு சர்ப்பமாக மாற்ற முடிந்தது. அவர்களாலும் அதைச் செய்ய முடிந்தது. மேலும் மோசேயால் பூமியின் மீது வண்டுகளை வரவழைக்க முடிந்தது, அவர்களாலும் அதைச் செய்ய முடிந்தது. மோசேயால் எரிபந்தமான கொப்பளங்களை பூமியின் மீது வரவழைக்க முடிந்தது, அவர்களாலும் அதை செய்ய முடிந்தது. ஆனால் அவர்களால் அதை எடுத்துப் போட முடியவில்லை. அவர்களால் அதை வரவழைக்க மாத்திரம் முடிந்தது, ஆனால் அவர்களால் அதை அனுப்பிவிட முடியவில்லை. ஆனால் மோசேயால் அதைச் செய்ய முடிந்தது, தேவன் தான் சுகமளிப்பவர் என்பதை அது காண்பித்தது. 186. மேலும் இரட்சிப்பு, இரட்சிப்பின் அதே விதமான நிழற்காரியமானது மிருகங்களை இரண்டாக துண்டித்தது. அது எவருக்குமே தெரியும், கிடாரி, வெள்ளாடு மற்றும் செம்மறியாடு, அவையெல்லாம் இரட்சிப்பின் மாதிரிகளாக இருந்தன. ஏனென்றால் காளைகள், வெள்ளாட்டுக் கடாக்கள், செம்மறியாடு, கிடாரிகளின் இரத்தம் சிந்துதல் பலியின் மூலமாக அப்படியாக இருந்தது- பாவம் மன்னிக்கப்படுதல். 187. ஆனால் காட்டுப்புறாவை எடுத்தால், காட்டுப்புறாவானது வியாதிக்காக ஏறெடுக்கப்படுகின்ற காணிக்கை பலி என்று இங்குள்ள எவருமே அறிவர். ஒரு குஷ்டரோகியும் தன் வியாதிக்காக காட்டுப்புறாவை செலுத்த வேண்டி இருந்தது. அந்த பறவையானது வியாதி - பலிக்கு ஒரு மாதிரியாக இருந்தது. அவைகளை இரண்டாக துண்டித்தல் என வரும் போது, அப்படி செய்ய முடியாது ஐயா, அந்த காட்டுப்புறா அப்படியே வைக்கப்பட்டது. அவைகளை போலியாக செய்ய முடியாது. அதிலே ஒன்றுமே. தேவனைத் தவிர வேறு எதுவுமே சுகமளிக்காது. பாருங்கள்? பழைய ஏற்பாட்டிலும் அதே விதமாகத் தான் இருந்தது. "நானே உன் நோய்களையெல்லாம் குணமாக்குகிற கர்த்தர்" என்று அவர் கூறினார். 188. நீங்கள் வெளியே சென்று ஒரு மாய்மாலக்காரனாக "ஓ, நான் இரட்சிக்கப்பட்டேன். தேவனுக்கு மகிமை! ஆம் ஐயா. நான் அதை பெற்றுக் கொண்டேன்" என்று கூறலாம். நீங்கள் வஞ்சித்துக் கொண்டிருக்கலாம். ஆனால், சகோதரனே, நீங்கள் வியாதிப்படும் நேரம் வரும் போது, நீங்கள் சுகமாக்கப்பட்டால் அல்லது சுகமாக்கப்படவில்லையானால், அது தாமே காரியத்தை அதுவாகவே காண்பிக்கின்றது. நீங்கள் சிறிது விசுவாசம் கொண்டு இருக்கிறீர்களா அல்லது இல்லையா என்று அது காண்பிக்கின்றது. அது சரி தானே? 189. நீங்கள், "ஓ, அதை நான் விசுவாசிக்கவில்லை!" என்று கூறலாம். நிச்சயமாக நீங்கள் விசுவாசிக்கவில்லை. முதலாவதாகவே, விசுவாசிக்க உங்களிடத்தில் ஒன்றும் இல்லை. கவனியுங்கள், இப்பொழுது, பாருங்கள். பிறகு "இதை நீ வெவ்வேறாக துண்டிக்காதே" என்று கூறினார். 190. இப்பொழுது இந்த பிரயாசித்தங்களை அவன் காண்பித்த போது என்ன சம்பவித்தது என்று பாருங்கள். அவன் காண்பித்தது என்னவென்றால் ஒரு காலம் வரப்போகிறது. அப்போது அவை வெவ்வேறாக பிரியும், இந்த யுகங்கள், ஒரு காலத்திலே நியாயப்பிரமாணமும் கிருபையும் வெவ்வேறாக பிரியும் என காண்பித்தான். அவன் மிருங்களை இரண்டாக துண்டித்தான். இவை எல்லாவற்றையும் செய்தான். 191. ஆனால் காட்டுப்புறாவிற்கு வருகையில், சுகமளித்தலுக்காக வருகிறான். ஆகவே அவர் அந்த அதே மாறாதவராக இருக்கின்றார். 192. ஆகவே கவனியுங்கள், பழைய ஏற்பாட்டின் கீழாக, யந்நேயும் யம்பிரேயும் அங்கே நின்ற போது. மோசேயால் தன் கோலை கீழே போட்டு, அதை ஒரு சர்ப்பமாக மாற்ற முடிந்தது; அவர்களாலும் கூட அதை செய்ய முடிந்தது. மோசேயால் வண்டுகளை வரவழைக்க முடிந்தது, அவர்களும் கூட அதை வரவழைத்தனர். போலியாக செய்து காண்பிக்கப்படும் காரியங்கள். "ஆம், நாங்கள் பிரிக்கப்படாதிருக்கிற இந்த மற்றொரு குழுவிற்கு மாறினோம்." 193. தெய்வீக சுகமளித்தல் என்று வரும் போது, மோசேயால் சுகமளிக்க அல்லது அந்த கொப்பளங்களை எடுத்துப் போட முடிந்தது; ஆனால் அவர்களால் அதைச் செய்ய முடியவில்லை. அவர்கள் அதை உடைத்துப் போட்டனர். ஆனாலும் அவர்களால் அதை எடுத்துப் போட முடியவில்லை. அவர்களால் அதைச் செய்ய முடியவில்லை. "இது தேவனுடைய விரல்" என்று அவர்கள் கூறினார்கள். அவர்களால் அதைச் செய்ய முடியவில்லை. ஆகவே நீங்கள் பாருங்கள், தெய்வீக சுகமளித்தல் துண்டிக்கப்பட, பிரிக்கப்பட முடியாது. அவர் ஒருவரால் மாத்திரமே குணமாக்க முடியும் என்று எப்போதுமே அவ்வாறே இருந்து வந்துள்ளது. 194. சுகமளிக்க ஒரு வல்லமை கூட பிசாசிடம் இல்லை; அவன் வியாதியை சுகமளித்ததில்லை அல்லது அவனால் சுகமளிக்க முடியாது. அவனால் குணமாக்க முடியாது. 195. கவனியுங்கள். இயேசுவின் சீஷர்கள் வெளியே சென்று யாரோ ஒருவன் பிசாசுகளை துரத்துகிறதை கண்டார்கள். "ஒருவன் பிசாசுகளை துரத்துவதை நாங்கள் கண்டோம். அவன் நம்மை பின்பற்றாதவனாக இருந்தான். நாங்கள் அவனைத் தடுத்தோம்" என்று கூறினார்கள். 196. அதற்கு இயேசு, "அப்படிச் செய்யாதீர்கள். என் நாமத்தினாலே அற்புதம் செய்கிறவன் எளிதாய் என்னைக் குறித்து தீங்கு சொல்ல மாட்டான். நம்மோடு சேராதவன், சிதறடிக்கிறான்" என்று கூறினார். ஒரு மனிதன் பிசாசுகளைத் துரத்தி அவன் செயல்களுக்கான விளைபயனை (result) பெறுகிறான் என்றால், அவன் தேவனிடமாக உறுதியான விசுவாசத்தைக் கொண்டிருக்க வேண்டும் அல்லவென்றால் பிசாசு அதைக் கண்டுகொள்ளவே மாட்டான், என்று அவர் அறிந்திருந்தார். அது சரியே. அவன் செய்த செயலுக்கான விளைபயன்களை (results) பெற்றான். அவர்கள் ஒன்றுமே செய்யாதிருந்தும், அவர்களில் அநேகர் வந்து, தாங்கள் அதைச் செய்ததாக கூறினார்கள். ஆனால் இந்த மனிதனோ தான் செய்த செயல்களுக்கான விளைபயன்கள் (results) அவனுக்கு கிடைத்துக் கொண்டிருந்தது. அவன் உண்மையாகவே பிசாசுகளை துரத்தினான், அதினால் தான் இயேசு "அவனிடம் தேவபக்திக்குரிய காரியம் ஏதோ ஒன்று இருக்கும் அல்லவென்றால் அவனால் அதைச் செய்ய முடியாது" என்று கூறினார். (சகோதரன் பிரன்ஹாம் பிரசங்க பீடத்தை ஏழு முறை தட்டுகிறார் - ஆசி.) சரி, அவன் அதற்கான விளைபயனை, ரிசல்ட் பெற்றான். 197. அங்கே இருந்த பலிகள் இரண்டாக துண்டிக்கப்பட முடியாத, பிரிக்க முடியாதவைகளாக இருந்ததை பார்க்க முடிகிறதா? அந்த காட்டுப்புறாக்களும் மற்றும் புறாக்குஞ்சுகளும் (ஆம், ஐயா,) பிரிக்கப்பட முடியாதவை. அதை நீ வெவ்வேறாக துண்டிக்க வேண்டாம். ஆனால் இவைகளோ நடுவாக துண்டித்து, துண்டங்களை ஒன்றுக்கொன்று எதிராக வை, ஏனென்றால் நியாயப்பிரமாணமும் கிருபையும் சரியாக பொருந்தும், இரண்டும் ஒன்று சேரும். ஆனால் சுகமளித்தல் அல்ல; அது எல்லா நேரத்திலும் ஒரே விதமாகத் தான் இருக்கும். பாருங்கள்? அது சரியே. "அவை இருக்கும் வண்ணமாகவே அப்படியே விட்டு விடு." 198. இப்பொழுது, கவனியுங்கள். ஓ, என்னே. அவன் அதைச் செய்ததற்கு முன்னர் ஆபிரகாம் மிருகங்களைக் கொன்றான், அதை தேவன் கூறின விதமாகவே அவைகளை அங்கே வைத்தான், பிறகு இருள் வந்தது. பறவைகள் உடல்களின் மீது இறங்காமல் அவைகளை அவன் துரத்தினான். சூரியன் அஸ்தமித்தது, பறவைகள் உறங்க ஆரம்பித்தன, இன்னுமாக அவைகளை செய்தன. ஒரு பயங்கரமான... 199. முதல் காரியம், தேவன் ஆபிரகாமுக்கு அயர்ந்த நித்திரையை அளித்தார். "இப்பொழுது ஆபிரகாமே, உனக்கும் இதற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. உன்னுடைய சொந்த இரட்சிப்போடு, உனக்கோ அல்லது உனக்கு பின் வரும் உன் சந்ததிக்கோ எந்த ஒரு காரியமும் இல்லை." இதைக் குறித்து சற்று சிந்தித்து பாருங்கள். 200. தேவன் ஆதாமிடம், "நீ இந்த மரத்தை தொடுவாயானால், நீ .... நீ இங்கே இருப்பதிலிருந்து புசிப்பாயானால், ஜீவிப்பாய். அந்த ஒன்றிலிருந்து புசிப்பாயானால், நீ சாவாய்" என்று கூறியிருந்தார். அது தான் உடன்படிக்கை ஆகும். இப்பொழுது அது தாமே.... உனக்கு முன்பாக அந்த காரியத்தை கொண்டிருக்கிறாய், "நீ இதைச் செய்வாயானால், நீ அதைச் செய்வாயானால், நீ - நீ சாகவே சாவாய். நீ அங்கே ஜீவித்து, இந்த ஒன்றை புசிப்பாயானால், நீ ஜீவிப்பாய்." ஆனால் பிறகு, ஆதாம் இதிலிருந்து புசித்தான், அவன் மரித்தான். 201. கிருபை வந்தது, பிறகு தேவன் கிருபையினாலே ஒரு உடன்படிக்கையை செய்தார். அவர் அப்படி செய்த போது, எகிப்திலிருந்த இஸ்ரவேல் புத்திரர்... தாம் என்ன செய்யப் போகின்றார் என்பதை தேவன் தம்முடைய வார்த்தையைக் கொண்டு ஏற்கெனவே கூறியிருந்தார். அவர், அவர்களை வெளியே கொண்டு வரும்படிக்கே இருந்தார். தம்முடைய வார்த்தைக்கு கட்டுப்பட்டவரான தேவன், அங்கே சென்றார், மோசே என்னும் இரட்சகனை அனுப்பினார், கிருபை அதை அளித்தது.... இதோ மோசே வருகின்றான், இஸ்ரவேல் புத்திரரை வெளியே வழிநடத்தி வருகின்றான். 202. அவர்கள் அவனோடு வெளியே வந்து, வனாந்திரத்துக்கு சென்ற போது, "ஓ, நாங்கள் செய்வதற்கு ஏதாவது ஒன்றைக் கொடு. நாங்கள் ஒரு ஸ்தாபனத்தை உருவாக்க விரும்புகிறோம், செய்வதற்கு ஏதாவது ஒன்றை எங்களுக்கு கொடு. இதைப் போன்ற ஒன்றை நாங்கள் செய்ய எங்களை விடு. நாங்கள் கைக்கொள்ள ஒரு நியாயப்பிரமாணத்தை எங்களுக்கு கொடு" என்று கூறினார்கள். இஸ்ரவேலர் செய்த மிகப்பெரிய தவறு என்னவென்றால் யாத்திராகமம்-19 தான். கிருபையானது அவர்களுக்கு தங்களுடைய இரட்சிப்பை அளித்துவிட்டிருந்தது, ஆனாலும் அதற்கு ஈடாக ஏதாவதொன்றை செய்ய அவர்கள் விரும்பினார்கள். தாம் என்ன செய்யவிருக்கின்றார் என்பதை தேவன் ஏற்கெனவே ஆபிரகாமுக்கு ஆணையிட்டு கொடுத்திருந்தார். அவர்கள், "எங்களுக்கு ஒரு நியாயப்பிரமாணம் வேண்டும்" என்று கூறினர். ஆகவே நியாயப்பிரமாணம் ஒரு போதும்... அதை யாருமே கைக் கொள்ளவில்லை. அவர்கள் அதைச் செய்யவே இல்லை. 203. இயேசு நியாயப்பிரமானத்தை நிறைவேற்ற வந்தார், கிருபை மறுபடியுமாக ஒரு இரட்சகரை அளித்தது. அது சரியே. ஏனென்றால் தேவன் தாமே ஆணையிட்டு கொடுத்திருந்தார் (அல்லேலூயா) தாம் ஆபிரகாமையும் மற்றும் அவனுடைய சந்ததியையும் இரட்சிக்கப் போகின்றார் என்று ஆணை இட்டிருந்தார். 204. இந்த முரட்டாட்டம் பிடித்த, வணங்கா இருதயமுள்ள, வணங்காக் கழுத்துள்ள இப்படிப்பட்ட மக்களிடமாக எப்படி அவராலே செய்ய முடியும், ஆம், எதற்கும் மற்றும் எந்த ஒன்றுக்கும் செவி சாய்க்காத மக்களிடமாக அவரால் எப்படி செய்ய முடியும்? அவர் கூறியிருந்த போதிலும், அவர்கள் தங்கள் வேதாகம கலாசாலை கொள்கைகள் மற்றும் எல்லாவற்றையும் கொண்டிருந்தார்கள். ஆகவே அவரால் எப்படி அவர்களிடமாக கிரியை செய்ய முடியும்? இந்த காரியம் அதை எடுத்துக்கொள்ளப்பபோகின்றது; மற்றும் இது அந்த இடத்தை எடுத்துக்கொள்ளப்போகின்றது. ஆகவே இந்த நாளிலே தேவன் கீழே நோக்கி சபைகளைப் பார்த்துக் கொண்டிருக்கின்றார், அவர்கள் எல்லாரும் எப்படியாக பலவித பேர் ஒரு அமைப்பாக ஒன்று சேர்ந்து, இந்த எல்லா விதமான குழப்பத்தோடும் மற்றும் காரியங்களோடும் உள்ளனர் என்பதை பார்க்கின்றார். அவர் ஒரு வழியை உண்டாக்க வேண்டியவராக இருந்தார் ஏனென்றால் அவ்விதம் செய்வதாக அவர் ஆணையிட்டு கொடுத்திருந்தார், யூதர்களுக்கு மாத்திரம் அல்ல. அவர் "பூமியிலுள்ள கோத்திரங்கள் எல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும்" என்று கூறினார், யூதனும் புறஜாதியும் ஒரே விதமாக. "நான் ஒரு சந்ததியை அழைப்பேன். (அல்லேலூயா. ஓ, என்னே.) நான் அதைச் செய்வேன்." ஆகவே இந்த நாளிலே.... ஆபிரகாமின் சந்ததி என்றால் என்ன? 205. "ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான்." இது ஒரு சிறு இரத்த அணுவாகும், ஆபிரகாமுக்கு பிரயாசித்தம் செய்து கொண்டிருந்த நிழலின் ஒரு பாகமாக இருந்தது. "அவன் தேவனை விசுவாசித்தான் அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது" தேவன், ஆபிரகாமை சுயாதிபத்திய (sovereign) கிருபையைக் கொண்டு அழைத்தார். அவன் ஆபிரகாமாக இருந்தான் என்பதற்காக அவர் அப்படி செய்யவில்லை. அவன் வெறுமனே ஒரு மனிதனாக இருந்தான். 206. இப்பொழுது கவனியுங்கள். தேவனுடைய பிள்ளைகள் ஒவ்வொருவரும் அதே விதமாகத்தான், தேவன் உங்களை அழைத்தாலொழிய உங்களால் தேவனிடமாக வரமுடியாது. "என் பிதா ஒருவனை அழைக்காவிட்டால், அவன் என்னிடத்தில் வரமாட்டான்; நான் அவனுக்கு நித்திய ஜீவனை கொடுப்பேன், கடைசி நாளில் அவனை எழுப்புவேன்" என்று இயேசு கூறினார். 207. தேவன், சுயாதிபத்திய கிருபையினால் ஆபிரகாமின் சந்ததியை அழைத்து உள்ளார். அப்படியானால் அந்த இரத்த அணுவிற்குள் இருந்த அந்த ஜீவன் நிழலானது ஆபிரகாமின் மேல் இருந்து, இல்லாதவைகளை இருக்கிறவைகள் போல் அவன் அழைத்தானே, நடக்கக்கூடாதவைகள் நடந்தேறும் என்று அவன் அழைத்தான், அவன் ஏன் அப்படி கூறினான் என்றால் "தேவன் அப்படியாகக் கூறியிருந்தார்." 208. அப்படியானால் ஆபிரகாமின் சந்ததியார் எப்பேற்பட்ட, எந்த விதமான ஒரு மக்களாக இருப்பார்கள்? (சகோ.பிரன்ஹாம் பிரசங்க பீடத்தை முன்று முறை தட்டுகிறார் - ஆசி.) 209. ஓ, இதை தவற விட வேண்டாம். தயவு செய்து தவறவிடவேண்டாம். அது என் தலைக்கு மேலிருந்து வருகிறதை நான் உணர்கிறேன். சற்று கவனியுங்கள். கவனியுங்கள். 210. அப்படியானால் நீங்கள் ஆபிரகாமின் சந்ததியாக இருப்பீர்களானால், தேவனுடன் உங்களால் கருத்து வேறுபாடு கொண்டிருக்க முடியாது. ஆபிரகாமின் சந்ததியார் இந்த ஆவியின் ஒரு பாகமாக இருக்கின்றனர். ஏனென்றால் தேவன் ஆபிரகாமுக்கு நுனித்தோலை வெட்டுதல், விருத்தசேதனம் என்னும் ஒரு அடையாளத்தை, சாட்சியாக அளித்திருந்தார். அவர் அவனை ஏற்றுக் கொண்டார். இந்த கடைசி நாட்களில், அவர் பரிசுத்த ஆவியை எடுத்து அதைக் கொண்டு ஒவ்வொரு விசுவாசியையும் விருத்தசேதனம் பண்ணினார். எல்லா சந்தேகங்களையும், அவிசுவாசத்தையும் வெட்டி எடுத்துப் போட்டு, தேவனுடைய வார்த்தை சுத்தமானது மற்றும் பரிசுத்தமானது என்றும் அது தான் சத்தியம் என்றும் விசுவாசிக்கும்படியாக அப்படிச் செய்தார் "தேவனே, நான் வாழ்ந்தாலும் அல்லது மரித்தாலும், ஆழ்த்தப்பட்டாலும் அல்லது மூழ்கினாலும் சரி, நான் உம்மை விசுவாசிக் கிறேன். அது உம்முடைய வார்த்தை. நான் அதை விசுவாசிக்கிறேன்" என்று கூறி, விருத்தசேதனம், எல்லா அவிசுவாசத்தையும் வெட்டி எடுத்துப் போடுதல், எல்லாவற்றையும், எல்லா தடைகளையும் வெட்டிப்போடுதல். ஆகவே நான் என்ன கூற விழைகிறேன் என்று உங்களால் காண முடிகின்றதா? 212. இப்பொழுது, யார் ஆபிரகாமின் சந்ததியாவர்? பரிசுத்த ஆவியினால் நிரப்பட்டவரே ஆபிரகாமின் சந்ததி ஆவர். கவனியுங்கள். கவனியுங்கள். ஏனென்றால் ஆபிரகாமுக்கு ஈசாக்கு வந்தான்; ஈசாக்கின் மூலமாக கிறிஸ்து வந்தார். அப்படியானால் எவ்விதம் நாம் கிறிஸ்துவுக்குள்ளாக செல்கின்றோம்? நாம் கிறிஸ்துவுக்குள்ளாக... வேதாகமம், "கிறிஸ்துவுடனேகூட மரித்தவர்க-ளாகிய நீங்கள் ஆபிரகாமின் சந்ததியாராகவும், வாக்குத்தத்தத்தின்படியே சுதந்திரராயும் இருக்கிறீர்கள்" என்று கூறுகின்றது. வியூ! "கிறிஸ்துவுக்கு உள்ளாக மரித்தவர்கள், ஆபிரகாமின் சந்ததியாராகவும், வாக்குத்தத் தத்தின்படியே சுதந்தரராயும் இருக்கிறார்கள்." 213. ஆகவே, அந்த இரத்த அணுவின் மூலமாக உங்களுடைய இயற்கைப் பிரகாரமான இரத்த அணுவின் மூலமாக, அது உடைத்துப் போடப்பட்டு, ஆபிரகாமின் சந்ததியாகிய கிறிஸ்துவின் இரத்த அணுவினால் முழுவதுமாக மூடப்பட்டிருக்கிறீர்கள். அந்த இரத்த அணுவிலே, அது மாத்திரமே இருக்கும்... அதனுள்ளே அக்கிரமம், அசுத்தம், அருவருக்கப்படும்படியான அழுக்கு அதனுள் இல்லை. ஆனால் அந்த இரத்த அணுவில் பரிசுத்த ஆவியாகிய தேவனுடைய ஜீவன் மாத்திரமே இருக்கும். 214. தேவனையே அழித்தால் தான் உங்களையும் கூட அழிக்க முடியும், ஏனென்றால் அது தேவனுடைய ஒரு பாகம் ஆகும். "கடைசி நாளில் அவனை நான் உயிரோடு எழுப்புவேன். எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியும் இருக்கிறார்." ஆகவே தேவனுடைய பிரசன்னத்திலும் மற்றும் சர்வவல்லமையுள்ள தேவனின் சிந்தையிலும், பரிசுத்த ஆவியால் மறுபடியும் பிறந்த ஒவ்வொரு மனிதனும் இப்பொழுது அவருடைய பிரசன்னத்தில் மகிமைப்படுத்தப்பட்டு மீட்பின் சமயத்திற்கென காத்து இருக்கின்றான். வியூ. என்னே, என்னே! உங்களால் அதைக் காண முடிகின்றதா? தேவன் கிருபையின் மூலமாக உங்களை ஆபிரகாமின் சந்ததி என்று அழைத்திருக்கின்றார். ஆபிரகாமின் சந்ததியின் ஒவ்வொருவரையும் தாம் எழுப்பப் போவதாக சர்வவல்லமையுள்ள தேவன் தம் பேரிலே ஆணையிட்டு கொடுத்துள்ளார். அதை தாம் பார்த்துக் கொள்வதாக தேவன் கூறியிருக்கின்றார். 215. இப்பொழுது நீங்கள் எப்படி ஆபிரகாமின் சந்ததியாக இருக்கிறீர்கள்? நீங்கள் மரித்து உங்கள் ஜீவனானது உள்ளாக இருத்தல். "ஒரே ஆவியினால் நாமெல்லாரும் (எழுதப்பட்டதால் இல்லை அல்லது தெளிக்கப்படுதலினால் இல்லை).... ஆனால் ஒரே ஜலத்தினாலா?" இல்லை. "ஆனால் ஒரே ஆவியினாலே நாமெல்லாரும் கிறிஸ்து இயேசுவாகிய இந்த இரத்த அணுக்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருக்கிறோம்." ஆரம்பித்திலே ஒரே ஒரு இரத்த அணு மாத்திரமே இருந்தது, அதிலே நாம் அவருடனே ஞானஸ்நானம் பண்ணப்பட்டோம், அவர் தேவனுடைய குமாரனாக இருந்தார். (சகோ.பிரன்ஹாம் இரண்டு முறை தன் கரங்களை தட்டுகின்றார் - ஆசி.) நாமெல்லாரும் தேவனுடைய குமாரர்களும் குமாரத்திகளும், ராஜ்யத்தில் அவருடனே கூட உடன் சுதந்தருமாயிருந்து, பிதா கூறுகின்ற எல்லா காரியமும் சாத்தியம் என்று விசுவாசிக்கின்றோம் அல்லேலூயா! சகோதரனே! பிதாவில் விசுவாசம், குமாரனில் விசுவாசம் பரிசுத்த ஆவியில் விசுவாசம் இம்மூன்றும் ஒன்று தான் பிசாசுகள் நடுங்கும்; பாவிகள் உணர்வடைவார்கள், யேகோவாவில் வைக்கும் விசுவாசம் எதையும் அசைக்கும். 216. அது சரியே. உண்மை. அது தான் அந்த இரத்த அணு. அது எங்கிருந்து துவங்கினது? ஒரே இரத்த அணு தான். அது சரியா? அந்த இரத்த அணுவுக்குள் என்ன இருந்தது? தேவனுடைய ஜீவன் இருந்தது. அந்த இரத்த அணுவுக்கு என்ன சம்பவித்தது? அது ஒரு ஈட்டியினால் பிளக்கப்பட்டது. ஒரு ரோம் ஈட்டி அதில் பாவத்தை ஈட்டினது - அதை குத்தினது. ஏன்? அதன் மேலே பாவம் வைக்கப்பட்டிருந்தது. அது தேவனுக்கு பிரிதியாயிருந்தது. சரியாக அந்த இடத்திலேயே நீதிமானாக்கப்படுதல் கொண்டு வரப்பட்டது. "இது என்றைக்கும் போதுமானது" என்று தேவன் கூறினார். அது தான் காரியமாகும். ஆகவே அந்த இரத்த அணுவானது குத்தப்பட்டது. 217. அப்போது இரத்தம் பெருக்கெடுத்து வெளியேறியது, அந்த இரத்த அணுவிலிருந்து வெளி வந்து தெளித்தது சகோ.பிரன்ஹாம் தெளிக்கின்ற சத்தத்தை எழுப்புகிறார் - ஆசி.) அது கல்வாரியிலே உடைக்கப்பட்ட போது. எதற்காக அப்படி செய்யப்பட்டது? இதற்கு முன்னர் எந்த ஒரு மனிதனும் உள் சென்றிராத அந்த மேல் கூட்டை திறந்து, உங்களை என்னை அந்த இரத்த அணுவிற்குள்ள கொண்டு செல்ல, இரத்தத்தின் மூலமாக கொண்டு வர, கிறிஸ்துவின் இரத்தத்தின் மூலமாக "வார்த்தை ஜலத்தினால் கழுவப் படவுமே." இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவ மன்னிப்பில்லை. இழந்து போகப்பட்ட நிலையில் இருந்த பாவியை கிருபையினாலே எடுத்து, இங்கே இந்த இரத்த அணுவின் மூலமாக அவனை இழுத்து, அவனுக்கு இங்கே பரிசுத்த ஆவியை அளிக்கின்றார். இந்த காரியம் ஒன்றை திறந்தெடுத்து அவனுக்கு பரிசுத்த ஆவியை அளிக்கின்றார். அப்பொழுது நாம் தேவனுடைய ராஜ்யத்தில் கிறிஸ்துவுடனே உடன் சுதந்தரருமாக இருக்கின்றோம். வியூ. உங்களுக்குள்ளாக இருக்கும் தேவனானவர் எழுந்து கொள்கிறாரா அல்லது உங்களையே சாகடித்து அதினாலே நீங்கள் அவரை அறிந்துகொள்ளும்படியாக உங்களை எழுப்புகின்றாரா? இரத்தத்தின் மூலமாக உங்களை இழுக்கின்றார், அந்த தெளிக்கப்பட்ட அந்த இரத்தத்தின் மூலமாக உங்களை இழுத்தார். 218. அந்த இரத்த அணுவிற்கு என்ன ஆயிற்று? அது அழிந்து போய் பெருக்கெடுத்து வெளியேறி ஓடிப்போனதா? இல்லை ஐயா. அது பீறிட்டு தெளிக்கப்பட்டது. அது திறந்து வெளியே வந்தது. அது திறந்தது, அதினாலே அநேக குமாரர்கள் பிறக்கும்படியாக அப்படி ஆனது. இந்த ஒரு இரத்த அணு, இந்த ஒரே மனிதனை தவிர வேறு யார் மூலமாக குமாரர்கள் பிறக்கவே முடியாது. 219. இந்த ஒரே ஆவியானவர் இந்த இரத்த அணுவுக்கு உள்ளே வந்து அதை சிருஷ்டித்து, அதைச் சுற்றிலும் அதைச் சுற்றிலும் அந்த விதமாக அவரை உண்டாக்கியது. யாருமே அதிலே பிரவேசித்ததில்லை, அதற்கு முன்னரும் யாராலும் பிரவேசிக்க முடியாது. ஆனால் தேவன் தாமே கீழே இறங்கி வந்து ஒரு முன்னணையிலே ஒரு குழந்தையாக உண்டாக்கப்பட்டார்; வளர்ந்து ஒரு மனிதன் ஆனார். எல்லாமே... எல்லாமே அந்த ஒரே இரத்த அணுவைச் சுற்றி சுற்றப்பட்டிருந்தது. அது அந்த விதமாக குத்தப்பட்டு கல்வாரியில் உடைக்கப் பட்டது; பாவம் அதை சிதறடித்தது. நீதிமானாக்கப்படுதலுக்காக தேவன் அவரை உயிரோடெழுப்பினார். இப்பொழுது அந்த ஆவியைச் சுற்றிலும்..... 220. அந்த அதே ஆவி இங்கே இன்றைக்கு பூமியில் ஜீவித்துக் கொண்டு இருக்கிறது. அது தம்மைச் சுற்றிலும் பீறித்தெறிக்கப்பட்ட இரத்தத்தை இந்த விதமாகக் கொண்டிருக்கிறது. அது கடினமான இறுகியிருக்கும் ஒன்றல்ல, நீங்கள் தாமே. உங்களால் உள்ளே நுழையும்படிக்கு ஏதுவாக அது இருக்கிறது. அது நீங்கள் உள்ளே வருவதற்கெனவே தளர்ந்ததாக உள்ளது. தளர்ந்த நிலையில் உள்ளது, ஏனென்றால் அவன் தானே உள்ளே வரும்படியாக உள்ளது. ஏன்? அது, ஒரு பாவியை உள்ளே இழுப்பதினாலே, இந்த இரத்த அணுவின் மூலமாக தம்மிடமாக இழுக்கின்றார்... "நான் உயர்த்தப்பட்டு இருக்கும் போது, எல்லாரையும் என்னிடத்தில் இழுத்துக் கொள்ளுவேன்" 221. ஆகவே அவர் அந்த பாவியை அந்த இரத்த அணுவின் மூலமக இழுக்கும் போது, அவர் தாமே அவனை எல்லா அநீதியிலிருந்தும் சுத்திகரிக்கின்றார் (அல்லேலூயா.), அவனை பரிசுத்த ஆவியைக் கொண்டு தமக்குள்ளாக கொண்டு வருகின்றார். அப்போது அந்த பாவி தாமே கிறிஸ்து இயேசுவுக்கு உள்ளாக ஒரு புது சிருஷ்டியாக இருக்கின்றான், அதற்குள்ளாக பரிசுத்த ஆவியினாலே அபிஷேகம் பண்ணப்படுகிறான். அவனை இங்கே உள்ளே இழுக்கின்றார். ஆகவே அதில் உள்ள மனிதனின் பாகம் தாமே தேவபற்றுறுதி உள்ளவனாக இருக்கின்றான். அவன் தேவனுடைய குமாரனாக இருக்கின்-றான். அவள் தேவனுடைய குமாரத்தியாக இருக்கின்றாள். உலகத்தின் எந்த ஒரு வாஞ்சைகள் எல்லாமே மரித்துப் போய் விடுகின்றது, எனென்றால் அவை தாமே... அவனுக்கும் உலகத்துக்கும் நடுவிலே இயேசு கிறிஸ்துவின் இரத்தம் உள்ளது. 222. அப்போது அவன் சகலத்தையும் விசுவாசிக்கின்றான், சகலத்தையும் நம்புகின்றான். அல்லேலூயா! தேவன் என்ன கூறுகின்றாரோ, அதையே அவன் கூறுகின்றான், "அது தான் சத்தியம். வாழ்வோ அல்லது சாவோ, அது என்ன வித்தியாசத்தை உண்டாக்கப்போகிறது? அது தான் சாத்தியம். நான் தொடர்ந்து முன்னே சென்று கொண்டிருக்கின்றேன்" என்று கூறுவான். வியூ! என்னை பொறுத்துக்கொள்ளுங்கள். நான் என் சொந்த சபையில் சிறிது விதிமுறைப்படி பிரசங்கியாமல் இயல்பாக பேசிக்கொண்டிருக்கின்றேன். ஆமென். ஓ, என்னே! நம்முடைய நம்பிக்கைகள் இயேசுவின் இரத்தத்திலும், நீதியிலுமேயன்றி வேறின்றின் மேலும் கட்டப்படவில்லை; என் ஆத்துமாவை சுற்றிலுமுள்ள யாவும் கைவிடும் போது, அவரே என் முழு நம்பிக்கையும் உறைவிடமுமாயிருப்பார். நான் நிற்கும் பாறை கிறிஸ்துதான் வேறஸ்திபாரம் ஸ்திரமற்ற மணல் தான் 223. அது பணமாயிருந்தாலும் சரி, அது புகழாயிருந்தாலும் சரி, ஒரு பெரிய பிரசங்கியாக இருந்தாலும் சரி, இதுவோ அல்லது மற்றெதுவோ அல்லது ஒரு டாக்டர் பட்டம் பெற்றவரோ அல்லது ஒரு பெரிய மோட்டார் வண்டியோ அல்லது இது, அது அல்லது மற்ற எதுவாக இருந்தாலும் சரி, எல்லாமே ஸ்திரமற்று அமிழ்த்தும் மணலே. என்னே! என்னே! 224. நான் என் தலை மயிர் நரைத்துக் கொண்டிருப்பதை அதிகமாக கவனிக்கையில், என் தலையில் மிச்சம் மீதி இருக்கும் தலை மயிரை காணும் போது, என் சரீர மாம்சம் நலிவுற்று மெலிவதை நான் காண்கையில். என் ஒரே நம்பிக்கை அங்கே அதற்குள்ளாக தான் இருக்கின்றது. 225. கர்த்தராகிய இயேசுவே, என் கரம் பிடித்து என்னை தொடர்ந்து நடத்தும். தேவனே, கர்த்தாவே, நான் தொடர்ந்து முன்னே போகட்டும், உலகத்தின் எந்த ஒன்றிற்கும் நான் கவனம் செல்லுதாமல், என் விசுவாசத்தை துவக்கினவரும் முடிக்கிறவருமாக இருக்கின்ற கிறிஸ்துவை நோக்கி பார்த்துக் கொண்டு இருப்பேனாக; அவர் தாமே தம்முடைய சொந்தமானவர்களுக்காக, தேவனுடைய மகிமைக்காக, தம்முடைய சொந்த ஜீவனை சாகக் கொடுத்தார், அதினாலே அவர் தாமே தம்மை பலியாக ஒப்புக் கொடுத்து, என்னை அவருடனே கூட ஐக்கியத்திற்குள்ளாக கொண்டு வருவதற்காக அப்படியாகச் செய்தார். 226. ஹ்ம்ம்! அது தான் காரியமாகும். பாவிகளால் அதைப் பார்த்த பிறகு எப்படியாக அவர்களால் கடந்து செல்ல முடியும்? நான் நினைப்பதற்கு மேலாக அதற்கு அப்பாற்பட்டு காணப்படுகின்ற ஒன்றாகும். 227. சரி. இப்பொழுது சற்று சீக்கிரம் பார்ப்போமாக. நாம் முடிக்கும் முன்பாக சற்று வேகமாக பார்ப்போமாக. அந்த நம்பிக்கை நமக்கு... (19-ஆம் வசனம்).... ஆத்தும நங்கூரமாகயிருக்கிறது... 228. இதோ அது இங்கே கூறுகின்றது.... ஆத்தும நங்கூரமாக இருக்கிறது. அந்த நம்பிக்கை நமக்கு... ஆத்தும நங்கூரமாக இருக்கிறது. நங்கூரமிடப்பட்டு இருக்கின்ற எந்த ஒன்றும் ஒருபோதும் அசையவே முடியாது. என்னை அப்படியே நிலையாய் வைத்திருக்கின்ற ஒரு நங்கூரம் எனக்கு இருக்கிறது கடல் அலைகள் மோதி அடிக்கும் போது உறுதியாகவும் நிச்சயமாகவும் வைத்திருக்கிறது. என்னை நிலையாய் வைத்திருக்கின்ற அந்த கன்மலையின் மேல் நங்கூரமிடப்பட்டிருக்கின்றேன், இரட்சகரின் அன்பில் பாதுகாப்பாகவும் நிச்சயமாகவும் நிறுத்தப்பட்டுள்ளேன். 229. இந்த நங்கூரம். அந்த பீறிட்டு தெளிக்கும் இரத்தத்திற்கு அப்பாலே நான் இருந்த போது, ஒரு நாளிலே தேவன் இந்த பரிதாபத்திற்குரிய இழக்கப்பட்ட பாவியை எடுத்தார், அந்த பீறிட்டு தெளித்துக் கொண்டிருக்கும் இரத்தத்தின் மூலமாக அவனை இழுத்துக்கொண்டார், ஆம், ஐயா, அவனை இங்கே கொண்டு வந்தார், என்னை அதிலே நங்கூரமிட்டார், என்னை சுற்றிலும் கரங்களை போட்டுக் கொண்டார். எல்லா காரியங்களும், காரியம் எதுவாக இருந்தாலும் சரி, "என் ஆத்துமா உம்மையே நோக்கிப் பார்க்கின்றது." பாருங்கள்? நிலையும் உறுதியுமான நங்கூரம் நமக்குண்டு." அந்த நம்பிக்கை நமக்கு நிலையும் உறுதியும் திரைக்குள்ளாகப் போகிறது-மான ஆத்தும நங்கூரமாயிருக்கிறது 230. ஒவ்வொரு விதமான போதனைகளாலும் (doctrine) ஒவ்வொரு விதமான காற்றினாலும், ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்திற்கு அசைவாடிக் கொண்டிருப்பது என்றல்ல, இந்த புறமான காரியத்துடன் சேர்ந்து கொள்ளுதல், பிறகு அந்த புறமான காரியத்துடன் சேர்ந்து கொள்ளுதல், அதன் பிறகு எங்கு நிற்கின்றோம் என்று தெரியாமல் இருப்பது. வேதாகமம் "நீங்கள் ஸ்திரப்படு வதற்காக நான் இதை செய்தேன்" என்று கூறுகிறது. "ஆம் சரி, இன்று நான் இதில் இருக்கின்றேன், பிறகு நாளைக்கு வேறே ஒன்றில் இருப்பேன்" என்று கூறுவதல்ல. 231. கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக உங்கள் ஆத்துமாவை நங்கூரமிடுங்கள். மறுபடியும் பிறவுங்கள், தேவனுடைய ஜீவன் உங்களுக்குள் ஜீவித்து அதினாலே எந்த ஒரு சந்தேகத்திற்கும் இடமில்லாமல், மரணத்தை விட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறீர்கள் என்பதாக இருக்கட்டும். உங்கள் முழு நம்பிக்கையும் கல்வாரியில் கட்டப்பட்டிருப்பதாக. தேவனுடைய அன்பு உங்கள் இருதயத்தின் மூலமாக ஊற்றப்படுவதாக. தேவன் கூறும் ஒவ்வொரு வார்த்தையும் உண்மை என்று நீங்கள் விசுவாசிப்பீர்கள். அதின் எந்த ஒரு சொற்றொடருக்கும் நீங்கள் மரிக்கவும் விருப்பமாயிருப்பீர்கள். நான் என்ன கூற விழைகிறேன் என்று உங்களால் காண முடிகின்றதா? உறுதியாயும் நிலையாகவும். இப்பொழுது, கவனியுங்கள். நான் அதை உங்களுக்கு மறுபடியும் வாசிக்கட்டும். அந்த நம்பிக்கை நமக்கு நிலையும் உறுதியும் - (அதை எப்படி கூறுவது) - திரைக்குள்ளாகப் போகிறதுமான ஆத்தும நங்கூரமாயிருக்கிறது 232. அந்த திரையானது எதை உள்ளடிக்கிக் கொண்டிருக்கிறது? எந்த திரையைக் குறித்து குறிப்பிடுகிறேன் தெரியுமா? அந்த இரத்தம், அந்த இரத்தம் என்னும் திரை! நாம் கிழிக்கப்பட்ட திரையை கடந்தோம், அங்கே மகிமையானது மங்கவே மங்காது. நாம் இங்கே பாடுகின்ற அந்த பாடல் உங்களுக்கு தெரியுமா? அல்லேலூயா அல்லேலூயா. நான் கிழிக்கப்பட்ட அந்த திரையை கடந்து சென்றேன் அந்த இரத்தம், அவர் விலாவில் கிழிக்கப்பட்ட போது வெளி வந்தது நான் கிழிக்கப்பட்ட திரையை கடந்து சென்றேன், அங்கே மகிமையானது மங்கவே மங்காது. அல்லேலூயா. அல்லேலூயா நான் அந்த ராஜாவில் பிரசன்னத்தில் வாழ்கின்றேன். நான் கிழிக்கப்பட்ட அந்த திரையை கடந்து சென்றேன், அங்கே மகிமை மங்கவே மங்காது. 233. எனக்கு தொல்லைகள் இந்த வழியாகவோ அல்லது அந்த வழியாகவோ வந்தாலும், அந்த மகிமைகள் ஒருபோதும் மங்காது, தவறாது. நான் கிழிக்கப்பட்ட திரையை கடந்து சென்றேன், அங்கே மகிமையானது மங்கவே மங்காது. அல்லேலூயா அல்லேலூயா நான் அந்த ராஜாவின் பிரசன்னத்தில் வாழ்கின்றேன். 234. தம்முடைய குமாரனாகிய கிறிஸ்து இயேசுவின் விலாவில் குத்தப்பட்டு கிழிக்கப்பட்ட போது அதின் மூலமாக என்னை தம்முடன் ஐக்கியத்திற்கு உள்ளாக அவர் என்னை கொண்டு வந்தார், அவரின் ஒரு பாகமாக என்னை ஆக்கினார், எல்லா காரியங்களையும் விசுவாசிக்கும்படி செய்தார், அவரை நம்பும்படிக்குச் செய்தார், அங்கே நிற்கும்படிக்குச் செய்தார்; மகிமைகள் ஒரு போதும் மங்காது, தவறாது. அவரிடத்தில் அன்பு கூறுகிறவர்களுக்கு சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறது, ஆகவே மகிமைகள் ஒருபோதும் மங்கவே மங்காது, தவறாது. நான் கிழிக்கப்பட்ட திரையை கடந்து சென்றேன், அங்கே மகிமையானது மங்கவே மங்காது. அல்லேலூயா. அல்லேலூயா. நான் ராஜாவின் பிரசன்னத்தில் வாழ்கின்றேன். 235. அதன் மேல் தான் என் நம்பிக்கைகள் யாவும் உறுதியாக கட்டப்பட்டு உள்ளன. என்னை இரட்சித்த அந்த இரத்தத்தின் மூலமாக நான் வந்தேன். என்னை சுகமாக்கின அந்த இரத்தத்தின் மூலமாக வந்துள்ளேன். நான் இங்கிருக்கும் போது, எனக்கு என்னவெல்லாம் தேவைப்படுகிறதோ, அந்த காரியங்களை, தன்மைகளையெல்லாம் கல்வாரியிலிருந்து எனக்கு அளிக்கப் படும்படிக்கு கேட்கின்றேன், அவைகள் எல்லாமே என்னுடையவைகள். அவைகள் எல்லாமே எந்த ஒரு விலையுமின்றி தாராளமாக என்னுடையவைகள் ஆகும். அவைகளை பிதாவானவர் எனக்கு அளிக்க முடியவில்லை என்றால், ஏன் அதை அவர் அளிக்கவில்லை என்று எனக்குத் தெரியப்படுத்துவார். என் விசுவாசம் இன்னுமாக நேராக அவரை நோக்கி பார்த்துக் கொண்டு, "கர்த்தாவே, எனக்கு எது சிறந்ததென்று உமக்குத் தெரியும், ஆகவே நான் என்னையே உம்மிடமாக சமர்ப்பிக்கின்றேன். இதோ நான் இங்கு இருக்கின்றேன்" என்று கூறுவேன். ஆமென். ஓ, அது தான் காரியமாகும். என் நம்பிக்கை அவருக்குள் இருக்கின்றது, பரலோகத்தின் தேவனாகிய அவருக்குள் இருக்கின்றது. 236. இப்பொழுது கவனியுங்கள். நமக்கு முன்னோடினவராகிய.... ஓ, என்னே. இங்கே சற்று கவனியுங்கள், பாருங்கள். நான் இதை கவனிக்கவே இல்லை. இங்கே இந்த கடைசி வசனத்தை கவனியுங்கள், 20-வது வசனத்தை. வியூ! என்ன ஒரு அற்புதமான காரியம் பாருங்கள். நமக்கு முன்னோடினவராகிய - (முன்னோடினவர்) இயேசு. மெல்கிசேதேக்கின் முறைமையின்படி நித்திய பிரதான ஆசாரியராய் நமக்காக அந்தத் திரைக்குள் பிரவேசித்திருக்கிறார். 237. "அந்த முன்னோடி," அந்த மனிதன் நமக்கு முன்னே சென்றார், வந்து நமது இடத்தை எடுத்துக்கொண்டவர், தேவன் தாமே தவிர வேறே யாரும் இல்லை. மக்களிடமாக அதை தத்ரூபமான ஒன்று என்று காட்டத்தக்கதாக, அவரே கீழே இறங்கி வந்தார் முன்னோடினவராக இருக்கும்படிக்கு தம்மை ஒரு மனிதனாக ஆக்கிக்கொண்டார். 238. ஏன்? தாம் அதைச் செய்யப் போவதாக ஒரு உடன்படிக்கையினாலே ஆணையிட்டார். அவர் நம்மை இரட்சிக்கப் போகின்றார் என்று அவர் ஆணையிட்டு கொடுத்தார். நம்மால் அதைச் செய்ய முடியும் என்று அவர் ஆணையிட்டு கொடுத்தார். அவர் இந்த காரியங்களை நமக்கென்று தாமாகவே அவர் ஆணைட்டுக் கொடுத்தார். 239. அவர் கீழே இறங்கி வந்தார், ஒரு முன்னோடியாக ஆக்கப்பட்டார். அவர் தம்மைத் தாமே ஒரு முன்னோடியாக ஆக்கிக்கொண்டார். அவர் இங்கே உலகத்திற்குள்ளே வந்தார், உலகத்தில் வாழ்ந்தார், அவரைச் சுற்றிலும் பாவம் இருந்தது, ஆனாலும் பாவத்திற்கு மேலே வாழ்ந்தார், ஏனென்றால் அவர் தேவனை நம்பினார். அது சரிதானே? 240. பிறகு அவர் கீழே சென்றார் - ஒரு பாவியாக மரித்தார், ஒரு சிலுவையில் ஆணியினால் கடாவப்பட்டிருந்தார். அவர் மரித்தார் என்று ஒவ்வொரு மாம்சத்திற்குரிய காரியமும் காண்பித்தது. அவர்கள் அவரை அடித்தனர். அவரை அங்கே அவர்களை தொங்க விட்டனர். ஆம், அவர் மரிக்கும்படியாக இரத்தம் பெருமளவில் வெளியேறினது. பிறகு அவர்கள் அவரை சுற்றி பார்த்த போது, அவர் மரித்திருந்தார். வானங்கள் அவர் மரித்தார் என்று அறிவித்தது. அவர் மரித்தார் என்று பூமியும் அறிவித்தது. அவர் மரித்தார் என்று ஒவ்வொன்றும் பிரகடனம் செய்தது. 241. ரோம போர்ச்சேவகன் அவருடைய இருதயத்திற்குள்ளாக ஒரு ஈட்டியை குத்தினான், அப்போது அதிலிருந்து அவருடைய இரத்தம் வெளி வந்து பெருக்கெடுத்து ஓடினது, இரத்தமும் தண்ணீரும் வெளிவந்தது, அந்த இரண்டும் வேறு பிரிக்கப்பட்டிருந்தது, அது துக்கத்தை காண்பித்தது. அவர் மரித்தார் என்று அது கூறினது. அந்த தண்ணீர் - கவனியுங்கள், அந்த மனிதன் அங்கே தொங்கிக் கொண்டிருந்து, இரத்தமும் தண்ணீரும் பெருக்கெடுத்து வெளியே ஊற்றப்பட்ட போது, அது என்ன காண்பித்தது என்றால், இரத்தமும் தண்ணீரும் வேறுபிரிக்கப்பட்டது என்று காண்பித்தது. அல்லேலூயா. அவர் மரித்திருந்தார். அவர் பட்டயத்தால் மரிக்கவில்லை. அவர் குத்தப்பட்டதால் மரிக்கவில்லை. அவர் துக்கத்தால் மரித்தார். 242. இரத்தத்தையும் தண்ணீரையும் வெவ்வேறாக பிரிக்கும்படி உலகத்தில் வேறு எந்த ஒன்றுமே இல்லை. நீங்கள் விஞ்ஞானத்தில் தேடிப்பார்க்கலாம், அல்லது எந்த ஒரு மருத்துவரையும் கேட்கலாம். அது மிகுந்த துயரமான சமயத்திலே மாத்திரம் அப்படி நடக்கும் என்று கூறுவார், சில சமயங்களில் மக்கள் மிகவுமாக கடும் துயரத்தினால் அவதியுற்று அப்போது தாமே உங்களுக்கு தெரியும், வேதனை துக்கங்கள் மற்றும் அது போன்ற காரியங்கள் தான், சில சமயங்களில் மாரடைப்பு வர காரணமாயிருக்கும், இரத்தமும் தண்ணீரும் வெவ்வேறாக பிரிகையில் அது அவர்களை கொன்று விடும். 243. ஆகவே அதுவே தான் கர்த்தராகிய இயேசுவை கொன்றது. அவர் யேகோவாவின் கரத்தில் மரித்தார் (அது சரி.), ஒரு முழு தண்டனைத் தீர்ப்பாகும், நீதியாகும், ஏனென்றால் தேவனுக்கு நீதி தேவையாயிருந்தது. அது சரி. 244. ஆகவே எந்த ஒரு மனிதனாலும் அவருடைய ஜீவனை எடுத்துப்போட முடியாது. ஆகவே அவர் "நான் என் ஜீவனை மரிக்கும்படிக்கு கொடுக்கிறேன். எந்த ஒரு மனிதனாலும் அதை எடுத்துப்போட முடியாது. நானே ஜீவனை கொடுப்பேன், பிறகு நானே அதை மறுபடியுமாக உயிரோடெழுப்புவேன்" என்று கூறினார். 245. ஆகவே தேவன் தாமே எந்த ஒரு பூமிக்குரிய மனிதனும் அடையாத அந்த கடுமையான, மிகவும் கொடூரமான மரணத்தின் மூலமாக காண்பித்தார், முன்னோடியானவராகிய இயேசு கிறிஸ்துவை தேவன் ஓடச்செய்தார். அவர் ஒரு மனிதனாக இங்கே கீழே வந்தார். அவர் வாழ்ந்தார். உணவு சாப்பிட்டார். தண்ணீர் குடித்தார். அவர் அழுதார். அவர் உறங்கினார். மனிதரைப் போலவே நம்மோடே களிகூர்ந்தார். பிறகு அவர் சிலுவையில் அறையப்பட்டு மரித்தார், தைலமிடப்பட்டார். ஒரு பட்டயத்தாலே அவருடைய சரீரத்திலிருந்து இரத்தம் வெளியே இழுக்கப்பட்டது. அவர் ஒரு சீலையால் சுற்றப்பட்டார், கல்லறையில் வைக்கப்பட்டார். மூன்று பகல் மூன்று இரவுகள் கல்லறையில் வைக்கப்பட்டிருந்தார். அவருடைய ஆத்துமா பாதாளத்திற்கு சென்றது. வேதம் அவ்விதமாக கூறியுள்ளது. ஆம், ஐயா. 246. ஆனால் அதன் பிறகு அவர் மறுபடியுமாக உயிரோடெழுந்தார். தேவன் தாமே தம்முடைய பரிசுத்தரின் அழிவைக் காணவொட்டார், அவருடைய ஆத்துமா பாதாளத்தில் இருக்கவும் விடமாட்டார். நாம் நீதிமான்களாக்கப் படுவதற்காக அவர் தாமே இயேசுவை மூன்றாம் நாளிலே உயிரோடு எழுப்பினார், நம்முடைய நீதிமானாக்கப்படுதலுக்காக அவரை உயரே எழுந்தருளப் பண்ணினார். ஜீவிக்கையில், அவர் என்னை நேசித்தார்; மரிக்கையில், அவர் என்னை இரட்சித்தார்; அடக்கம் பண்ணப்படுகையில், என் பாவங்களை தூர கொண்டுச் சென்றார்; உயிர்த்தெழுந்த போது, அவர் நீதிமானாக்கினார். 247. எல்லா காரியமும்! ஒரு முன்னோடியானவராக! தேவன் அவரை உயிரோடெழுப்பின போது, அந்த ஜீவனின் பாகத்தை கொண்டிருக்கின்ற ஒவ்வொருவரையும் கடைசி நாளிலே உயிரோடெழுப்ப அவர் கடமைப் பட்டுள்ளார். 248. அந்த முன்னோடியானவர்! அவரை தம்மோடே மேலே பரலோகத்திற்கு உள்ளாக எடுத்து, அவரை தாமே, தம்முடைய வலது பாரிசத்திலே வல்லமை யோடும் மகத்துவத்திலும் உட்கார வைத்தார், அவரை ஒவ்வொரு சந்திரனுக்கும், நட்சத்திரங்களுக்கும், தூதர்களுக்கும், பிரதான தூதர்களுக்கும் மேலாக அவரை உட்காரும்படிக்குச் செய்தார். 249. இருந்ததிலேயே மிகவும் உயர்ந்ததான ஒன்றானது, இருப்பதிலேயே மிகவும் கீழான ஒன்றாக ஆகினது, அதினாலே அவர் தாமே இருத்திரத் தாருக்கும் இடையே இருக்கும் ஒன்றாக அந்த இடத்தை தாம் எடுக்கவும் அதினாலே உலகத்தாரை தமக்கு ஒப்புரவாக்கும்படியாக அப்படியாகச் செய்தார். தேவன் தாமே... அதைப் பற்றி உங்களால் சிந்தித்துப் பார்க்க முடிகின்றதா? பரிசுத்தமும் மற்றும் உன்னதமானவரான, மிகவும் உன்னத-மானவரான அவர் தாமே, தம்மை விட சிறிது குறைவான அளவிலான ஒரு மனிதனை உண்டாக்கினார். 250. மனிதன் அப்படியே இங்கே கீழே விழுந்து போனான். செம்மறியாடு மற்றும் வெள்ளாடுகளின் இரத்தமானது அவனை இது (potentially) வரைக்குமாக அப்படியே பிடித்து வைத்திருந்தது... பிறகு தேவன் தாமே பரலோகத்திலிருந்து கீழே வந்தார், ஒரு தூதன் அல்ல, ஒரு கேருபீன் அல்ல, ஆனால் மனிதனை பாதாளத்திலிருந்து பரலோகத்திற்கு தம்முடனே அழைத்துச் செல்ல, தேவனே பரலோகத்திலிருந்து வந்து பாதாளம் வரைக்குமாக சென்றார். காணாமல் போன ஆட்டை தேடி வந்தார். அதை கண்டெடுத்தார், அதனை தம் தோளின் மீது வைத்தார், அவனுடனே ஏணியில் மேலே ஏறினார், மகிமையை நோக்கி சென்று கொண்டிருந்தார் "நான் பூமியிலிருந்து உயர்த்தப்பட்டிருக்கும் போது, எல்லாரையும் என்னிடத்தில் இழுத்துக்கொள்வேன்". 251. அவர் யாராக இருந்தார்? நாம் அதை அடுத்த ஞாயிறு, கர்த்தருக்கு சித்தமானால் பார்ப்போம். "மெல்கிசேதேக்கின் முறைமையின்படி உண்டாக்கப் பட்ட ஒரு ஆசாரியர்." யார் இந்த இயேசு? நாட்களின் துவக்கமும் வருடங்களின் முடிவுமில்லாத மெல்கிசேதேக்கு. அவருக்கு தகப்பனும் தாயும் இல்லை. "மரியாள் அவருடைய தாய்" என்று நீங்கள் கூறினீரே. 252. ஓ, சகோதரனே. அவர் உலகத் தோற்றத்திற்கு முன்னர் அடிக்கப்பட்ட ஆட்டுக் குட்டியாக இருந்தார். மரியாள் இருப்பதற்கு முன்னதாகவே அவர் இருந்தார். ஆமென். நான் அவரைக் கண்டு, முகத்தை ஏறிட்டு பார்க்க விரும்புகிறேன், அவர் தம் இரட்சிக்கும் கிருபையைப் பற்றி சதாகாலம் பாடுவேன் மகிமையின் தெருக்களில் நான் என் சத்தத்தை உயர்த்தி, கவலைகள் ஒழிந்தன, என்றென்றும் மகிழ்ந்திட முடிவில் வீடு சேர்ந்தேன் என்று கூறுவேன். 253. "அப்படியானால் நீங்கள் ஏன் அக்கறை கொண்டுள்ளீர், சகோ. பிரன்ஹாம்? ஏன் நீங்கள் இவ்வளவு கடினமாக பிரசங்கம் செய்கிறீர்? நீங்கள் இந்த காரியத்தை செய்யும் போது....?" 254. ஓ, நான் திருப்தியடைந்தவனாக சென்று கொண்டேயிருக்க முடியாது. நான் என்ற மாத்திரமாகவே சென்று கொண்டிருக்கக்கூடாது. இந்த கைகள் ஒரு முறை தான் அழிவுள்ள மானிட பாகமாக இருக்கும். இந்த உதடுகள் ஒரு முறை மாத்திரமே அழிவுள்ள மானிட பாகமாக இருக்கும். ஆகவே என் சகோதர சகோதரிகளாகிய நீங்கள் ஒரேயொரு முறை தான் மானிடராக பிறக்கப்போகிறீர்கள். 255. ஆகவே ஆவியானவர் தாமே எனக்குள்ளாக இருக்கையில், மிகவும் களைப்புற்ற தசைகளின் மூலமாகவும் மற்றும் கடின உழைப்பின் நேரங்களிலும் உங்களை நோக்கி உரக்க அழைத்துக் கொண்டிருக்கின்றது, அது ஒரே காரியத்துக்காக மாத்திரம் தான். அது உங்களை இங்கே இந்த ஐக்கியத்துக்குள்ளாக கொண்டு வரத்தான், உங்களை சபைக்குள்ளாக கொண்டு வர அல்ல, ஆனால் உங்களை கிறிஸ்துவுக்குள்ளாக கொண்டு வரும்படிக்கு தான், அதில் தானே உங்களுக்கு ஒரு நம்பிக்கையை, நிலையுறுதியை, ஒரு நிச்சயத்தை நீங்கள் பெறும்படிக்கு தான் இதை செய்கிறேன். 256. தேவனுடைய ஆணையின் பேரிலே அது நங்கூரமிடப்பட்டு இருக்கிறது. அவர் அதை உறுதிப்படுத்தியிருக்கிறார், முன்னோடியாகவும் அவர் தாமே முன்னோடி, தாம் யார் என்பதை காண்பித்தார், மேலும் முடிவில், அப்போது இருந்த அந்த நாளிலே அவரை உயிரோடெழுப்பினார், உயிர்த்தெழுந்தார். அது தாமே, அவருக்குள்ளாக இருக்கின்ற நாம் தாமே உயிர்த்தெழுதலில் வருவோம் என்பதை அது நிரூபணம் செய்தது. ஆகவே இந்த திரையின்... திரையினூடாக இப்பொழுது வருகின்ற ஒவ்வொரு மனிதனும், தேவனுடைய பார்வையில் நீதிமானாக்கப்பட்டு இருக்கின்றான், தேவன் கீழே நோக்கிப் பார்த்து, "நான் அவனை ஏற்கெனவே மகிமைப்படுத்தியிருக்கிறேன். அங்கே மேலே பரலோகத்தில் வைத்துள்ளேன்" என்று கூறுகின்றார். உங்களால் அதை காண முடிகின்றதா? 257. என்னால் தவறாக சொல்ல முடியாது. எனக்குள் இருக்கும் ஒன்றானது நான் தவறானதை செய்ய என்னை விட்டு விடாது. அவர் தாமே ஓ, நிச்சயமாக, நான் இங்குள்ள இந்த சிறு சபைக்கு திரும்ப வந்து, அதை இங்கே தாமே விரித்து வைத்து உங்களுக்கு காண்பிக்க என்னால் கூடும், சகோதரன் நெவிலும் மற்றும் நானும் சேர்ந்து இங்கு அதை செய்ய முடியும். மேலும் ஒருக்கால் என் பிள்ளைகள் பட்டினியாக இராமல் இருக்க என்னால் பார்த்துக் கொள்ள முடியும். நிச்சயமாக. அது சரியே. என்னால் அதைச் செய்ய முடியும். ஆம் இன்று நான் ஒருக்கால் வெளியே சென்று நாடு முழுவதுமாக சென்று வர விரும்புவேனானால், அதற்காக எனக்கு ஒரு லட்சம் டாலர் பணம் கொடுக்க போதுமான நண்பர்கள் உலகத்தில் உள்ளனர். அந்த பணம் என்னுடைய எஞ்சியுள்ள நாட்களுக்கு போதுமானதாக இருக்கும், நான் நூறு வயது வாழ்வதற்கு அது போதுமானதாக இருக்கும். ஒரு லட்சம் டாலர் என் வாழ்க்கையை தொடர உதவும், இன்னும் சிறிது, ஓ, இங்கும் அங்குமாக சற்று பிணைத்துச் செல்ல உதவும், ஒருக்கால் சிறிது மிருகங்களை பிடித்தல், வேட்டையாடுதல், மற்றும் அதைப் போன்றவைகளை செய்வேன், கோடை காலத்தில் பிளாக்பெரி பழங்களை பறிப்பேன். என்னால் வாழ்க்கை நடத்தும் படிக்கு அப்படியாக சில காரியங்களை நான் செய்வேன். நான் அதைச் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அது உண்மை. ஆனால், ஓ, என்னே! ஓ, அது நான் எந்த இடத்திற்கும் செல்ல என்னை அசைப்பதேயில்லை. 258. ஆனால் இங்கே இதற்கு உள்ளாக இருக்கின்ற ஏதோ ஒன்று, அங்கே குஷ்டரோகத்தினால் பீடிக்கப்பட்டு மெலிந்த குச்சியைப் போல உள்ள கைகளைக் கொண்ட அந்த பரிதாபத்திற்குரிய அஞ்ஞானியை நோக்கிப் பார்க்கின்றது, பசியுடனே, தன் கரங்களை நீட்டுகின்ற அந்த சிறிய பிள்ளையை பார்க்கின்றது. நீங்கள் மாத்திரம் அவர்களிடமாக ஒருவர் உங்களை நேசிக்கின்றார் என்று கூறுவீர்களானால், அவர்கள் இரவு ஆகாரம் இல்லாமல் இருப்பர், எந்த ஒன்றுமே இல்லாமல் இருப்பர். அவர்கள் நாய்களைப் போல மரிக்கின்றனர். அவர்கள் மிருகங்களைப் போல குழிகளில் புதைக்கப்படுகின் றனர், தேவனைக் குறித்து அவர்களுக்கு ஒன்றுமே தெரியாதிருக்கின்றது. ஒரு நாளுக்கு நாற்பதாயிரம் பேர் மரிக்கின்றனர். 259. ஓ, தேவனே, என்னால் எப்படி அதைச் செய்ய முடியும்? நான் தானே அப்படியே இருந்து இன்னும் வாலிபமாகி, எல்லா நேரமும் அதனோடே அப்படியே தரித்திருந்து, அவர் என்னை எடுக்க அவர் தாமே ஆயத்தமாகும் வரைக்குமாக அப்படியே இருக்க விரும்புகிறேன். நான் தானே பிரசங்கித்து, பிரசங்கித்து, பிரசங்கித்து, அழுது மன்றாடி மக்களை கொண்டு வர முயற்சிப்பேனாக. பாருங்கள், அமெரிக்க மக்களே, நீங்கள் அவர்களிடமாக எந்த காரியம் வேண்டுமானாலும் சொல்லுங்கள், அவர்கள் அதை விசுவாசிப்பார்கள். 260. அமெரிக்க மக்களாகிய நீங்கள் தாமே அங்கே உள்ளே சென்று, அவர்களிடமாக சத்தியத்தை அவர்களுக்கு காண்பித்து அது எங்கே உள்ளது என்று கூற வேண்டியவர்களாக இருக்கின்றீர்கள், சரியாக இங்கே உள்ளது. அவர்கள் அங்கே சென்று ஒரு சபையைச் சேர்ந்து கொண்டு, "ஆம், நான் உங்களைப் போலவே அருமையாக இருக்கின்றேன். அதைக் குறித்து எனக்கு கவலையில்லை " என்று கூறுகின்றனர். ஓ, என்னே. 261. நான் அதைக் காண்கையில், "சரி சகோதரனே. அது சரி தான்" என்று நான் கூற விரும்புகிறேன். ஆனால் என்னால் அதைச் செய்ய முடியவில்லை. 262. அவன் இங்கு இல்லாவிடில், அவன் இழந்து போன நிலையில் உள்ளான் என்று எனக்குத் தெரியும். அவன் இழக்கப்பட்டு விட்டான். அவனை இரட்சிக்க முடியாது. அவனை இரட்சிக்க எந்த ஒன்றுமே அங்கு இல்லை. இரட்சிப்பு இங்கே உள்ளது, பீறிட்டு தெறிக்கும் இரத்தத்தின் மூலமாக, இரத்தத்தின் மூலமாக, கிழிக்கப்பட்ட திரையின் மூலம் தான் இரட்சிப்பு. அவர் தாமே நம்மை இங்கே உள்ளே கொண்டு வந்தார். நம்மை தேவனுடைய குமாரர்களும் குமாரத்திகளுமாக்கினார். எனக்குத் தெரிந்த வரைக்கும் அது ஒரே காரியம் தான், அந்த ஒரு வழி தான் உள்ளது. தேவனே, இரக்கமாயிரும். 263. ஒரு நாளிலே அது முடிவு பெறப்போகிறது. நான் கடைசி தடவையாக பிரசங்கம் செய்வேன், அந்த பழைய வேதாகமத்தை கடைசி தடவை மூடுவேன், (அது சரியே) அல்லது அவைகளில் ஒன்றை. அது சரி. நான் என் கடைசி பாடலை பாடுவேன். என் கடைசி பிரசங்கத்தை நான் பிரசங்கிப்பேன். கடைசியாக வியாதியுள்ள ஒரு நபருக்கு ஜெபம் செய்வேன். எல்லா காரியத்தையும் செய்வேன். ஒரு காலம் அதை முடிவுக்கு கொண்டு வரும், அப்போது நான் இன்னுமாக அழிவுள்ள சரீரம் கொண்ட ஒருவனாக இருக்க மாட்டேன். இங்கே என் சரீரத்தில் அழிவுள்ள மானிட வாழ்க்கையின் சக்கரமானது சுழன்று கொண்டிருக்கின்றது, என் கரங்கள் நீட்டும் படிக்கும், என் கண்கள் பார்க்கும்படிக்கும், என் உதடுகள் பேசும்படிக்கும், இன்னும் பிறவற்றையும் செய்யும்படிக்கும் அது உந்துகின்றது. சுழன்று கொண்டிருக்கும் ஒவ்வொரு சக்கரமும் அப்படியே நின்று விடும். அவ்வளவு 264. ஆனால் சகோதரனே, உள்ளாக இருக்கின்ற ஏதோ ஒன்றானது எங்கோ சென்று கொண்டிருக்கின்றது, இன்னும் மேலே சிறிது மேலே சென்று கொண்டு இருக்கின்றது. அங்கே கைகளால் செய்யப்படாத, ஆனால் தேவனுடைய சாயலிலே இருக்கின்ற ஒரு சரீரமானது எனக்காக அங்கே காத்துக் கொண்டு இருக்கின்றது. நான் அந்த நதியண்டை நிற்பேன் என் பாதங்களை வழிநடத்தும், என் கரத்தை பிடித்து கொள்ளும் விலையேறப்பெற்ற கர்த்தாவே, என் கரத்தை பிடியும், என்னை தொடர்ந்து வழி நடத்தும். (அது சரியே.) பாதை இருளார்ந்த நிலையை அடையும் போது, விலையேறபெற்ற கர்த்தாவே, அருகிலேயே 265. அவர் தான் என் அருகில் நிற்கவே நான் விரும்புகிறேன். ஒரு மருத்துவரோ அல்லது வேறு எவருமே இல்லை என்றாலும் எனக்கு கவலை இல்லை. "கர்த்தாவே, என்னோடு இரும்." என் வாழ்க்கை ஏறக்குறைய போனாலும், என் மூச்சு வேகமாகக் குறைந்து கொண்டே போகும் போது, என் நாடித்துடிப்பு குறைந்து கொண்டேயிருக்கையில், என் மனைவியும் பிள்ளை-களும் கட்டிலைச் சுற்றிலும் நின்று ஒன்றும் செய்ய இயலாமல் தங்கள் கரங்களை பிசைந்து கொண்டிருக்கையில், என் நண்பர்கள் நோக்கிப்பார்த்துக் கொண்டு "ஓ, சகோ.பிரன்ஹாம்..." என்று கூறிக்கொண்டிருக்கையில். நதியண்டையில் நான் நின்று கொண்டிருப்பேன், என் பாதங்களை வழிநடத்தும், என் கரத்தை பிடித்துக் கொள்ளும், விலையேறப்பெற்ற கர்த்தாவே, என் கரத்தை பிடித்துக் கொள்ளும், என்னை தொடர்ந்து வழி நடத்தும். 266. என் நம்பிக்கை சரியாக அங்கே தான் கட்டப்பட்டுள்ளது, ஆபிரகாமுக்கு வாக்குத்தத்தம் செய்து கொடுத்து, ஆணையிட்டுக் கொடுத்த அவரின் மீது கட்டப்பட்டுள்ளது, நான் இதை ஏற்றுக்கொள்வேனானால், நான் மறுபடியும் பிறப்பேன். உலகப்பிரகாரமான பூமிக்குரிய காரியங்கள் எல்லாமே மறைந்து போகும். மனிதனின் எல்லா வேதாகம் கலாசாலை கொள்கைகளும் மறைந்து போகும். நான் தேவனை விசுவாசிப்பேன், தேவனை மாத்திரம் விசுவாசிப்பேன், அவரின் பேரிலே தான் நான் நிற்பேன். என் பாதையின் முடிவில் நான் வரும் போது, நான் சரியாக என்னை ஒரு பாவியான நிலையிலிருந்து ஒரு கிறிஸ்தவனாக மாற்றின அந்த இயற்கைக்கும் மேம்பட்ட வல்லமைக்கு உள்ளாக நான் நிற்பேன். அந்நாளிலே நான் அவரில் நம்பிக்கை வைத்து இருப்பேன், என்னுடைய எல்லாவற்றிற்கும் அவர் பேரிலே நம்பிக்கையா இருப்பேன். 267. ஆகவே என் சகோதரனே, சகோதரியே, நீங்கள் இன்னுமாக அப்படியே செய்யாதிருப்பீர்கள் என்றால், இன்று அதை செய்யுங்கள், நாம் ஜெபிக்கையில் நீங்கள் அப்படியாக செய்வீர்களா? 268. பரலோகப் பிதாவே, உம்முடைய வார்த்தைக்காக நாங்கள் எங்கள் இருதயத்தின் ஆழத்திலிருந்து உமக்கு நாங்கள் நன்றி செலுத்துகிறோம். ஓ, எங்கள் நம்பிக்கையானது இயேசுவின் இரத்தத்தின் மேல் நீதியுடனே சேர்ந்து கட்டப்பட்டுள்ளது என்பதை அறிந்திருப்பதினால் எப்பேற்பட்ட ஒரு ஆறுதலை நாங்கள் கொண்டிருக்கிறோம். எங்களை சுற்றிலும் இருக்கின்ற எல்லாமே, பூமிக்குரிய ஒவ்வொரு நம்பிக்கையும் தவறிப்போய் தோல்வி தந்து சென்று விட்டாலும் கூட, நாங்கள் இயேசுவை கொண்டு இருக்கின்றோம். சுற்றி இருக்கின்ற ஓடுகள் கீழே விழும். சூரியனுக்கு முன்பாக இரவானது சிதறி ஓடுவது போல பூமிக்குரிய காரியங்கள் எல்லாம் சிதறி ஓடும், ஆனால் கர்த்தராகிய இயேசு எங்கள் வாழ்க்கையில் மாறாதவராக இருக்கின்றார். 269. அருமை பிதாவே, இங்கே இன்று காலையில் தாங்கள் மரணத்தை விட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறார்கள் என்று எந்த ஒரு துளி சந்தேகத்திற்கும் இடமில்லாமல் அறியாதிருப்பவர் யாராவது இங்கே இருப்பார்களானால் எந்த நல்ல கிரியையும், எந்த ஒரு சபையும், எந்த ஒன்றாலும் இரட்சிக்க முடியாது, உம்மாலே தான் இரட்சிக்க முடியும், உம்மாலே மாத்திரமே இரட்சிக்க முடியும். இந்த மனிதன் தாமே... பிதாவே, இந்த காலையிலே சரியான கோர்வையில்லாத சொற்களைக் கொண்டு நான் ஜெபிக்கின்றேன், இந்த காலையில் இந்த கட்டடத்தில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் தாமே அதை பெற்றுக் கொள்ளட்டும், அது வரைக்குமாக அவர்கள் தாமே இந்த பீறிட்டு தெறித்து வரும் இரத்த பெருக்கிலே நனைந்து தேவனுடன் ஐக்கியத்துக்குள்ளாக கொண்டு வரப்பட்டு, ஒரே ஆவியினாலே தேவனுடைய ராஜ்யத்தில் இயேசுவுடன் உடன் சுதந்தருமாக இருக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்வார்களாக. யாரோ ஒரு மனிதன் நம்மை உள்ளே தள்ளினார் என்றல்ல, ஆனால் அந்த இரத்த அணுவிற்குள் இருக்கும் ஓர் ஆவி தாமே எங்களை இழுத்தது, அவரிடமாக எங்களை இழுத்தது. அதினாலே நாங்கள் தாமே இரத்தத்தின் மூலமாக வந்துள்ளோம், இப்பொழுது கிறிஸ்துவுக்குள்ளாக ஐக்கியத்துக்குள்ளாக இருக்கின்றோம். 270. பிதாவே, அவர்கள் தாமே அங்கே அதிலே இல்லையென்றால், அவர்கள் ஒரு சபை அங்கத்தினனாக அநேக வருடங்கள் இருந்திருந்தாலும், அதன் மூலமாக அவர்கள் மிகவும் பிரயாசப்பட்டு முயற்சி செய்திருக்கலாம், பிதாவே, அவர்களை தாமே இந்த மணி நேரத்தில் ஏற்று சரியாக அவர்களை உமக்குள்ளாக, உம் ஐக்கியத்துக்குள்ளாக எடுத்துக்கொள்ளும், அதினாலே இந்த ஜீவனானது பூமியிலே இங்கே முடிவுறுகையில், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவாகிய நித்தியஜீவன் எங்களுக்குள்ளாக வாசம் செய்து கொண்டு இருக்கின்றது. அவர் எப்படியாக உயிரோடெழுப்பட்டாரோ அதே விதமாக நாங்களும் கடைசி நாளில் எழுப்பப்படுவோமாக. 271. அங்கே நின்று கொண்டிருக்கின்ற மக்கள் மற்றும் சபை அங்கத்தினர்கள் தாமே, தங்கள் வாழ்நாள் முழுவதுமாக அதைக் குறித்து ஒரு தீர்மானத்தை எடுக்காமல் நிலையற்று இருந்தனர், "ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினா-லும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டான்" என்று நீர் கூறியுள்ள போதிலும், உண்மையான மறுபடியும் பிறத்தல் என்பது என்னவாயிருக்கும் என்பதை அறியாமல் இருந்த அவர்களுக்கு எப்பேற்பட்ட ஒரு ஏமாற்றமாக இருக்கும். அவனால் பிரவேசிக்க முடியாது, பிதாவே, ஏனென்றால் நித்திய ஜீவனுக்கான ஒரே இடம் அதுவே தான். 272. நீங்களும் போய்விட மனதாயிருக்கிறீர்களோ என்று நீர் தாமே அவர்கள் இடம் கேட்ட போது, அந்த அப்போஸ்தலன், "நாங்கள் யாரிடம் செல்வோம்?" என்று கேட்டான். "நித்திய ஜீவன் உம்மிடம் மாத்திரம் உண்டே," என்று கூறினார்கள். 273. தேவனே, இக்காலையில், இந்த கட்டடத்தில் உள்ள ஒவ்வொரு மனிதனும், பெண்ணும், பையனோ அல்லது சிறு பெண்ணோ, அந்த ஐக்கியத்துக்குள்ளாக கொண்டுவரப்பட நான் ஜெபிக்கின்றேன். நான் இந்த எல்லா காரியங்களையும் உம்மிடமாக சமர்ப்பிக்கின்றேன், உம்முடைய குமாரனாகிய கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில். ஆமென். 274. அது சரியே, சகோதரி கெர்டீ. அவ்வேளையில் என்ன? அவ்வேளையில் என்ன? அந்த மகத்தான புத்தகம் திறக்கப்படுகையில் அப்பொழுது என்ன? (அதைக் குறித்து சற்று சிந்தித்து பாருங்கள்) இன்றைக்கு செய்தியை புறக்கணித்தவர் யாவரும் காரணம் கூறும்படி கேட்கப்படுவீர்களே, --- அப்பொழுது, என்ன? அவ்வேளையில் என்ன? அவ்வேளையில் என்ன? அந்த மகத்தான புத்தகம் திறக்கப்படுகையில், அப்பொழுது என்ன? இன்றைக்கு செய்தியை புறக்கணித்தவர் யாவரும், காரணம் கூறும்படி கேட்கப்படுவீர்களே, -- அப்பொழுது என்ன? 275. சகோதரனே, சகோதரியே, நீங்கள் எவ்வளவு காலமாக கிறிஸ்தவத்தை குறித்து பறைசாற்றியிருந்தாலும் சரி, இக்காலையிலே கிறிஸ்துவுடன் அந்த இரத்த அணுவுக்குள்ளாக நீங்கள் உள்ளே இல்லாவிடில், அதை கடந்து சென்று விடவேண்டாம். இன்றே வாருங்கள். அது உங்களுடையது. நீங்கள் பீடத்தண்டை வர வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் செய்ய வேண்டிய ஒரே ஒரு காரியம் அதை ஏற்றுக்கொள்வதே ஆகும். அதை விசுவாசியுங்கள். அப்போது தேவன் பிரதியுத்தரமாக, உங்கள் விசுவாசமானது ஆபிரகாமின் விசுவாசத்தை போல நேரடியான ஒரு விசுவாசமாக இருந்தால், அப்பொழுது தேவன் உங்களை தம்முடைய ராஜ்யத்தில் முத்தரிக்க உங்களுக்கு பரிசுத்த ஆவியை அளிப்பார், அப்பொழுது நீங்கள் உங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்தரிக்கப்படுவீர்கள். "அன்றியும் நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாது இருங்கள்" என்று வேதாகமம் கூறுகின்றது. 276. "சகோ.பிரன்ஹாம், எனக்கும் தான், நான் அங்கே இருப்பேன் என்று தேவனில் நம்பிக்கை வைத்து ஜெபித்துக்கொண்டிருக்கிறேன்" என்று எத்தனை பேர் கூறுகிறீர்கள். உங்கள் கரங்களை நான் காணட்டும். ஓ, கட்டடத்தில் எல்லா இடங்களிலும். "அங்கே இருக்கத்தக்கதாக நான் தேவனை நம்பி இருக்கின்றேன்." தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. நூறு சதவீதம் அல்லது அதற்கும் மேலாக. ஓ, அது அற்புதமானதாக இருக்குமல்லவா. ஓ, என்னே. சற்று சிந்தித்துப்பாருங்கள், யுத்தம் முடிந்த பிறகு, ஆயுதங்கள் எல்லாம் ஒன்று சேர்த்து வைக்கப்பட்ட பிறகு, யுத்தத்தின் புகையானது குறைந்து அமிழ்ந்து போய், சூரியன் மறைந்து கொண்டிருக்கையில், புத்தகங்கள் மூடப்படுகையில், நாம் நியாயத்தீர்ப்பில் நிற்கையில். அவ்வேளையில் என்ன? அவ்வேளையில் என்ன? அந்த மகத்தான புத்தகம் திறக்கப்படுகையில், அப்பொழுது என்ன? இன்றைக்கு செய்தியை புறக்கணித்தவர் யாவரும், காரணம் கூறும்படி கேட்கப்படுவீர்களே, -- அப்பொழுது என்ன? 277. நாம் அவரை ஏற்றுக்கொண்டோம் என்பதைக் குறித்து உங்களுக்கு மகிழ்ச்சி தானே? தேவனே, நான் மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறேன். உங்கள் ஒவ்வொருவரோடும்கூட ஒரு முடிவில்லாத நித்தியத்தை கழிக்கப்போகிறேன் என்பதை அறிகையில் அதைக் குறித்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அது தாமே 278. ஓ, நாம் இப்பொழுது கடந்து கொண்டிருக்கும் இந்த சிறிய முட்செடிகள் நிறைந்ததான இடமானது எவ்வளவு சிறிதான,..? அக்கரையைபார்க்கும் போது இந்த சிறிய மலை எம்மாத்திரம்? ஒன்றுமேயில்லை. நாம் அதை எடுத்துக் கொள்வோமாக. நாம் துரத்தப்படுகின்ற ஊமையான கால்நடைகளை போல இருக்க வேண்டாம். நாம் வீரர்களாக இருக்க வேண்டும். நாம் வெளியே புறப்பட்டு சென்று இயேசுவை அறிந்திராத சக மனிதர் சிலரை கொண்டு வருவோமாக. 279. இக்காலையில் வெளியே சென்று மதுபானம் அருந்தும் இடங்கள், 'பார்'களை பாருங்கள். அவை கூட்ட நெரிச்சல் மிகுந்ததாக ஜனங்கள் அதிகமாக காணப்படுகின்றனர்; களியாட்ட இடங்கள் ஒவ்வொன்றையும் பாருங்கள். அவைகளிலும் ஜன கூட்டம் மிக அதிகமாக காணப்படுகின்றது. சினிமா அரங்குகள் இன்று மதியப் பொழுதில் முழுவதுமாக களியாட்டம் மற்றும் சிற்றின்பங்களை விரும்பும் மக்களால் நிரம்பியிருக்கும், ஆனால் அவர்கள் தேவனை அறியாதிருக்கிறவர்களாக, ஒவ்வொரு நாளும் சபைக்கு செல்லும் மக்களாக இருக்கின்றனர். 280. அதைக் குறித்து நாம் ஏதாவதொன்றை செய்வோமாக. நாம் புறப்பட்டு சென்று மற்றவர்களிடம் கூறுவோமாக. இந்த காரியத்தை நீங்கள் மாத்திரம் அறிந்து கொண்டு அதை ஒரு பொக்கிஷ பெட்டகத்தில் வைத்துக் கொண்டு சுயநலம் கொண்டவர்களாக இருக்க விரும்புகிறீர்களா? இல்லை சகோதரனே. நாம் மக்களிடமாக காரியத்தை உடைத்து அதை வெளிக் கொணருவோமாக, தொடர்ந்து முன் சென்று ஏதாவதொன்றை செய்வோமாக. அவர் கொண்டு இருக்கின்ற மகத்தான காரியங்களை, பாருங்கள் அது தாமே... அவர் தாமே கீழே இறங்கி வந்து, தம்மையே உடைத்து வெளிக் கொணர்ந்து காண்பித்தார், அதினாலே நாமெல்லாரும் வரும்படிக்கு அப்படி செய்தார். நாமும் அப்படி செய்யவேண்டுமல்லாவா, தேவனுடைய ஆவி நம்மில் இருக்கிறதென்றால், அந்த அதே சிந்தை நமக்குள்ளும் இருக்க வேண்டுமல்லவா? யாராவதொருவர் இரட்சிக்கப்படும்படிக்கு நாம் கொண்டு வருவோமாக. நாம் அவர்களிடமாக பேசுவோமாக. அது சரி தானே? 281. இப்பொழுது, இங்கே கட்டடத்தில் யாராவது வியாதிப்பட்டு, நாங்கள் முடிக்கும் முன்னர் ஜெபித்துக் கொள்ள விரும்புகிறீர்களா? யாராவது இருப்பார்கள் ஆனால், உங்கள் கரங்களை உயர்த்துங்கள். இதோ இங்கே உள்ள இந்த சகோதரன். இன்னும் வேறு யாராகிலும் உள்ளனரா? சரி, இதோ இன்னொருவர் இங்கே பின்னால் உள்ளார், என் தாயார். சரி, இன்னும் மக்கள் உள்ளனரா? சரி, அதோ இங்கே பின்பாகத்தில் ஒரு சகோதரன் இருக்கின்றார். சரி. 282. நீங்களெல்லாரும் இப்பொழுது இங்கே வருவீர்களா, நாங்கள் மூப்பர்களை, அவர்கள் விரும்பினால், இங்கே முன்னே அழைக்கையில், நீங்கள் இங்கே வாருங்கள். நாங்கள் அவர்களுக்காக ஜெபத்தை ஏறெடுக்கப்போகிறோம். 283. நினைவில் கொள்ளுங்கள், இதிலே சரீரத்திற்கும் கூட இரட்சிப்பு உண்டு, அது தெய்வீக சுகமளித்தல். ஓ, தேவன் தம்முடைய பிள்ளைகளை சுகமாக்க எவ்வளவாக விரும்புகிறார் தெரியுமா. 284. ஆம் அவர் விரும்புகிறார். மூப்பரே, நீங்கள் எண்ணையை வைத்து இருக்கிறீர்களா. நீங்கள் இங்கே பீடத்திற்கு முன்பாக வாருங்கள். சகோதரன் நெவில், உங்களுக்கு நன்றி. 285. நாங்கள் எல்லாரும் இங்கே தாழ்மையுடனும் அமைதியுடனும் சற்று இப்பொழுது நிற்கையில், சகோதரி கொ்டி, நீங்கள் மகத்தான வைத்தியர் என்னும் பாடலை இசைப்பீர்களா. "மகத்தான வைத்தியர் இப்பொழுது அருகில் இருக்கின்றார், மனதுருக்கமுள்ள இயேசு" என்னும் பாடல். 286. இப்பொழுது, என் சகோதரரே, மற்றும் என் தாயார், நீங்கள் எல்லாரும் விசுவாசத்தினாலே, கர்த்தராகிய இயேசுவுடனே இந்த இரத்த அணுவுக்கு உள்ளாக நேராக உள்ளே செல்லுங்கள், அதிலே தானே அந்த மீட்பின் ஆசீர்வாதங்கள் எல்லாமே உங்களுடையதாக இருக்கின்றது. நீங்கள் ஒவ்வொருவரும் கிறிஸ்தவர்கள் என்று நான் யூகிக்கின்றேன். ஆகவே நீங்கள் கிறிஸ்தவர்களென்றால், கிறிஸ்து எந்தெந்த காரியத்திற்கெல்லாம் மரித்தாரோ அந்த காரியங்கள் எல்லாவற்றிற்குமே, அதை பெறுவதற்கு உங்களுக்கு உரிமை உள்ளது, அடிப்படையான, சட்டப்படியான உரிமை உங்களுக்கு உள்ளது. அது உங்கள் சுதந்தரம் ஆகும். நீங்கள் அதை சொந்தமாக கொண்டு இருக்கிறீர்கள். அது உங்களுடையதாகும். 287. இப்பொழுது, நீங்கள் செய்யக்கூடிய ஒரே காரியம் என்னவென்றால், ஆபிரகாமைப் போல நீங்கள் செய்ய வேண்டியவர்களாக இருக்கின்றீர்கள். அவன் ஒரு போராட்டத்தை பொறுமையுடனே சகித்த பிறகு, அவன் வாக்குத்தத்தத்தை பெற்றுக் கொண்டான். நீங்கள் அதை சுலபமாக பெற்றுக் கொள்ள சாத்தான் விடமாட்டான். நீங்கள் விசுவாசத்தைக் கொண்டவர்களாக இருக்க வேண்டும். நீங்கள் அதை விசுவாசிக்க வேண்டும். நீங்கள் பொறுமை உடனே சகிக்க வேண்டும். 288. தேவன் அவைகளை கூறி... "அந்த தேசம் உங்களுடையது" என்று மோசே கூறியிருந்தான், ஆனாலும் அது பெலிஸ்தியர்களாலும் மற்றும் எல்லாவற்- றாலும் முழுவதுமாக மூடப்பட்டிருந்தது. ஆனாலும் அவர், "அது உங்கள் உடையது. நான் உங்களுக்கு அதை அளிக்கின்றேன். இப்பொழுது நீங்கள் சென்று அதை எடுத்துக்கொள்ளுங்கள்" என்று கூறினார். 289. தெய்வீக சுகமளித்தலானது உங்கள் ஒவ்வொருவருக்குமென்று அளிக்கப் பட்டுள்ளது. அது உங்களுடையதாக இருக்கின்றது. இப்பொழுது, நீங்கள் சென்று, அதை எடுத்துக் கொள்ளலாம் அல்லவா? இக்காலையிலே சென்று அதை எடுத்துக் கொள்ளுங்கள். முன் செல்லுங்கள். அது உங்களுடையது. ஒன்றும் உங்களை சேதப்படுத்த முடியாது; நீங்கள் கிறிஸ்துவுக்குள் இருக்கிறீர்கள். 290. எங்கள் பரம பிதாவே, உம்முடைய ஊழியக்காரனாக, என் பக்கத்தில் நின்றிருக்கின்ற உம்முடைய மூப்பராக, உம்முடைய வார்த்தையின்படியே நாங்கள் வியாதியஸ்தருக்கு எண்ணெயை பூசப்போகிறோம். அவன் சபையின் மூப்பர்களை வரவழைப்பானால்; அவர்கள் அவர்களுக்கு எண்ணெய் பூசி, ஜெபம் பண்ணக்கடவர்கள், விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்" என்று நீர் கூறியிருக்கின்றீர். மறுமடியுமாக அது எழுதப்பட்டு உள்ளது, இயேசு கிறிஸ்துவின் புனிதமான உதடுகளிலிருந்து வெளி வந்த கடைசி வார்த்தைகள், "வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்" என்றார். அப்போஸ்தலர்கள் போதித்தததையும் மற்றும் இயேசுகிறிஸ்து போதித்தததையும் உறுதிப் படுத்தும் விதமாக, இருவருமே அதே விதமாகத் தான் கூறியுள்ளார்கள், அதன்படியே நாங்கள் வியாதியஸ்தர் மேல் எண்ணெய் பூசி அவர்கள் மேல் கரங்களை வைக்கப் போகிறோம், நீர் அவர்களை சுகமாக்குவீர் என்று விசுவாசித்து இதைச் செய்கிறோம். 291. இங்கே மூன்று மனிதரும் என் சொந்த தாயாரும் நின்று கொண்டு இருக்கின்றார்கள். மேலும், தேவனே, சாவுக்கேதுவான இந்த வாழ்க்கைகள் தாமே ஒரு நாளிலே உடைந்து போகும் என்றும் ஆனால் நீத்திய ஜீவன் என்றென்றைக்கும் நிலைத்திருக்கும் என்றும் அவர்கள் அறிந்தவர்களாக, இந்த இரத்த அணுவின் மூலமாக கர்த்தராகிய இயேசுவின் ஐக்கியத்திற்குள்ளாக இழுக்கப்பட்டது போல, உம்முடைய பரிசுத்தாவி தாமே இப்பொழுது அவர்கள் உடைய இருதயங்களுக்குள்ளாக அசைந்து செல்லட்டும். இந்த ஒன்றானது முடிவுற்ற பிறகு இன்னொரு சரீரமானது அவர்களுக்காக காத்திருக்கின்றது. 292. ஆனால், தேவனே, இவர்கள் சாட்சி கொடுக்க விரும்புகின்றனர். அவர்கள் சாவுக்கேதுவானவர்கள். இந்த ஜீவியமானது முடிந்த பிறகு மறுபடியுமாக அவர்கள் சாவுக்கேதுவானவர்களாக இருக்க மாட்டார்கள், இந்த ஒரு முறை மாத்திரமே, ஆகவே அது என்றென்றுமாக காரியத்தை முற்றுபெறச் செய்கின்றது. அதிலிருந்து அவர்கள் அழிவில்லாதவர்களாக அழியாமை நிலையில் இருப்பார்கள். ஆகவே அவர்கள் சாவுக்கேதுவானவர்களாக இருக்கையில், தங்கள் அழிவுள்ள சரீரங்களுக்காக காரியங்களை கேட்கும் தருணத்தை உடையவர்களாக இருக்கின்றார்கள், தேவனே, அவர்களுடைய சரீரங்களை சுகப்படுத்தும், அதினாலே அவர்கள் தாமே புறப்பட்டு சென்று வார்த்தையை கூறட்டும், அதைக் குறித்து மக்களிடம் கூறுவதற்கு ஏதுவாக இருக்கும். கர்த்தாவே, இதை அருளும். 293. இவைகளின் அடிப்படையில், நான் உம்முடைய ஊழியக்காரனாக, அல்லது ஒரு ஆசாரியனாக, அல்லது ஒரு ஊழியம் செய்பவனாக இந்த விண்ணப்பத்தை உம்மிடம் கொண்டு வருகிறேன். அதை நான் உம்மிடமாக கொண்டு வருகிறேன், அதினாலே அவர்கள் தாமே உம்முடைய மகிமைக்கு என்று ஜீவித்து சுகமடைவார்களாக. கர்த்தராகிய இயேசுவின் இரத்தத்தின் மூலம் இந்த விண்ணப்பத்தை நான் கொண்டு வருகிறேன். நீர் என்ன செய்யச் சொன்னீரோ அதைச் செய்யும்படியாக இப்பொழுது நாங்கள் செய்ய விழைகின்றோம். இதைச் செய்வதின் மூலமாக ஒவ்வொரு அவிசுவாச ஆவிகளுக்கு நாங்கள் சவாலிடுகிறோம், அவர்களிடமிருந்து அதை அப்புறப் படுத்துகிறோம், இயேசு கிறிஸ்துவின் கிரியைகள் தாமே அவர்கள் சரீரத்தில் செய்யப்படுவதாக, 294. பிதாவே, எங்கள் சகோதரனுக்கு, உம்முடைய குமாரனாகிய கர்த்தராகிய இயேசுவின் நாமத்திலே நாங்கள் இந்த எண்ணெயை பூசி, பிசாசுக்கு சவால் இடுகிறோம், நீ இவரை விட்டு வெளியேறுவாயாக. இவருடைய சரீரத்தின் வியாதி தாமே விட்டுச் செல்வதாக, இவர் தாமே ஆரோக்கியத்துடன் இருந்து உமக்கு சேவை செய்ய மகிழ்ச்சியுள்ளவராக இருப்பாராக. இதை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கேட்கின்றோம். ஆமென். 295. என் தாயாரின் தலையின் மீது எங்கள் சகோதரன் இந்த அபிஷேகத்தின் எண்ணெயை வைக்கும் போ.. சர்வவல்லமையுள்ள தேவனே, வானங்களையும் பூமியையும் சிருஷ்டித்தவரே, நித்திய ஜீவனின் காரணரே, ஒவ்வொரு நல்ல ஈவையும் தருபவரே, ஒரு ஸ்திரீயினால் பிறந்து, பாவ மாம்சத்தின்படியே உருவாக்கப்பட்டு, அதினாலே மரணத்தின் கூரை எடுக்கும்படியாக அப்படிச் செய்யப்பட்டு, எங்கள் சரீரங்களின் வியாதிகளை அவருடைய சொந்த சரீரத்தில் சுமக்கும்படியாக உம்முடைய குமாரனாகிய கிறிஸ்து இயேசுவை உயிரோடு எழுப்பினவரே, இக்காலையில் நாங்கள் இதைச் செய்கையில், அதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். அது என் தாயாருக்காகும். நாங்கள் உம்முடைய வார்த்தைக்கு கீழ்ப்படிகிறவர்களாக, நீர் தாமே இப்பொழுது அவர்களை சுகமாக்குவீர் என்று நாங்கள் இப்பொழுது விசுவாசிக்கிறோம். உம்முடைய குமாரர்களாக, வியாதியின் ஆவியை என் தாயாரிடமிருந்து வெளியெறும்படியாக நாங்கள் கேட்கின்றோம், அவர்கள் தாமே விடுதலை அடைவார்களாக, தேவனுடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில். ஆமென்.